September 28, 2022
உடல்நலம்

அன்னாசி பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால்

அன்னாசிப்பழம் நல்ல சுவையான ஆரோக்கியம் நிறைந்த ஒரு பழம். இதில் ஊட்டச்சத்துக்கள் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் காணப்படுகிறது. அன்னாசி பழங்களில் கலோரிகள் குறைவாக உள்ளது. ஆனால் அதிக ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளது. ஒரு கப் அதாவது 165 கிராம் அன்னாசி பழத்தில் 83 கலோரிகள், 1.7 கிராம் கொழுப்பு, ஒரு கிராம் புரதம், 21.6 கிராம் கார்போஹைட்ரேட், 2.3 கிராம் நார்ச்சத்து, வைட்டமின் சி, மாங்கனீஸ், வைட்டமின் பி6, தாமிரம், தியாமின், ஃபோலேட், பொட்டாசியம், மெக்னீசியம், நியாசின், பாந்தோத்தேனிக் அமிலம், ரிபோஃப்ளேவின், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், துத்தநாகம், கால்சியம், வைட்டமின் ஏ, வைட்டமின் கே ஆகியவை உள்ளது.

இதிலுள்ள வைட்டமின் சி நம்முடைய நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் உடலில் இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இதில் உள்ள மாங்கனீஸ் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளை கொடுக்கிறது. இது வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நம்முடைய உடலில் ஆக்சிஜனேற்றத்தைத் தடுக்க உதவுகிறது. இது புற்றுநோய் மற்றும் பல நாள்பட்ட நோய்களைத் தடுக்கும் குணம் கொண்டது. அன்னாசி பழத்தில் தாமிரம், தியாமின், வைட்டமின் பி6 போன்ற நுண்ணூட்டச் சத்துக்கள் உள்ளது. இது ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்திற்கு முக்கியமானது.

அன்னாசிப்பழத்தில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஃபீனாலிக் கலவைகள் எனப்படும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இது நம்முடைய இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது. சளி மற்றும் இருமலை குணப்படுத்த உதவுகிறது அன்னாசிப்பழம். மிகக் கடுமையான சளியால் பாதிக்கப்படுபவர்கள் அன்னாசிப்பழத்தை சாப்பிட்டு வரும்போது அவர்களுடைய சளி பிரச்சனை விரைவில் குணமாகும். அன்னாசிப் பழத்தில் ப்ரோமெலைன் காணப்படுகிறது. இது அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. மேலும் இது தொற்று நோய்களை எதிர்த்துப் போராடும். உடலில் சளியை ஏற்படுத்தும் பாக்டீரியாவை கொல்லும்.

தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது இருமல் மற்றும் சளி வராமல் தடுக்கலாம். அன்னாசிப்பழம் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. அன்னாசிப் பழத்தில் மாங்கனீசு அதிகம் காணப்படுகிறது. இது உங்களுடைய எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. இது நம்முடைய உடலை பராமரிக்கவும் நம்முடைய எலும்புகளை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. தொடர்ந்து அன்னாசிப்பழத்தை சாப்பிட்டு வந்தால் உங்களுடைய ஈறுகள் வலுப்படும். வாய் பராமரிப்பையும் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது. நம்முடைய பற்கள் மற்றும் எலும்புகள் கால்சியத்தால் ஆனது.

இந்த கால்சியம் அன்னாசி பழத்தில் அதிகம் உள்ளது. மேலும் இதில் மெக்னீசியம் உள்ளது. இது எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்த உதவுகிறது. தொடர்ந்து அன்னாசிப்பழத்தை சாப்பிட்டு வருபவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைவாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. இது நம்முடைய செல்களின் சேதத்தை குறைத்து இளமையாக வைத்திருக்க உதவுகிறது. அன்னாசிப் பழம் நல்ல செரிமானத்திற்கு உதவுகிறது. அதிக அளவு எண்ணெய் வகை உணவுகளை சாப்பிடும் பொழுது அஜீரண பிரச்சனை ஏற்படும். இந்த நேரத்தில் அன்னாசிப் பழச்சாறு அல்லது அன்னாசியை சாப்பிட்டு வரும்பொழுது அஜீரண பிரச்சனை குறையும்.

மேலும் வயிற்றுவலி பிரச்சனையும் நீங்கும். அன்னாசிப்பழத்தில் ப்ரோமைலைன், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி ஆகியவை நிறைந்துள்ளன, இது நல்ல செரிமானத்திற்கு உதவுகிறது. அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது அது நம்முடைய கண்களுக்கு நல்லது. அன்னாசி பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளது. இது நல்ல கண் பார்வைக்கு உதவுகிறது. கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. கீல்வாத பிரச்சனையை குறைக்கிறது அன்னாசிப்பழம். கீல் வாதம் என்பது மூட்டுகளில் ஏற்படக் கூடிய கடுமையான வலி. இது வீக்கத்தின் காரணமாக ஏற்படுகிறது.

அன்னாசி பழத்தில் ப்ரோமைலைன் உள்ளது. இது மிகப்பெரிய அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. தொடர்ந்து அன்னாசிப்பழத்தை சாப்பிட்டு வரும் பொழுது அது மூட்டு வலியை குறைத்து தொடர்ந்து மூட்டுவலி வராமல் பாதுகாக்கும். உயர் ரத்த அழுத்தத்தை தடுக்கிறது அன்னாசிப்பழம். நீங்கள் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் தொடர்ந்து அன்னாசிப்பழத்தை சாப்பிட்டு வாருங்கள்.. அது உங்களுடைய உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். இதற்கு காரணம் இந்த பழத்தில் இருக்கக்கூடிய அதிக அளவு பொட்டாசியம் மற்றும் குறைந்த அளவு சோடியம்.

