உடல்நலம்

குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால்

நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு பல்வேறு விதமான ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை நாம் எடுத்துக் கொள்கிறோம். நல்ல ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை நாம் எடுத்துக் கொண்டு வரும் பொழுது அதில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் நம்முடைய உடலுக்கு தேவையான நுண்ணூட்டச் சத்துக்களின் தேவையை ஈடு செய்கிறது. இதனால் நம்முடைய உடல் நோய் நொடிகள் இன்றி ஆரோக்கியமாக இருக்கும்.

எப்பொழுதும் நல்ல ஆரோக்கியமான உணவுகளை எடுத்து சரியான உடற்பயிற்சிகளை செய்து கொண்டு வருபவர்களுக்கு பலவித நோய்கள் வராமல் இருக்கும். அப்படி நம்முடைய உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் கொடுக்கக் கூடிய அற்புதமான உணவு வகைகளில் ஒன்று கருப்பட்டி. இந்த கருப்பட்டியின் சுவை பலருக்கும் பிடித்த ஒன்று. கருப்பட்டி பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை நம்முடைய உடலுக்கு கொடுக்கிறது.

குறிப்பாக இன்றைக்கு இனிப்பு பிடிக்கக்கூடிய பலரும் வெள்ளை சர்க்கரையை அதிகம் பயன்படுத்துகிறார்கள். அதனால் பல்வேறு நோய்கள் அவர்களுடைய உடலில் வந்து ஒட்டிக்கொள்கிறது. மிக முக்கியமாக நீரிழிவு நோய். இப்படிப்பட்ட நோய் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க கருப்பட்டியை நாம் அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாம். கலப்படமில்லாத சர்க்கரை சேர்க்காத கருப்பட்டி நம்முடைய உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்களை அள்ளி கொடுக்கிறது.

இந்த கருப்பட்டி பலவிதமான நோய்களையும் குணப்படுத்துகிறது. பலரும் நாட்பட்ட வறட்டு இருமலால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இப்படி நாள்பட்ட வறட்டு இருமலால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு இந்த கருப்பட்டியை கொண்டு எளிய முறையில் அவர்களுடைய வறட்டு இருமலைப் போக்க முடியும். தொடர்ந்து நாள்பட்ட இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல் விரைவில் குணமாகும்.

வறட்டு இருமல் மட்டுமல்ல நீண்ட நாள்களாக இருக்கக்கூடிய சளி தொல்லையையும் இது போக்கக்கூடியது. பனங்கருப்பட்டி யில் அதிக அளவு இரும்புச்சத்து மற்றும் கால்சியம் சத்து உள்ளது. இதனால் உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்ட வைட்டமின் பி மற்றும் அமினோ அமிலங்கள் கருப்பட்டியில் காணப்படுகிறது. இளம் பெண்களுக்கு கருப்பட்டியையும் உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால் அவர்களுடைய கருப்பை ஆரோக்கியமாக இருக்கும்.

Related posts

Leave a Comment