September 28, 2022
உடல்நலம்

பப்பாளி இலைச் சாறு தொடர்ந்து குடித்து வந்தால் உடலில் இவ்வளவு நடக்குமா

பப்பாளி பழம் பலராலும் மிகவும் விரும்பப்படும் ஒரு பழம். பப்பாளி பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டிருக்கிறது. நல்ல செரிமானத்தை ஊக்குவிக்கிறது. பப்பாளி மரத்தின் எல்லா பகுதிகளும் மருத்துவ குணம் கொண்டது. அதிலும் பப்பாளி இலை அதிக மருத்துவ குணம் கொண்டது. பப்பாளி பழத்தைப் போலவே, இலையிலும் பப்பேன் மற்றும் சைமோபபைன் போன்ற நொதிகள் நிறைந்துள்ளன. இது செரிமானத்திற்கு உதவுகிறது. உடலில் இருக்கக்கூடிய வீக்கங்களை குறைக்கிறது. பப்பாளி இலைகளில் அதிக அளவு வைட்டமின்கள் ஏ, சி, ஈ, கே மற்றும் பி மற்றும் கால்சியம், மெக்னீசியம், சோடியம் மற்றும் இரும்புச்சத்து போன்ற தாதுக்கள் உள்ளன.

டெங்கு காய்ச்சலுக்கு நல்ல நிவாரணத்தை கொடுக்கிறது பப்பாளி இலைச்சாறு. டெங்கு காய்ச்சலுக்கு பலராலும் பரிந்துரைக்கப்படும் பொதுவான ஒரு தீர்வு பப்பாளி இலைச்சாறு. டெங்கு காய்ச்சல் ஏடிஸ் கொசுக்கள் நம்மை கடிக்கும் பொழுது நமது ரத்தத்தில் பரவுகிறது. இது இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை கடுமையாக குறைக்கிறது. இந்த நேரத்தில் நாம் பப்பாளி இலைச் சாற்றை அருந்தும் பொழுது பிளேட்லெட்டுகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. மலேரியா எதிர்ப்பு பண்புகள் பப்பாளி இலைகளில் அதிக அளவு உள்ளது. பப்பாளி இலையில் காணப்படக்கூடிய அசிட்டோஜெனின் என்ற கலவை மலேரியா மற்றும் டெங்கு போன்ற ஆபத்தான நோய்களை தடுக்க உதவுகிறது.
கல்லீரலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுப்பது பப்பாளிப்பழம். அதுபோல பப்பாளி இலைச்சாறு கல்லீரலை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதன் மூலம் நீண்ட நாட்களாக இருக்கும் கல்லீரல் நோய்கள், மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் ஈரல் அழற்சி போன்ற நோய்கள் குணமாகிறது.

நல்ல செரிமானத்திற்கு உதவுகிறது பப்பாளி இலைச்சாறு. பப்பாளியில் பாப்பைன் மற்றும் சைமோன்பபைன் என்சைம்கள் உள்ளன. இந்த இரண்டு என்சைம்களும் செரிமானத்திற்கு உதவிபுரிந்து, மலச்சிக்கலைத் தடுக்கவும், பெருங்குடலைச் சுத்தம் செய்யவும் உதவுகின்றன. வயிற்றுப் புண்களைக் குணப்படுத்துவதற்கும் தடுப்பதற்கும் பப்பெய்ன் உதவியாக இருக்கிறது. பப்பாளி இலைகளில் புரோட்டீஸ் மற்றும் அமிலேஸ் ஆகியவை நிறைந்துள்ளன. இந்த நொதிகள் செரிமானத்திற்கு உதவும் புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் தாதுக்களை உடைக்க உதவுகின்றன. இதன் அழர்ச்சி எதிர்ப்பு பண்புகள் வயிறு மற்றும் பெருங்குடலில் வீக்கத்தை குறைக்கிறது.

ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது பப்பாளி இலைச்சாறு. பப்பாளி இலைச்சாறு நீரிழிவு நோயாளிகளின் இன்சுலின் உற்பத்தியை ஒழுங்குபடுத்துகிறது. இது ரத்த சர்க்கரை அளவை சரியாக வைத்திருக்க உதவுகிறது. இதில் இருக்கக்கூடிய ஆன்டி-ஆக்சிடன்ட்கள் சிறுநீரக பாதிப்பு மற்றும் கல்லீரலில் ஏற்படக்கூடிய கொழுப்பு போன்ற நீரிழிவு நோய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது.

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய வலியை குணப்படுத்தக்கூடிய சக்தி கொண்டது பப்பாளி இலைச்சாறு. பலரும் மாதவிடாய் காலத்தில் அதிக அளவு வலி மற்றும் அடி வயிற்று வலியால் பாதிக்கப்படுவார்கள். இந்த நேரத்தில் பப்பாளி இலைச் சாறை அருந்தும் பொழுது அது மாதவிடாய் ஓட்டத்தை எளிதாக்கவும், வலியைக் குறைக்கவும் உதவுகிறது. பப்பாளி இலைச் சாற்றில் உள்ள சக்தி வாய்ந்த குணப்படுத்தக்கூடிய பண்புகள் ஹார்மோன்களை சமநிலைப்படுத்துகிறது. மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்துகிறது.

தோல் பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது பப்பாளி இலைச்சாறு. பப்பாளி இலைச் சாற்றில் இருக்கக்கூடிய வைட்டமின் சி மற்றும் ஏ சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஆரோக்கியமான பொலிவான சருமத்தை கொடுக்கிறது. பப்பாளி இலைச் சாற்றில் ஃப்ரீ ரேடிக்கல்களை அதிகம் இருக்கிறது. இது சருமத்தில் அதிக அளவில் வளரக்கூடிய நுண்ணுயிரிகளை கட்டுப்படுத்துகிறது. சருமத்தில் இருக்கக்கூடிய நச்சுப்பொருள்களை சுத்தப்படுத்தி வெளியேற்றுகிறது. பருக்கள், தழும்புகள், முகப்பரு போன்ற தோல் பிரச்சனைகளுக்கு எதிராக போராடி இந்த பிரச்சனைகளை நிவர்த்தி செய்கிறது.

பப்பாளி இலைச்சாறு உங்களுடைய முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. விரைவில் வழுக்கை விழுவதை தடுக்கிறது. முடி மெலிந்து உடைந்து போவதை தடுக்கிறது. பொடுகை போக்க கூடிய ஷாம்புகளில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய மூலப்பொருள் பப்பாளி இலைச்சாறு. இதில் கார்பைன் கலவை உள்ளது. இந்த ஆல்கலாய்டு கூறுகள் உங்களுடைய தலையில் இருக்கக்கூடிய அழுக்கு மற்றும் எண்ணெயை அகற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது இயற்கையான கண்டிஷனராகவும் செயல்படுவதோடு உங்களுடைய தலைமுடிக்கு நல்ல பளபளப்பையும் கொடுக்கும்.

புற்று நோய் அபாயத்தை குறைக்கிறது பப்பாளி இலைச்சாறு. பப்பாளி இலையில் இருந்து எடுக்கப்படும் சாறுகளில் இருக்கும் அசிட்டோஜெனின் கலவை புற்றுநோய் எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. பப்பாளி இலையில் உள்ள நொதிகள் கல்லீரல் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், கணைய புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோயை எதிர்த்துப் போராடும். பப்பாளி இலையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கத்தை குறைக்க உதவியாக இருக்கும்.

Related posts

Leave a Comment