June 10, 2023
அறிந்திராத உண்மைகள்

கடல் அட்டை சுவாரஸ்ய தகவல்கள்

கடல் அட்டை(Sea cucumbers) ஹோலோதுரைடியா வகுப்பைச் சேர்ந்த எக்கினோடெர்ம்கள். உலகம் முழுவதும் கடலின் அடிப்பகுதியில் இவை காணப்படுகின்றன.

உலகளவில் ஹோலோதுரியன் இனங்களின் எண்ணிக்கை சுமார் 1,717.அவை பல்வேறு வண்ணங்கள், வடிவங்கள் மற்றும் அளவுகளைக் கொண்டுள்ளது.

இவை ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் உள்ளது. இவை பொதுவாக 10 முதல் 30 சென்டிமீட்டர் நீளம் கொண்டவை.

ஒரு அங்குலத்திற்கும் குறைவான நீளம் முதல் பல அடி வரை நீளமாக இருக்கும். இந்த கடல் அட்டைகள் தங்கள் ஆசனவாய் வழியாக சுவாசிக்கின்றன.

ஆசனவாய் வழியாக ஆக்ஸிஜனேற்றப்பட்ட நீரை உள்ளே இழுத்து சுவாசிக்கிறது. ஒரு கடல் அட்டையால் ஒரு வருடத்தில் 99 பவுண்டுகள் வரை வண்டலை வடிகட்ட முடியும்.

வண்டலை உட்கொண்டு உணவுத் துகள்களை அகற்றி நீண்ட இழைகளாக வண்டலை வெளியேற்றும். பாசி மற்றும் அழுகும் பொருட்களை உண்கின்றன.

இதனால் கடல் சுற்றுச்சூழல் முழுவதும் ஊட்டச்சத்துக்களை சுழற்சி முறையில் சரியாக வைத்திருக்க உதவுகிறது. கடல் அட்டைகளில் 90 சதவிகிதம் கடலோரங்களில் வாழ்கிறது.

ஆழமான கடல்களின் அடியிலும் இவை வாழ்கிறது. கடலின் அடியில் 15000 அடிக்கும் கீழே கடல் அட்டை உயிர் வாழ்கிறது. ஒரு கடல் அட்டை 5 லிருந்து 10 ஆண்டுகள் வரை வாழக்கூடியது.

Related posts

Leave a Comment