January 31, 2023
செல்வம்

பணத்தை ஈர்க்கும் இந்தச் செடிகளை உங்கள் வீட்டில் இப்படி வைக்கக்கூடாது!

பணம் சேரும் என்று யார் எதைக் சொன்னாலும் நாம் அதை உடனேயே செய்து விடுவோம். அதை செய்தால் நல்லது நடக்குமா, என்பதை சிந்திப்பதே இல்லை. அதே போல தான் சிலர் பணத்தை ஈர்ப்பதற்காக குறிப்பிட்ட செடிகளை எல்லாம் வீட்டில் வளர்த்தால் நன்மை என்று கூறுவார்கள். அவற்றில் ஓன்று தான் இந்த “மணி பிளான்ட்”.

இந்த செடியை முறைப்படி வைப்பது தான் நமக்கு மிக அவசியம். அந்தப்படியே எந்த செடிகளை எப்படியெல்லாம் வைக்கக்கூடாது என்பதை பற்றியும் எப்படி வைக்க வேண்டும் என்பதையும் குறித்து இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மணிபிளாண்ட் செடி

மணிபிளாண்ட் செடியை வாஸ்துப்படி வீட்டில் வைத்தால் பணம் வரும். ஆனால் பூமியில் புதைத்து வைக்கும் மணி பிளான்ட் செடிக்கு சக்தி அதிகம் உள்ளது என்பதை நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

மணிபிளாண்ட் செடியின் வேரானது பூமியில் புதைந்து இருக்க வேண்டும். அப்படி வைக்க இடம் இல்லாதவர்கள் மற்றும் மாடி வீட்டில் குடியிருப்பவர்கள் என்ன செய்வது என்று யோசிக்கிறீர்களா? தொட்டியில் அந்த செடியினை வைத்துக் கொள்ளலாம்.

ஆனால் மணிபிளான்ட் செடி இருக்கும் தொட்டியானது தரையில் தான் வைத்திருக்க வேண்டுமே தவிர, ஆணிகளில் மாட்டி தொங்கவிடக்கூடாது. ஆனால் அப்படி தொங்கவிடப்பட்ட மணிபிளாண்ட் செடியினால் நமக்கு எந்த ஒரு பலனும் கிடைக்காது. வெறும் அழகிற்காகவே தொங்கி கொண்டிருக்கும் இதுதான் உண்மை.

துளசி செடி

துளசி செடியை முடிந்தவரை வீட்டின் பின்புறம் வைப்பதுதான் நல்லது. ஏனெனில் வீட்டு வாசலில் இருக்கும் துளசிச் செடியை வெளியிலிருந்து வரும் நபர்கள் அனைவரும் தொடுவதற்கு வாய்ப்பு உள்ளது. துளசி செடியை எல்லோரும் எல்லா நேரத்திலும் தொடக்கூடாது.

துளசி செடிக்கு தூய்மை முக்கியம். எனவே நம் வீட்டு துளசி செடியை தூய்மையாக பார்த்து கொள்வது நம்முடைய பொறுப்பு. ஆகவே முடிந்தவரை துளசி செடியை வீட்டிற்கு பின் புறத்தில் வைத்துக் கொள்வது தான் நன்மை தரும்.

தொட்டாற்சிணுங்கி

தொட்டாற்சிணுங்கி செடியை நமது வீட்டில் வைத்திருந்தால் செல்வ வளத்தை தரும். இதை வைக்கும் போது வீட்டின் பின் பக்கம் தான் வைக்க வேண்டும். ஏனென்றால் இது தனிமையை விரும்பும் செடி. இதை பிடுங்கி எடுக்க கூடாது. பிடுங்கி எடுத்தால் வேரானது முழுமையாக வருவதில்லை, மாறாக அரைகுறையாகவே வரும்.

அப்படி அரைகுறையாக எடுத்து நம் வீடுகளில் கொண்டுவந்து வைப்பது தவறு. ஏனெனில் இப்படிப்பட்ட பலன்தரும் செடிகளை அரைகுறையாக எடுக்கக்கூடாது. தோண்டி எடுக்கப்பட வேண்டும். இதை முன்பக்கத்தில் வைத்தால் எந்த நன்மையும் ஏற்படாது. பின் பக்கத்தில் வைத்தால் மட்டுமே நன்மை தரும்.

Related posts

Leave a Comment