November 27, 2022
டெக்னாலஜி

இதய துடிப்பு மற்றும் இரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை கூட கண்டுபிடிக்க உதவும் ரியல்மீ வாட்ச் அறிமுகம் !!!

இந்தியாவில் ரியல்மீ டிவியுடன் தனது ரியல்மீ வாட்சை அறிமுகம் செய்யப்போவதாக ரியல்மீ உறுதிப்படுத்தியுள்ளது.

இப்போது அறிமுகத்திற்கு முன்னதாக, நிறுவனம் வரவிருக்கும் கடிகாரத்தின் வடிவமைப்பு மற்றும் அம்சங்களை முன்னோட்டமாக காண்பித்துள்ளது.

ரியல்மீ ஸ்மார்ட் வாட்ச் – ன் வடிவமைப்பு, ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் வாட்ச் வடிவமைப்பைப் போலவே இருக்கிறது.

இந்த வாட்ச் 2.5D கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன், 1.4 இன்ச் கொண்ட 320×320 பிக்சல்கள் கூடிய டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது மிகவும் விலைமதிப்புள்ள டிஸ்ப்ளே என்று அந்த நிறுவனம் கூறுகிறது.

ரியல்மீ ஸ்மார்ட் வாட்ச் மூலம் நமது இதய துடிப்பை தொடர்ந்து கண்காணிக்க முடியும். மேலும் எஸ்பி ஓ2(SpO2) கருவி மூலம் இரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவையும் கண்காணிக்கலாம்.

மேலும் இது ஸ்மார்ட் போனுடன் இணைப்பில் இருப்பதால் அழைப்புகள் ,மெஸேஜ் , பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸப் சேவைகளை பயன்படுத்த முடியும்.

மேலும் இந்த வாட்ச் மூலம் கால்பந்து, கூடைப்பந்து, டேபிள் டென்னிஸ், பைக், ஸ்பின்னிங், எலிப்டிகல், யோகா, கிரிக்கெட், ஓடுதல், நடைபயிற்சி, டிரெட்மில், பூப்பந்து, ஏரோபிக் கொள்ளளவு மற்றும் உடற்தகுதி உள்ளிட்ட 14 விளையாட்டுகளை பார்க்கலாம்.

இந்த வாட்சை ஒரு முறை சார்ஜ் செய்தால் 7 நாட்களுக்கு பயன்படுத்தலாம். பிபிஜி (ppg) சென்ஸார் உடன் ஐபி68 தரச்சான்று பெற்றுள்ளதால் தூசி மற்றும் தண்ணீரால் பாதிக்கப்படாது.

ரியல்மீ டிவியைப் போலவே, ரியல்மீ வாட்ச் இந்தியாவில் பிளிப்கார்ட் மூலமாகவும், அந்த நிறுவனத்தின் சொந்த அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோர் மூலமாகவும் வாங்க கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட் வாட்ச்சின் விலை 3,999 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. இது நீலம், ஆரஞ்சு, ஆலிவ் பச்சை மற்றும் கருப்பு உள்ளிட்ட நிறங்களில் உள்ளது.

Related posts

Leave a Comment