September 28, 2022
அறிந்திராத உண்மைகள்

விசித்திரமான கடற்கரை முழுவதும் கொட்டி கிடக்கும் பாப்கார்ன்

என்னது பாப்கார்ன் பீச்சா ? பாப்கார்னை சாப்பிட மட்டும்தானே முடியும். இந்தப் பெயரில் பீச் இருக்கா? எதற்காக இங்கு பாப்கார்னை இப்படி கொட்டி வைத்திருக்கிறார்கள். நீங்க இப்படி கேட்பது புரியுது.

ஆமாம் நண்பர்களே பாப்கார்ன் பீச் என்றொரு கடற்கரை உள்ளது. உடனே சாப்பிடுவதற்கு சம்பந்தப்பட்ட ஏதாவது விஷயம் இந்த கடற்கரையில் உள்ளது என நினைக்காதீர்கள். இந்த கடற்கரையில் உள்ள மணல் தான் பாப்கார்ன் போல இருக்குமாம்.

என்னது பாப்கான் போல மணலா? எங்கு இப்படி வித்தியாசமான இந்த கடற்கரை இருக்கிறது பார்க்கலாம் வாருங்கள். பாப்கார்ன் பீச் ஃபுர்டெவென்ச்சுரா(island of Fuerteventura) தீவில் உள்ள ஒரு பிரபல கடற்கரை.

பாப்கார்ன் பீச் பிளாயா டெல் பாஜோ டி லா புர்ரா(Playa del Bajo de la Burra) என்று முதலில் அழைக்கப்பட்டது. முதலில் இருந்த இந்த வழவழ கொழகொழ பெயர்தான் பாப்கார்ன் பீச் என மாறியது.

இந்த கடற்கரையில் மணலுக்கு பதிலாக பாறைகள் மற்றும் கூழாங்கற்கள் போன்ற பாப்கார்ன் வடிவில் உள்ள கற்கள் காணப்படுகிறது. இது பார்ப்பதற்கு கடற்கரை முழுவதும் பாப்கார்ன் கொட்டி வைத்திருப்பது போல இருக்கும்.

இப்படி பாப்கார்ன் போல இருப்பது சிறிய அளவிலான வெள்ளை நிறத்தில் இருக்கும் பாசிகளின் புதைபடிவங்கள். இந்த கடல் பாசிகள் ரோடோலித்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. இது முதலில் பார்ப்பதற்கு சிவப்பு நிறத்தில் இருக்கும் ஆனால் காலப்போக்கில் வெண்மை நிறமாக மாறிவிடும்.

பாசிகள் இறந்துபோகும் பொழுது அவற்றில் உள்ள கால்சைட் காரணமாக அவை சிவப்பு நிறத்தில் இருந்து வெள்ளை நிறமாக மாறும். அலைகள் இந்த பாசிகளை கரையில் கொண்டு தள்ளுகிறது. மேலும் பாப்கார்ன் போன்ற வடிவத்தையும் இதற்கு கொடுக்கிறது.

Related posts

Leave a Comment