லீவ் நாட்களில் உங்கள் குழந்தைகளோடு சந்தோஷமாக இருக்க இந்த விளையாட்டுகளை விளையாடுங்கள்!!

கொரோனா வைரஸ் காரணமாக குழந்தைகளுக்கு லீவு கொடுத்துள்ள நிலையில் வீட்டிலேயே அடங்கி இருக்க சொல்லி இருக்கிறார்கள்.

இது மிகவும் கடினமான காரியம். ஆகவே நேரத்தை கடத்த உங்கள் குழந்தைகளுக்கு டிவி மற்றும் மொபைல் போனை அதிகம் கொடுத்து கெடுத்து விடாதீர்கள்.

அதற்க்கு பதிலாக உங்கள் குழந்தைகளுக்கு நாம் விட்டு வந்த விளையாட்டுகளை நினைவு படுத்துங்கள். விளையாட கற்றுக்கொடுங்கள்.

ஐந்து வயது முதல் 50 வயது முதியவர்கள் வரை உள்ளவர்கள், வீட்டுக்குள்ளேயே விளையாட கூடிய சுவாரஸ்ய கேம்ஸ் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பல்லாங்குழி:

நாம் மறந்த இந்த பாரம்பர்ய விளையாட்டுகளில் முக்கியமான ஒன்று பல்லாங்குழி. பொதுவாக பெண்கள் விளையாடும் ஒரு விளையாட்டு.

தமிழர்களின் பண்பாட்டு மரபினில் பெண்ணுக்குரிய சீர்வரிசைப் பொருள்களில் பல்லாங்குழியும் ஒன்றாக இடம் பெறுகிறது.

இந்த விளையாட்டின் சுவாரஸ்யம் எதிரில் இருப்பவர்களின் எண்ண ஓட்டத்தை முன்கூட்டியே அறிந்து அவற்றை நினைவில் வைத்து, தன்னுடைய தனிப்பட்ட புத்தியைப் பயன்படுத்தி எதிரியை வீழ்த்துவதே ஆகும்.

நினைவுத்திறன் அதிகரிக்கும் விளையாட்டு இது. படிப்பில் கவனம் இல்லையென குழந்தைகளை நினைத்து வருத்தப்படுவதை விட்டுவிட்டு தினமும் ஒருமணிநேரம் அவர்களோடு இணைந்து பல்லாங்குழி விளையாடுங்கள். இவர்களின் திறமைகள் அதிகரிக்கும்.

மியூசிகல் சேர்:

உங்கள் குழந்தைகளை மிகவும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும் விளையாட்டு மியூசிகல் சேர். குடும்பத்தோடு இணைந்து இந்த விளையாட்டை விளையாடலாம்.

மியூசிகல் சேர் விளையாட்டில் கிடைக்கும் எனர்ஜி மற்றும் என்ஜாய்மென்ட் வேறெதிலும் கிடைக்காது. மூன்று பேர், இரண்டு சேர் இருந்தாலே போதும் இந்த விளையாட்டை விளையாட. உடனே ஆரம்பிங்க.

பரமபதம்:

ஏற்ற இறக்கங்கள் வாழ்க்கையில் உண்டு என்பதை மிகவும் எளிமையாய் விளக்கும் விளையாட்டு பரமபதம். இது அதிர்ஷ்டத்தைச் சார்ந்து விளையாடப்படும் விளையாட்டு. இதில் பல சுவாரஸ்யங்கள் உள்ளன.

பாம்பு, ஏணி, எண்கள் என பரமபதம் போர்டே ரொம்பவே அழகாக இருக்கும். முன்னேற்றப் பாதையில் ஏராளமான பிரச்சனைகள் உருவாகும்.

ஆனால், அவற்றைக் பார்த்து சோர்ந்து போகாமல் விடாமுயற்சி வேண்டும் என ஆழமாக வலியுறுத்தும் கேம் பரமபதம்.

மனவலிமையை மேம்படுத்தும் இந்த விளையாட்டை உங்கள் குழந்தைகளோடு விளையாடி மகிழுங்கள். நமக்கும் தன்னம்பிக்கை பிறக்கும்.

கேரம் போர்டு:

டிமென்ஷியா, அல்சைமர் உள்ளிட்ட மனநலப் பிரச்னைகளிலிருந்தும் விடுபட இந்த கேரம் விளையாட்டு உதவுகிறது.

பழங்காலத்தில் கேரம் போர்டு இல்லாத வீடுகளைப் பார்க்கவே முடியாது. ஆனால், இப்போதோ ஆன்லைனில் சிங்கிள் ஆளாக இருந்து காயின்களை பாக்கெட் செய்து விளையாடுகின்றனர்.

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரோடு விளையாடும்போது கிடைக்கிற சந்தோஷம் நிச்சயம் ஆன்லைனில் விளையாடும்போது கிடைக்காது.

மேலும், இது எந்த பிரச்னையையும் எளிதில் தீர்க்கும் திறனையும் அறிவாற்றலையும் மேம்படுத்த உதவுகிறது.

பாயின்ட்ஸ் அடிப்படையில் விளையாடும்போது, எண்ணிக்கை, கண்களும் கைகளுக்குமான ஒருங்கிணைப்பு போன்றவற்றையும் ஊக்கப்படுத்துகிறது.

சதுரங்கம்:

குழந்தைகளின் கவனச் சிதறலை அழித்து , எந்த பிரச்சனையையும் எளிதில் தீர்க்கும் திறன்களை மேம்படுத்துகிறது.

இரண்டு பக்க மூளையையும் வேலை செய்யவைக்கும் இந்தத் தந்திர விளையாட்டை உங்கள் குழந்தைகளுக்கு கற்று கொடுங்கள்.

இது அரசர்களின் விளையாட்டு என வருணிக்கப்படும் சதுரங்கம் (Chess). இருவர் விளையாடும் ஒரு பலகை விளையாட்டு ஆகும். இதை விளையாடாத் தொடங்கினால் நேரம் போறதே தெரியாது.

இந்த விளையாட்டை எதிர்முனையில் இருப்பவர்களுடைய பலம் அறிந்து அவர்களுக்கு ஏற்றபடி தன்னுடைய படை வீரர்களைக் களத்தில் இறக்கி, தன்னுடைய அரசவையைப் பத்திரமாக வைத்துக்கொள்ளப் போராடும் மிகவும் மகிழ்ச்சியான விளையாட்டு ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *