November 30, 2022
செல்வம்

அதிர்ஷ்டத்தை அள்ளித்தர காமதேனு சிலையை வீட்டின் இந்த பாகத்தில் வையுங்கள்

வாஸ்து சாஸ்திர நம்பிக்கைகளின்படி காமதேனு சிலையை உங்களுடைய வீட்டில் வைப்பது நல்ல மாற்றத்தை கொடுக்கக்கூடியது. இது நல்ல அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும், சந்தோஷமான வாழ்க்கையையும் உங்களுக்கு கொடுக்கும்.

கூடவே உங்களுடைய மனதில் இருக்கக்கூடிய ஆசைகளை எல்லாம் நிறைவேற்றி, உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய எல்லா நோய்களையும் விரட்டும் எனவும் நம்பப்படுகிறது. சுரபி, கமதுகா, கமது, சவாலா இப்படிப் பல பெயர்களால் அழைக்கப்படும் காமதேனு சிலையை உங்களுடைய வீட்டில் வைத்திருப்பதால் உடல்நலக்குறைவு பிரச்சனைகள் சரியாகும்.

அதிக அளவிலான மன அழுத்தங்கள் குறையும். வீட்டில் பணவரவு அதிகரிக்கும். காரணம் புராணங்களின்படி காமதேனு அற்புத சக்திகள் கொண்ட ஒரு சிற்பம். செல்வத்தின் தேவியான லட்சுமியின் அனைத்து பண்புகளையும் ஒருங்கிணைக்கும் சக்தியாக காமதேனு பார்க்கப்படுகிறது.

வாஸ்து சாஸ்திரத்தின் படி காமதேனு பசு மற்றும் கன்று சிலையை உங்களுடைய வீட்டில் வைக்க சிறந்த இடம் வடகிழக்குப் பகுதி. வடகிழக்கு பகுதியில் வைக்க முடியாதவர்கள் காமதேனு சிலையை உங்களுடைய வீட்டில் வடக்கு அல்லது கிழக்கு பகுதியில் வைக்கலாம்.

அதுபோல உங்கள் வீட்டின் வாசலில் காமதேனு சிலையை வைக்கலாம். இது உங்கள் வீட்டில் செல்வம் மற்றும் செழிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. காமதேனு சிலையை நீங்கள் உங்களுடைய வீட்டில் வைக்கும் பொழுது வெள்ளியால் ஆன காமதேனு சிலையை வைப்பது மிகவும் சிறந்தது.

குறிப்பாக உங்கள் வீட்டு பூஜை அறையில் ஒரு சிலையை வைப்பதற்கு வெள்ளியால் செய்யப்பட்ட காமதேனு சிலையே சிறந்தது. அதிகப் பணம் கொடுத்து வெள்ளி காமதேனு சிலையை வாங்க முடியாதவர்கள், பித்தளை அல்லது செம்பால் செய்யப்பட்ட விலை குறைந்த காமதேனு சிலையையும் உங்களுடைய வீட்டில் வாங்கி வைக்கலாம்.

அதுமட்டுமல்லாமல் பீங்கானில் செய்யப்பட்ட காமதேனு சிலையும் வாங்கி உங்களுடைய வீட்டில் வைக்கலாம். முடியாதவர்கள் மண்ணால் செய்யப்பட்ட காமதேனு சிலையை கூட உங்களுடைய வீட்டில் வைக்கலாம்.

இப்பொழுது இந்த சிலைகள் ஆன்லைனில் எளிதாக வாங்க கிடைக்கிறது. காமதேனு சிலையை உங்களுடைய வீட்டில் சரியான திசையில் வைக்கும் பொழுது அது ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

செல்வத்தை அள்ளிக்கொடுக்கும். உங்கள் வீடு செழிப்பால் நிறையும். வீட்டில் எப்பொழுதும் சமாதானம் குடியிருக்கும். எடுக்கும் காரியங்களில் நல்ல வெற்றி கிடைக்கும். எப்பொழுதும் நேர்மறை ஆற்றல் உங்களுடைய வீட்டில் இருந்து கொண்டே இருக்கும்.

ஆகையால் அதிக செல்வ வளத்தைப் பெறவேண்டும் என நினைப்பவர்கள் காமதேனு சிலையை உங்களுடைய வீட்டில் வாங்கி வைப்பது சிறந்தது. இது நல்ல அதிர்ஷ்டத்தைக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் உங்களை எப்பொழுதும் நேர்மறை ஆற்றலோடு சந்தோஷமாக வைத்திருக்கும்.

Related posts

Leave a Comment