November 27, 2022
கனவுகள்

பள்ளிக்கு செல்வது போல் கனவு கண்டால்

பொதுவாக அனைவருக்கும் வரக்கூடிய கனவுகளில் ஒன்று வகுப்பறை, பள்ளிக்கு செல்வது, படிப்பது பற்றிய கனவுகள். ஏராளமானோர் அடிக்கடி காணக்கூடிய கனவுகளில் ஒன்று இந்த பள்ளியை பற்றிய கனவு. இப்படி பள்ளியை பற்றிய கனவுகள் நமக்கு எதை உணர்த்துகிறது என்பதை பற்றி பார்ப்போம். இந்தக் கனவு உங்களுடைய கடந்த காலங்கள் மற்றும் தற்போதைய வாழ்க்கையில் நடக்கக் கூடிய விஷயங்களை சொல்வதாக அமைகிறது. ஏனென்றால் பள்ளி என்பது உங்களுடைய நினைவுகளை உருவாக்கக்கூடிய இடம். பள்ளிப் படிப்பை முடித்தவர்களுக்கு பள்ளியைப் பற்றிய கனவுகள் வந்தால் அது தற்போதைய உங்களுடைய வாழ்க்கையை பற்றிய விஷயங்களை சொல்வதாக அமைகிறது.

நிஜ வாழ்க்கையில் உங்களுக்கு ஏற்படக்கூடிய கவலைகளையும் சோகங்களையும் மறந்து அதிலிருந்து வெளிவரும் விதமாகவும் பள்ளிகளை பற்றிய கனவுகள் உங்களுக்கு வருமாம். இப்படிப்பட்ட கனவுகளை நீங்கள் கண்டால் உங்களுடைய நிஜ வாழ்க்கையில் நீங்கள் அச்சப்பட கூடிய ஏதோ ஒரு விஷயத்தில் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை குறிக்கிறது. நீங்கள் வகுப்பறையில் இருப்பது போலவோ அல்லது வகுப்பறையில் தேர்வில் தோல்வி அடைந்தது போலவோ உங்களுடைய கனவில் கண்டால் இது உங்களுக்கு ஒரு எச்சரிக்கையை கொடுக்கும் விதமாகவும் உங்களுக்கு ஊக்கத்தை அளிக்கும் விதமாகவும் அமையக்கூடிய கனவு.

இது உங்களுடைய நிஜ வாழ்க்கையில் நடக்கக்கூடிய ஒரு சில சிக்கல்களை பற்றி சொல்கிறது. நீங்கள் தற்போது செய்து கொண்டிருக்க கூடிய ஒரு விஷயத்தில் ஒரு குழப்பமான சூழலில் இருக்கிறீர்கள் என்பதை குறிக்கிறது. அந்த விஷயத்தில் நல்ல ஒரு முடிவு உங்களுக்கு தேவை. ஆனால் நீங்கள் அந்த முடிவை தேர்வு செய்ய பயப்படுகிறீர்கள் என்பதை குறிக்கிறது. மிக முக்கியமாக நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்காது என நீங்கள் பயப்படுகிறீர்கள். ஆனால் நீங்கள் எடுத்த முடிவுகள் சரியானவை என்பதை உங்களுக்கு நினைவு படுத்த இந்த கனவு வருகிறது.

கூடவே இப்படிப்பட்ட கனவுகளில் உங்களுக்குத் தேவையான சாதகமான விஷயங்களும் முடிவுகளும் தெரியும். உங்களுடைய முடிவில் எந்த கடுமையான விளைவுகள் இருந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராகுங்கள். ஏனென்றால் நீங்கள் எடுத்து இருக்கக்கூடிய அந்த முடிவு மிகவும் சரியாக வரும். பயப்பட வேண்டாம். நீங்கள் பள்ளி படிக்கும் காலத்தில் நடந்த ஒரு சில சம்பவங்கள் அதைத் தொடர்ந்து நீங்கள் வளர்ந்த பிறகு அதையொத்த சம்பவங்கள் நடக்கும் பொழுது இப்படிப்பட்ட கனவுகள் உங்களுக்கு வருகிறது. ஏனென்றால் உங்களுடைய பள்ளிப்பருவ சம்பவங்கள் உங்கள் ஆழ் மனதில் பதிந்திருக்கும்.

தற்பொழுது அதையொத்த ஏதாவது சம்பவங்கள் நிகழும் பொழுது வகுப்பறை பற்றிய கனவுகள் உங்களுக்கு வரும். ஏதாவது மிக முக்கியமான பிரச்சனைகள் உங்களுக்கு ஏற்படும் பொழுது இப்படிப்பட்ட கனவுகள் உங்களுக்கு வரும். ஆனால் இந்த கனவுகள் உங்களுடைய பிரச்சனைகளை சமாளிக்கக்கூடிய விடைகளையும் மறைமுகமாக உங்களுக்கு கொடுத்திருக்கும். பள்ளி என்பது ஒரு விஷயத்தைப் பற்றி அதிகமாக அறிந்து கொள்வதற்காக நீங்கள் செல்லக்கூடிய இடம். அதனால் நீங்கள் பள்ளியில் வகுப்பறையில் இருப்பது போல காணக்கூடிய கனவு உங்களுடைய வாழ்க்கையில் முக்கியமான கட்டத்தில் நீங்கள் எடுக்க வேண்டிய முடிவும் உங்களுக்கு சாதகமாக அமையும் திருப்பதையும் குறிக்கும்.

அதாவது உங்களுக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய சிக்கலைப் பற்றி நீங்கள் மேலும் தீர ஆராய்ந்து என்ன தவறுகள் செய்திருக்கிறீர்களோ அதை திருத்திக் கொள்ளும் பொழுது நல்ல முடிவு உங்களுக்கு கிடைக்கும். ஒருசிலருக்கு பள்ளியைப் பற்றிய கனவு அவர்களுடைய மனதின் பழைய நினைவுகளை வெளிக்கொண்டு வருவதாக அமைகிறது. இது நல்லதாகவும் இருக்கலாம் கெட்டதாகவும் இருக்கலாம்.

ஆனால் அது உங்களுடைய இப்போதைய வாழ்க்கையின் சூழ்நிலையை பொருத்து அமையும். பள்ளியை பற்றி நீங்கள் காணக்கூடிய கனவு உங்களுடைய வாழ்க்கையில் ஒரு சில விஷயங்களை நீங்கள் கையாளுவதற்கு தயாராக இல்லை என்பதை குறிக்கிறது. அதற்கு இன்னும் முதிர்ச்சி அடையவில்லை என்பதை குறிக்கிறது. குறிப்பாக வகுப்பிற்கு தாமதமாக வருவது போல நீங்கள் உங்களுடைய கனவில் கண்டால் நீங்கள் செய்யக்கூடிய செயல்களை இன்னும் அதிக கவனத்தை எடுக்க வேண்டும் என்பதை இது சொல்கிறது. நிஜவாழ்க்கையில் உங்களுக்கு பெரிய ஒரு சவால் காத்திருக்கிறது என்பதை குறிக்கிறது.

அது உங்கள் தொழிலாக இருக்கலாம் வாழ்க்கையாக இருக்கலாம் வேலையாக இருக்கலாம் எந்த விஷயமாக இருந்தாலும் நீங்கள் கவனமாக செயல்பட வேண்டும் என்பதை குறிப்பதாக இந்த கனவு அமைகிறது. ஆனால் தற்போது நடக்கக்கூடிய அந்த சூழலுக்கு மாற்றங்களுக்கு நீங்கள் விரும்பவில்லை என்பதை இது குறிக்கிறது. அதாவது நீங்கள் இப்பொழுது இருக்கக்கூடிய நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு செல்வதற்கு உங்களுடைய மனம் ஒத்துக்கொள்ளவில்லை என்பதை குறிக்கிறது. இத்தகைய வாழ்க்கை மாற்றங்களுக்கு நீங்கள் தயாராக இருக்கவேண்டும் என்பதையும் இது குறிக்கிறது.

