தமிழக முதல்வரை தீடிரென்று சந்தித்த பிரபல காமெடி நடிகர்!!!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வருபவர் யோகிபாபு. பல படங்களில் ஓயாமல் நடித்து வந்த அவர் கடந்த மாதம் ரசிகர்களுக்கு ஒரு ஷாக் கொடுத்தார்.

திரையுலகினர் யாரும் இல்லாமல் பிப்ரவரி மாதம் 20-ம் தேதி தனது உறவினரான மஞ்சு பார்கவியை திருமணம் செய்துக் கொண்டார்.

இந்நிலையில் தற்போது அவர் திரையுலகம் மற்றும் பிரபலங்களை அழைத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளார்.

வரும் ஏப்ரல் மாதம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக தற்போது அவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *