August 18, 2022
டிப்ஸ்

வால்நட்டை நீண்ட நாட்களுக்கு கெட்டுப்போகாமல் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டுமா …?

நம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு அக்ரூட் எனப்படும் வால்நட்ஸ் மிகவும் சிறந்தது. சிறியவர் முதல் பெரியவர்கள் வரை இதை சாப்பிடலாம். இதில் ஒமேகா -3, புரதம் மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன.

பெரும்பாலான எல்லா வீடுகளிலும் கையிருப்பு இருக்க கூடிய இதனை, காய்கறிகள் மற்றும் பழ சாலட்களில் சேர்க்கவும், இனிப்பை அலங்கரிக்கவும், காலை வேளைகளில் சிற்றுண்டியுடன் சேர்த்து சாப்பிடவும் பயன்படுத்துகின்றனர்.

ஒரு வால்நட்டில் சுமார் நான்கு கிராம் புரதம், இரண்டு கிராம் ஃபைபர், கார்போஹைட்ரேட், மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம், செலினியம், வைட்டமின் பி, அதிக அளவில் வைட்டமின் ஈ மற்றும் நல்ல கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது. அதோடு வால்நட்டில் அதிகளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன.

இவ்வளவு சத்துக்கள் இருந்தாலும் முந்திரி, பாதாம் பருப்புகளுடன் ஒப்பிடும் போது, வால்நட் எளிதில் கெட்டுப்போக கூடியது. நீங்கள் வால்நட் பருப்பை சரியான வழியில் சேமிக்க வேண்டும். நீங்கள் அவ்வாறு செய்யத் தவறினால், அது கெட்டுப்போகும். பிறகு அவற்றைத் தூக்கி எறிவதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லை.

தாவர அடிப்படையிலான ஒமேகா-3-யை கணிசமான அளவில் கொண்டிருக்கும் ஒரே கொட்டை வகையைச் சார்ந்தது வால்நட் மட்டுமே ஆகும். ஆனால் இந்த ஆரோக்கியமான கொழுப்பினால்தான் வால்நட் மற்ற கொட்டைகளை விட விரைவில் புத்துணர்ச்சியை இழக்கும்.

வால்நட்டை ஏர் டைட் கன்டெய்னரில் போட்டு சேகரித்தால் மட்டும் போதாது, அதனை சூரிய ஒளிபடாத இடத்தில் வைக்கவேண்டும். அதாவது குளிர்ச்சியான மற்றும் இருண்ட பகுதியில் பாதுகாத்து வைப்பது நல்லது.

ஓடு உடன் இருக்க கூடிய அல்லது ஓடு இல்லாத வால்நட்டை நீண்ட காலம் சேமித்து வைக்க நினைத்தால், அதனை ப்ரிட்ஜில் ஸ்டோர் செய்வது வைப்பது நல்லது. மேலும் அதனை நீங்கள் எப்படி எடுத்து பயன்படுத்துகிறீர்கள் என்பதை பொறுத்து ப்ரிட்ஜ் அல்லது ப்ரீசரில் சேமித்து வைக்கலாம்.

அதாவது கடையிலிருந்து வாங்கி வந்த வால்நட்டை ஒரு மாதத்திற்குள் பயன்படுத்துவிடுவீர்கள் என்றால் அதனை ஒரு ஏர் டைட் கன்டெய்னரில் போட்டு, குளிர்சாதன பெட்டியில் ஸ்டோர் செய்து வைக்கலாம். பல மாதங்களுக்கு அல்லது ஓராண்டுக்கு மேல் வால்நட்டை சேமித்து வைக்க நினைத்தால் அதனை ப்ரீசரில் சேமித்து வைப்பது நல்லது.

ஷெல் அல்லது ஷெல் இல்லாத,வால்நட்டை காற்று புகாத கொள்கலனில் சேமிக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் அதனை குளிர்சாதன பெட்டி அல்லது ப்ரீசரில் சேமிக்கிறீர்கள் என்றால், மறுசீரமைக்ககூடிய ப்ரீசர் பேக்குகளில் போட்டு வைக்கலாம்.

மேலும் வால்நட்டை புத்துணர்ச்சியுடன் பராமரிக்க, அவை ஈரப்பதம், ஒளி மற்றும் வெப்பம் ஆகியவற்றிலிருந்து விலகி இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

எப்போதுமே வால்நட்டை ஷெல் உடன் வாங்குவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். அதனை தேவை ஏற்படும் சமயத்தில் மட்டும் உடைத்து பயன்படுத்துவது கூடுதலான ஆயுள் காலத்தை கொடுக்க உதவும்.

ஷெல்கள் அகற்றப்பட்ட, உடைத்த வால்நட்டை சேமித்து வைக்கும் போது, அவை விரைவில் காய்ந்து சுவை மற்றும் மொறு மொறுப்பை இழப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

Related posts

Leave a Comment