November 27, 2022
செய்திகள்

லுங்கி அணிந்துவந்த காரணத்தினால் திரையரங்கில் திரைப்படம் பார்க்க டிக்கெட் தர மறுப்பு…!

பங்களாதேஷில் சினி பிளெக்ஸ் எனும் மல்டிபிளக்ஸ் திரையரங்கம் செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்த தியேட்டருக்கு முன் சமன் அலி சர்கார் என்பவர் படம் பார்க்க சென்றுள்ளார். அப்போது டிக்கெட் எடுக்க சென்றபோது அவருக்கு தியேட்டர் ஊழியர்கள் டிக்கெட் தர மறுத்துள்ளனர். ஏன் என்று கேட்டதற்கு லுங்கி அணிந்து வந்தவர்களை அனுமதிக்க மாட்டோம் என கூறி வாக்குவாதம் செய்துள்ளனர்.

இதனால் படம் பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் வீட்டுக்கு சென்றுள்ளார் முன் சமன் அலி சர்கார். லுங்கி அணிந்திருந்ததை காரணம் காட்டி அவருக்கு டிக்கெட் தர மறுத்ததை அருகில் இருந்த ஒருவர் வீடியோ எடுத்து, அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

புதன்கிழமை வெளியான இந்த வீடியோ, சிறிது நேரத்தில் வைரலானது. அந்த வீடியோவில் இருந்தவர் முன் சமன் அலி சர்க்கார் என அடையாளம் காணப்பட்டது. இந்த வீடியோ வைரல் ஆனதோடு சம்பந்தப்பட்ட தியேட்டர் நிர்வாகத்திற்கும் எதிர்ப்பு வலுத்தது.

இதையடுத்து சினி பிளெக்ஸ் நிறுவனம் இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தது. இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இது போன்ற நிகழ்வு மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம் என அந்நிறுவனம் வெளியிட்டிருந்த பதிவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதையடுத்து இந்த சர்ச்சைக்கு முடிவுகட்டும் விதமாக முன் சமன் அலி சர்காரின் குடும்பத்தினருக்கு இலவசமாக டிக்கெட் வழங்கிய சினி பிளெக்ஸ் நிறுவனம், அவர்களை பூரன் படத்தின் நாயகனுடன் சேர்ந்து படம் பார்க்கவும் ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்விலும் முன் சமன் அலி சர்கார் லுங்கி அணிந்துதான் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment