சிவன்மலை கோயில் உத்தரவு பெட்டியில் தாலிக்கயிற்றில் மஞ்சள் கட்டை வைத்து பூஜை !!! என்ன நடக்குமோ ? பக்தர்கள் கலக்கம் …

திருப்பூர்- காங்கயம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சிவன் கோயிலில் உள்ள முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த கோயிலில் ஒரு சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டி அமைந்துள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால் இந்த பெட்டியில் இருக்கும் பொருள் மூலமாக இந்த உலகில் எதாவது நிகழ்வு நடக்கும் என்பது காலம் காலமாக அந்த இடத்தில் உள்ள பக்தர்களின் நம்பிகையாம்.

சுப்பிரமணியசாமியே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளைக் கூறி அதை கோவில் முன்மண்டப தூணில் வைக்கப்பட்டுள்ள உத்தரவு பெட்டியில் வைக்க உத்தரவிடுவார்.

உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி விவரத்தை கூறினால் சுவாமியிடம் பூ போட்டு கேட்டு வெள்ளை பூ வந்தால் கனவில் வந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைப்பார்கள்.

இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு காலநிர்ணயம் ஏதும் கிடையாது. அடுத்த பொருள் பக்தரின் கனவில் உத்தரவாகும் வரை உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும்.

இவ்வாறு உத்தரவான பொருள் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் காலத்தில் அந்தப் பொருள் சமூகத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அது நேர்மறையாகவும் இருக்கலாம், எதிர்மறையாகவும் இருக்கலாம். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 29-ந் தேதி முதல் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் மஞ்சள் தாலிக்கயிற்றில் மஞ்சள் கட்டையால் ஆன திருமாங்கல்யம் வைத்து பூஜை செய்யப்படுகிறது.

இது கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் காமராஜர் நகரைச் சேர்ந்த காமராஜ் என்ற பக்தரின் கனவில் உத்தரவான பொருள் ஆகும். மஞ்சள் திருமாங்கல்யம் வைத்து பூஜிக்கப்படுவதால் சுப காரியங்கள் அதிகரிக்கும் என்று பக்தர்கள் நம்பினர்.

இந்த நிலையில் தற்போது சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் தன் கோரக்கரங்களால் பல உயிர்களை அளித்து வருகிறது. இந்த வைரசை வரவிடாமல் செய்ய பல்வேறு ஆலோசனை டாக்டர்களால் கூறப்பட்டு வருகின்றன.

அதில் மஞ்சள் பொடியை தண்ணீரில் கலந்து கிருமிநாசினியாக கைகழுவவும் பயன்படுத்துகின்றனர். மேலும் உணவில் தவறாமல் மஞ்சள் சேர்க்க வேண்டும் என்பதும் ஒன்றாகும். இதையடுத்து கடைகளில் அதிகளவில் பெண்கள் மஞ்சள் தூள் வாங்குவதையும் காண முடிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *