November 27, 2022
டிப்ஸ்

சரும அரிப்பை உடனே போக்க உதவும் எளிமையான டிப்ஸ் !

சிலருக்கு சருமத்தில் வறட்சி ஏற்பட்டு உடல் முழுவதும் அரித்து கொண்டே இருக்கும். அப்படி அரிப்பு ஏற்பட்டாலே நம்மால் நம் கடமைகளை சரி வர செய்ய முடியாது. சரியாக தூங்க முடியாது என பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதற்க்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக மனஅழுத்தம் உள்ளது. இந்த சரும அரிப்பு பிரச்னையை எளிய முறையில் போக்க உதவும் சில டிப்ஸ்களை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சிறிதளவு நீரில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து உடல் முழுவதும் தடவி சிறிது நேரம் தாண்டி குளித்தாலும் அரிப்பு அடங்கும்.

தேங்காய் எண்ணெயை சிறிது நீர் கலந்து உடலில் தடவி அரை மணி நேரம் தாண்டி குளிக்கலாம்.

தேங்காய் பாலுடன் நீர் கலந்து உடலில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தாலும் அரிப்பு அடங்கும்.

ஒட்ஸ்ஸினை நன்கு பொடி செய்து நீரில் நன்கு குழைத்து உடலில் தடவி சிறிது நேரம் தாண்டி குளித்து வந்தாலும் நிவாரணம் கிடைக்கும்.

ஆப்பிள் சீடர் வினிகரை தண்ணீருடன் கலந்து உடலில் தடவி சிறிது நேரம் சென்று குளித்து வந்தால் நல்ல மாற்றம் கிடைக்கும் .

சோற்று கற்றாழையினை உடல் முழுவதும் தடவி குளித்து வந்தால் நல்ல மாற்றம் கிடைக்கும்.

பால், தேன் மற்றும் நீர் கலந்து உடலில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்து விடலாம்.

அரிப்பு நேரங்களில் அதிகமாக பருத்தி ஆடைகளை மட்டுமே பயன்படுத்துங்கள்.

ஆப்பசோடா உப்பினை நீரில் கலந்து உடலில் தடவி சில நிமிடங்கள் தாண்டி குளித்தால் அரிப்பு வெகுவாய் அடங்கும். இதனை செய்வதற்கு முன் உடலில் சிறிய இடத்தில் சற்று தடவி சோதனை செய்து பின்னர் பயன்படுத்துங்கள்.

துளசி, புதினா, கொத்தமல்லி தழை போன்றவைகளை அதிகம் பயன்படுத்துங்கள்.

டீயில் துளசியினை கலந்து குடிக்கலாம்.

காபியை அருந்துவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

அதிக வாசனை கொண்ட சோப்புகளை அதிகம் பயன்படுத்த வேண்டாம்.

குறிப்பு: மேற்கூறிய முறைகளில் எதாவது ஒன்றை கடைபிடித்தாலே எளிதில் குணமடையலாம்.

Related posts

Leave a Comment