நீங்கள் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு கண்டிப்பாக இது தேவை என்பதையும் குறிக்கிறது. முக்கியமாக ஒரு சிலர் சில வேலைகளில் பலகாலமாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் மனம் அவர்கள் விரும்பிய திறமையாக இருக்கக்கூடிய இன்னொரு வேலையை பற்றி நினைத்துக் கொண்டிருக்கும். இப்படிப்பட்ட நேரத்தில் அவர்கள் சரியாக முடிவெடுத்து, இருக்கும் சூழ்நிலையில் இருந்து மாறி தாங்கள் நினைத்த விஷயத்தை செய்யும் பொழுது மிகப்பெரிய வெற்றியையும் உச்சத்தையும் அடைவார்கள். வகுப்பறையை பற்றி நீங்கள் காணக்கூடிய கனவு உங்களுடைய பிரச்சனைகளை நீங்கள் பிறரிடம் பகிர வேண்டும் என்பதை கூறுகிறது.

அதாவது இந்த கனவு உங்களுக்கு ஒரு எச்சரிக்கையாக வருகிறது. இது உங்களுடைய மன ஆரோக்கியத்தை பற்றி சொல்கிறது. நீங்கள் மிகவும் மன அழுத்தத்தில் இருக்கிறீர்கள் உங்களுடைய மனதில் பல விஷயங்களை போட்டு குழப்பிக் கொண்டு இருக்கிறீர்கள் இந்த விஷயத்தில் இருந்து வெளிவர முடியாமல் தவிக்கிறீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் நிச்சயமாக ஒருவருடன் உங்களுடைய பிரச்சனைகளை பற்றி மனம் திறந்து பகிர வேண்டும். இதன் மூலமாக உங்களுடைய பிரச்சனைகள் மற்றும் சிக்கல்கள் பாதியாக குறையும். நீங்கள் உங்களுக்கு மிகவும் பிடித்த நெருங்கிய நண்பர்களோ அல்லது குடும்பத்தினரோ உறவினர்களிடமோ உங்களுக்கு ஏற்பட்ட சிக்கலை சொல்லும் பொழுது மனதிற்கு ஒரு தெளிவு கிடைக்கும். மன அழுத்தம் குறையும்.

பிரச்சனையில் இருந்து விடுபடுவீர்கள். ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் உங்களுக்கு நம்பிக்கை இல்லாதவர்களிடம் மோசமான குணம் கொண்டவர்களிடம் மனம் திறந்து உங்களுடைய விஷயங்களை பற்றி பேசாதீர்கள். இந்த சமயங்களில் நீங்கள் இந்த பிரச்சனைகளை பகிர்ந்து கொள்ளாமல் இருந்தால் உங்களுக்கு எந்த தீர்வும் கிடைக்காது. அது உங்களுடைய வாழ்க்கையின் முக்கியமான ஒரு விஷயமாக இருக்கலாம். நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் மிகவும் வலிமையாக இருக்க இது ஒரு வழிமுறை.

உங்களுடைய பலவீனங்களை பிறர் தெரிந்து கொள்வார்கள் என பயப்பட வேண்டாம். வகுப்பறை பற்றிய கனவு உங்களுடைய நிஜ வாழ்க்கையில் உங்களுக்கு பல இடங்களில் நம்பிக்கை இல்லாமல் இருப்பதைக் குறிக்கிறது. சிறு தோல்விகளை கூட தாங்க முடியாமல் தவிக்கிறீர்கள் என்பதை குறிக்கிறது. தோல்விகள் என்பது எப்பொழுதுமே வெற்றிக்கு முதல் படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 1000 தோல்விகள் உங்களுக்கு மிகப்பெரிய ஒரு வெற்றியை கொடுக்கும். அந்த வெற்றி யாராலும் ஈடுகட்ட முடியாத வெற்றியாக இருக்கும். அதனால் தோல்வியைக் கண்டு பயப்படாமல் தொடர்ந்து முன்னேறுங்கள்.

Related posts

Leave a Comment