ஷாப்பிங்

ரிமோட் கன்ட்ரோல் உடன் வரும் மின் விசிறி

வெயில் காலம் ஆரம்பித்து விட்டது. சூடு காரணமாக மின்விசிறிகள் தேவை ஆரம்பித்து விட்டது. வெளியில் சென்று விட்டு சூரியனின் கதிர்களால் தகிக்கப்பட்டு வெப்பத்தால் நிலைகுலைந்து வியர்த்து வழிந்து வீட்டினுள் வந்த உடன் மின்விசிறியை முழு வேகத்தில் ரெகுலேட்டரில் வைத்து விட்டு அதன் கீழ் இருக்கும் சுகம் இருக்கிறதே அதன் சுகம் அப்பப்பா.. அந்த சுகத்தை வார்த்தையால் விவரிக்க இயலாது.

சிறிது நேரம் அப்படியே இருந்துவிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக உடல் குளிர தொடங்கி இனி வேகத்தை குறைக்கலாம் என நினைக்கும் பொழுது எழுந்து சென்று மின் விசிறியின் வேகத்தை குறைக்க மனது வராது. எழுந்து செல்ல கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். உங்கள் கஷ்டத்தை போக்கவே வேகத்தை குறைத்து கூட்டும் ரிமோட் கன்ட்ரோல் உடன் தற்பொழுது மின்விசிறியை அமேசானில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.  (Atomberg Renesa 1200 mm BLDC Motor with Remote 3 Blade Ceiling Fan)

நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே மின்விசிறியின் வேகத்தை கூட்டலாம், குறைக்கலாம். அதுபோல தூங்கும் பொழுது மின்விசிறியின் வேகத்தை கூட்டி, குறைக்க வேண்டுமென்றாலும் உங்கள் படுக்கையில் நீங்கள் படுத்த படியே வேகத்தை கூட்டி குறைக்கலாம். கூடவே உங்கள் வீட்டு மின்சார உபயோகத்தை குறைக்கும் விதமாக இந்த மின்விசிறி வந்துள்ளது.

அதிக வேகத்தில் இந்த மின் விசிறி 28 வாட்ஸ் கரண்டை மட்டுமே எடுத்து கொள்ளும். ஒரு வருடத்தில் உங்கள் மின்சார கட்டணத்தில் நீங்கள் 1500 ரூபாயை மிச்சப்படுத்தி கொள்ளலாம். இந்த ஸ்மார்ட் ரிமோட்டில் ஸ்பீட் கண்ட்ரோல், ஸ்லீப், டைம் மோட் என பல வசதிகள் உள்ளன. 3 வருட வாரண்டி கொடுக்கிறார்கள். 2 வருட ஆன்சைட் வாரண்டி. ஒரு வருடம் நீட்டிக்கப்பட்ட வாராண்டி நீங்கள் ரெஜிஸ்ட்ரேஷன் செய்தால்.

இரவிலும் தெரியும் படியான எல்.ஈ.டி இண்டிகேஷன். இப்படி ஏராளமான அம்சங்களோடு வந்துள்ளது இந்த சீலிங் ஃப்பேன். பல அழகான வர்ணங்களில் கிடைக்கிறது. ஸ்டார் ரேட்டிங்கில் 5 க்கு 4.3 ரேட்டிங் பெற்றுள்ளது. இதன் விலை 3990 தற்பொழுது 22 சதவிகித ஆஃபரில் 3095 ரூபாய்க்கு கிடைக்கிறது. நீங்கள் 895 ரூபாய் சேமிக்கலாம். நீங்கள் இதை வாங்க விரும்பினால் லிங்க் கீழே உள்ளது.

Related posts

Leave a Comment