November 27, 2022
செல்வம்

கொடுத்த பணம் திரும்பி வர பரிகாரம்

பணம் இல்லாத வாழ்க்கை பிணத்திற்கு சமம் என சொல்வார்கள். அப்படி இன்றைக்கு பணம் மட்டுமே எல்லோரிடமும் பிரதானமாக உள்ளது. பணத்தை சம்பாதிக்க மக்கள் சொந்த இடங்களை விட்டு நகரங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள்.

இப்படி சம்பாதிக்கும் பணத்தை நாம் நல்ல முறையில் சேமித்தால் மட்டுமே நம்மால் பணத்தை வைத்து நல்ல படியாக சந்தோசமாக பிற்காலங்களில் இருக்க முடியும். நம் அனைவருக்கும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் பணம் தேவைப்பட்டிருக்கும்.

இப்படி பணம் தேவைப்படும் சமயங்களில் நம்முடைய நண்பர்கள், தெரிந்தவர்கள், குடும்ப உறுப்பினர்களுக்கு பணத்தை கடனாக கொடுப்போம். இப்படி நாம் கடன் கொடுத்த பிறகு பல நேரங்களில் நம்மால் பணத்தை திரும்ப வாங்க இயலாது.

பணத்தை கடனாக பெற்றவர்கள் பணத்தை திரும்ப தர மாட்டார்கள். இப்படி உங்கள் பணத்தை வாங்கியவர் வறுமையில் இருந்தால் அவர்களிடம் உடனே பணம் கேட்க கூடாது. ஆனால் அவர்களிடம் பணம் இருந்து உங்களுக்கு தராமல் இழுத்தடித்தால் நீங்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

உப்பு,வெந்தயம், கருப்பு எள் இவைகளை சம அளவு எடுத்து சிறிது இடித்து அதை ஒரு சுத்தமான வெள்ளை துணியில் கட்டி உங்களுடைய வீட்டின் தென்மேற்கு மூலையில் வைத்துவிட்டால் உங்களுக்கு வரவேண்டிய பணம் விரைவில் வந்து சேரும்.

இந்த முடிப்பை நீங்கள் வைக்கும் பொழுது யார் உங்களுக்கு பணம் தர வேண்டுமோ அவர்களை நினைத்து வைக்க வேண்டும்.

Related posts

Leave a Comment