June 10, 2023
கனவுகள்

கனவுகள் பற்றி உங்களில் பலரும் அறிந்திராத ரகசியங்கள்

உங்களுக்கு நியாபகம் இருக்கிறதோ இல்லையோ ஒவ்வொரு இரவும் நீங்கள் கனவுகளை கண்டு கொண்டிருக்கிறீர்கள்.

சில நேரங்களில் மகிழ்ச்சியான கனவுகள் வரும். சில நேரங்களில் சோகமான கனவுகள் வரும். ஆனால் அடிக்கடி விநோதமான கனவுகள் வரும்.

மிகத் தெளிவான கனவுகள் நம்முடைய தூக்கத்தின் போது விரைவான கண் இயக்க நேரத்தில் நடைபெறுகிறது. இதை ஆங்கிலத்தில் ரேபிட் ஐ மூவ்மெண்ட்ஸ்(rapid eye movement) என சொல்கிறார்கள்.

இரவு முழுவதும் ஒவ்வொரு 90 முதல் 120 நிமிடங்கள் இடைவெளியில் இந்த கனவுகள் வருகிறது. நீண்ட நேர கனவுகள் காலை நேரங்களில் மட்டுமே வரும். தொடர்ச்சியாக வரக்கூடிய கனவுகளும் இருக்கிறது. பொதுவாக குழந்தைகளுக்கு இப்படி தொடர்ச்சியான கனவுகள் வரும்.

அதில் முக்கியமாக வருவது விலங்குகள் அல்லது அரக்கர்களுடன் மோதுவது போல கனவு, விழுவது போன்ற கனவு, துரத்துவது போன்ற கனவு. நாம் காணக்கூடிய கனவுகள் எல்லோருக்கும் நிறங்களில் தெரிவதில்லை.

சுமார் 12% மக்கள் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் கனவு காண்கிறார்கள்.

நாம் காணக்கூடிய கனவுகளில் ஏராளமானவை விசித்திரமானதாக இருக்கும். ஏனென்றால் அந்த நேரத்தில் நம்முடைய தகவல்களை சேமித்து வைத்திருக்க கூடிய மூளையின் அந்தப் பகுதி ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும்.

நம்முடைய கனவுகளில் பெரும்பாலானவை முந்தைய நாள் அல்லது இரண்டு நாட்களுக்குள் நடைபெற்ற நிகழ்வுகளோடு தொடர்புடையதாக இருக்கும்.

பொதுவாக நம்முடைய கனவுகளில் நாம் நேரிலோ அல்லது தொலைக்காட்சியிலோ பார்த்த முகங்களை மட்டுமே கனவு காண்கிறோம்.

உங்களுக்கு மன அழுத்தம் குறைவாக இருக்கும் பொழுது மகிழ்ச்சியான கனவுகள் வரும். உங்களுடைய நிஜ வாழ்க்கையில் நீங்கள் திருப்தியாக சந்தோஷமாக இருக்கும் பொழுது உங்களுக்கு வரக்கூடிய கனவுகளும் இனிமையாக இருக்கும்.

ஆண் மற்றும் பெண்களின் கனவுகளில் ஏறக்குறைய 4 சதவிகிதம் பாலுணர்வை பற்றியது என ஆராய்ச்சி சொல்கிறது. குப்புறப்படுத்து தூங்குபவர்களுக்கு பாலுணர்வு பற்றிய கனவுகள் அதிகம் வரும். பெண்களை விட ஆண்கள் இரண்டு மடங்கு அதிகமாக பாலுணர்வு பற்றிய கனவுகளை காண்கிறார்கள்.

குழந்தைகளுக்கு அதிக அளவு கனவுகள் வரும். கனவுகள் பொதுவாக குழந்தைகளுக்கு மூன்று முதல் ஆறு வயதிற்குள் தொடங்கி 10 வயதிற்கு பிறகு குறையத் தொடங்கும்.

பெண்களுக்கு பயமுறுத்தும் கனவுகள் அதிக அளவு வரும். டீன் ஏஜ் பருவத்தில் ஆண்களை விட பெண்களுக்கு அதிக அளவு கனவுகள் வரும்.

துக்கமான கனவுகள் உங்களுக்கு மிகவும் பிடித்த இறந்து போனவர்களுடைய கனவுகள் விடுமுறை நாட்களில் அதிக அளவு வரும்.

நீங்கள் இரவு தாமதமாக சாப்பிட்டு உடனே உறங்க சென்றால் உங்களுக்கு அதிக அளவு கனவு வரும். ஏனென்றால் இது உங்களுடைய வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. மேலும் உங்களுடைய மூளை மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதையும் இது குறிக்கிறது.

ஒரு சில மருந்து மாத்திரைகள் உங்களுடைய கனவுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.

பயத்தை விட குழப்பம், வெறுப்பு, சோகம், குற்றவுணர்வு ஆகியவை பெரும்பாலும் உங்களுடைய கனவுகளோடு தொடர்புடையதாக இருப்பதாக ஆராய்ச்சி சொல்கிறது.

பார்வையற்றவர்கள் தங்களுடைய கனவில் உருவங்களை பார்க்கிறார்கள்.

நம்முடைய வீட்டில் வளர்க்கக்கூடிய செல்லப்பிராணிகள் உட்பட எல்லா விலங்குகளும் கனவு காண்பதாக ஆய்வுகள் சொல்கிறது.

நாம் காணக்கூடிய கனவுகளில் 95 லிருந்து 99 சதவிகிதம் வரை மறந்துவிடுகிறோம்.

10 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஒவ்வொரு இரவும் குறைந்தது 4 லிருந்து 6 கனவுகளை காண்கிறார்கள்.

கனவுகள் நம்முடைய எதிர்காலத்தைக் கணிக்க முடியும் என ஒரு சிலர் நம்புகிறார்கள். இருந்தாலும் இதை நிரூபிக்க போதுமான ஆய்வு முடிவுகள் இன்னும் கிடைக்கவில்லை.

நம் அனைவருக்கும் நேர்மறை கனவுகளை விட எதிர்மறை கனவுகளே அதிகம் வருகிறது.

நம்முடைய கனவுகளை நாமே கட்டுப்படுத்த முடியுமாம். தெளிவான கனவுக்கான நுட்பங்களை நாம் பயன்படுத்துவதன் மூலமாக நம்முடைய கனவுகளைக் கட்டுப்படுத்த நாம் கற்றுக் கொள்ள முடியுமாம்.

ஒவ்வொருவரும் தாங்கள் நினைவில் வைத்திருக்கக் கூடிய கனவுக்கு என்ன அர்த்தம் என யோசிக்கிறார்கள். கனவுகள் என்பது நிஜ வாழ்க்கையில் நீங்கள் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் பொழுது உங்களை தயார்படுத்திக் கொள்ள உதவும் ஒரு எச்சரிக்கை நிலை.

Related posts

Leave a Comment