தொடர்ந்து அன்னாசிப்பழத்தை சாப்பிட்டு வரும் பொழுது உங்களுடைய உயர் இரத்த அளவு குறையும். ரத்த உறைவு அபாயத்தை குறைக்கிறது அன்னாசிப்பழம். அன்னாசிப்பழத்தில் இருக்கக்கூடிய முக்கிய பொருளான ப்ரோமைலைன் இரத்தக் கட்டிகளின் அபாயத்தைக் குறைக்கக்கூடியது. தொடர்ந்து இந்த பழத்தை நீங்கள் சாப்பிட்டு வரும் பொழுது இரத்த உறைவு அபாயம் குறையும். அன்னாசி பழத்தில் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் காணப்படுகிறது. இதில் காணப்படக்கூடிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உங்களுடைய உடலில் ஏற்படும் நோய்களை தடுக்கும் திறன் கொண்டது.

வயதாகும்போது உடல் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகிறது. மேலும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்துகிறது. தொடர்ந்து அன்னாசிப்பழத்தை சாப்பிட்டு வரும்பொழுது அதில் இருக்கக்கூடிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் பல நோய்களில் இருந்து உங்களை பாதுகாக்கும். அன்னாசிப்பழம் குமட்டலை தடுக்கிறது. ஒரு சிலருக்கு காலையில் எழுந்தவுடன் குமட்டல் பிரச்சனை இருக்கும். இப்படிப்பட்டவர்கள் தொடர்ந்து அன்னாசிப்பழத்தை சாப்பிட்டு வரும் பொழுது அவர்களுக்கு குமட்டல் பிரச்சனை நீங்கும்.

அன்னாசிப்பழம் இயற்கையாக நம்முடைய உடலுக்கு ஆற்றலைத் தரக்கூடியது. இதற்கு காரணம் அன்னாசிப்பழத்தில் இருக்கக்கூடிய வாலின் மற்றும் லியூசின். இது நம்முடைய உடலில் உள்ள தசை திசுக்களின் வளர்ச்சியை அதிகரிக்கிறது. மேலும் தசை திசுக்கள் சேதமடையாமல் பாதுகாக்கவும் உதவுகிறது. தொடர்ந்து அன்னாசிப்பழத்தை நீங்கள் சாப்பிட்டு வரும் பொழுது அது உங்களுடைய உடலை நல்ல ஆரோக்கியமாக புத்துணர்ச்சியாக வைத்திருக்கும். அன்னாசிப்பழம் மன அழுத்தத்தைக் குறைக்கிறது. அன்னாசி பழத்தில் செரடோனின் காணப்படுகிறது. இது உங்களுடைய ஹார்மோன்களையும், நரம்புகளையும் ரிலாக்ஸாக வைத்திருக்க உதவுகிறது.

இயற்கையாக உங்களுடைய மன அழுத்தத்தை குறைக்கிறது. மன அழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் தொடர்ந்து அன்னாசிப்பழத்தை சாப்பிட்டு வாருங்கள். இது உங்களுடைய மன அழுத்தத்தை குறைத்து உங்களை எப்பொழுதும் புத்துணர்ச்சியாக வைத்திருக்கும். அன்னாசிப்பழம் நம்முடைய சருமத்தை பளபளக்க வைக்கும். நம்முடைய முடி மற்றும் சருமத்தை ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகிறது. உங்களுடைய சருமத்தில் முகப்பரு, தோல் வெடிப்பு, தோல் சேதங்களால் பாதிக்கப்பட்டிருந்தால் தொடர்ந்து அன்னாசிப்பழத்தை சாப்பிட்டு வந்தாலே போதும்.

உங்களுடைய சருமம் இப்படிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து மாறி ஆரோக்கியமாக தொடங்கும். தொடர்ந்து அன்னாசிப்பழத்தை சாப்பிட்டு வரும் பொழுது உங்களுடைய வயதானது போன்ற தோற்றத்தை குறைக்க உதவும். வயதாகும் பொழுது நம்முடைய தோல் அதனுடைய பொலிவை இழக்க தொடங்குகிறது. மேலும் தோலின் சுருக்கங்கள் அதிகரிக்க தொடங்கும். நீங்கள் தொடர்ந்து அன்னாசிப்பழத்தை சாப்பிட்டு வரும்பொழுது இது உங்களுடைய தோலில் உள்ள உயிரணுக்கள் இறப்பதை தாமதப்படுத்தும். அதனால் விரைவில் வயதானது போன்ற தோற்றத்தை பெறுபவர்கள் தொடர்ந்து அன்னாசிப்பழத்தை சாப்பிட்டு வரும்பொழுது அது அவர்களுடைய சருமத்தை மிருதுவாக்கி இளமையாக காண்பிக்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது அது நம்முடைய உடலில் பருக்கள் வராமல் தடுக்கிறது. இதற்கு காரணம் இதில் இருக்கக்கூடிய செல் இறப்பை தாமதப்படுத்த முக்கிய பொருளான ஆல்ஃபா ஹைட்ராக்ஸி அமிலம்.

Related posts

Leave a Comment