வேலைகள்

இந்திய எண்ணெய் நிறுவனத்தில் ரூ.2.2 லட்சம் ஊதியத்தில் வேலை !!

இந்திய எண்ணெய் நிறுவனத்தில் காலியாக உள்ள மூத்த கணக்கு அதிகாரி மற்றும் கணக்கு மேலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. மேலும் விருப்பம் உடையவர்கள் ICAI/ICMAI முடித்திருந்தால் விண்ணப்பிக்கலாம்.

நிர்வாகம் : இந்திய எண்ணெய் நிறுவனம்

கல்வித் தகுதி : Associate Member of ICAI/ICMAI

மேலாண்மை : மத்திய அரசு

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : அக்டோபர் 22

மொத்த காலிப் பணியிடம் : 10

மூத்த கணக்கு அதிகாரி : 09

கணக்கு மேலாளர் : 01

ஊதியம்:

மூத்த கணக்கு அதிகாரி : ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரையில்

கணக்கு மேலாளர் : ரூ.80,000 முதல் ரூ.2,20,000 வரையில்

தேர்வு முறை :  இதற்கு தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு, குழு கலந்துரையாடல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.oil-india.com.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் வழியாக www.oil-india.com இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Related posts

Leave a Comment