ஷாப்பிங்

இந்த தயாரிப்புகள் உங்களுக்கு எப்பொழுதும் தேவை ! புடிச்சா உடனே ஆர்டர் பண்ணுங்க

ஆன்லைன் வணிகம் தற்பொழுது மிகவும் எளிதாகி விட்டது. நாம் நினைக்கும் பொருட்களை எல்லாம் நாம் நினைத்த இடத்திலிருந்து ஆர்டர் செய்தால் அந்த பொருட்கள் சில நாள்களில் நம்முடைய வீட்டிற்கே வந்துவிடும். நீங்கள் எந்த பொருளை வாங்கவும் தேடி அலைய வேண்டாம். இப்படி தினமும் நாம் பல்வேறு வகையான பொருட்களை ஆன்லைன் சந்திகளில் இருந்து வாங்கி பயன்படுத்தி கொண்டிருக்கிறோம். அதில் பல பொருட்கள் மிகவும் உபயோகமானதாக இருக்கும். ஆனால் பலருக்கும் இப்படி ஒரு பொருள் இருப்பதே தெரியாது. அப்படி நாம் பார்க்க கூடிய இந்த பொருட்கள் உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என நம்புகிறோம். வாருங்கள் என்னென்ன பொருட்கள் வித்தியாசமாக நமக்கு உபயோகமாக இருக்கும் என பார்க்கலாம்.

1. U வடிவ தலையணை

இந்த வித்தியாசமான தலையணை கர்ப்பம் தரித்திருக்கும் தாய்மார்களுக்கு படுப்பதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். கர்ப்பிணிகள் இரவில் நல்ல தூக்கத்தை பெறவும் தனித்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிகள் தங்கள் வசதிக்கேற்ப இதை பயன்படுத்தலாம். அதுமட்டுமல்லாமல் ஒரு சில நோயாளிகளுக்கும் இது பரிந்துரைக்கப்படுகிறது. ஃபைப்ரோமியால்ஜியா, சியாட்டிகா, காஸ்ட்ரிக் ரிஃப்ளக்ஸ் அமிலம் மேலேறுவதால் அடிக்கடி நெஞ்சு எரிச்சல் ஏற்படுபவர்களுக்கு, கார்பல் டன்னல் சின்ரோம் இப்படி பல நோய் பிரச்னை உள்ளவர்களுக்கு நல்ல ஒரு தூக்கத்தை இந்த தலையணை கொடுக்குமாம்.

இந்த தலையணை முதுகு, தொப்பை, தலை, முழங்கால்கள் மற்றும் கால்களுக்கு ஆதரவாக இருப்பதால் ஒரு நிம்மதியான உணர்வு கிடைக்கிறது. நல்ல சுகமான தூக்கத்திற்கு அனைவரும் இதை பயன்படுத்தலாம். இதன் உறை 100 சதவிகிதம் தூய பருத்தியால் செய்யப்பட்டது. இது நீண்டகாலம் உழைக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் உறையை தனியாக கழற்றி நீங்கள் துவைத்து பயன்படுத்தும் வகையில் ஜிப்பர் ஒன்றும் உள்ளது. இது நேவி,க்ரே,மெரூன்,டார்க் பிரௌன் என 4 வர்ணங்களில் கிடைக்கிறது.
வாங்கும் லிங்க்

2. பில்லோ ப்ரொடெக்டர் கவர்

பாதுகாக்கப்பட்ட தலையணை உறை. இந்த தலையணை உறையில் அப்படி என்ன விஷேஷம் என்றால் அலர்ஜி பிரச்சனை இருப்பவர்களுக்கு இது மிகசிறந்த ஒரு பொருள். சிலருக்கு தலையணையில் சிறு பூச்சிகள் மற்றும் தூசுக்களால் அடிக்கடி ஒவ்வாமை பிரச்சனை ஏற்படும். அப்படி உங்களுக்கு அலர்ஜி பிரச்சனை இருந்தால் இந்த தலையணை உறை உங்களுக்கு உதவும்.

இது 100 % பருத்தியால் தயாரிக்கப்பட்டுள்ளது. நீர்புகா அமைப்பை கொண்டுள்ளது. உறையை முழுவதுமாக மூட ஒரு மென்மையான ஜிப் உள்ளது. இந்த உறையை உலர் சலவை அதாவது ட்ரை கிளீன் செய்ய கூடாது. மெஷினில் துவைத்து குறைந்த வெப்பத்தில் உலர வைக்கலாம். 1 ஆண்டு வரையறுக்கப்பட்ட உத்தரவாதம் இந்த உறைக்கு உள்ளது.
வாங்கும் லிங்க்

3. போர்ட்டபிள் கார் வேக்குவம் கிளீனர்

விலையுயர்ந்த காரை நாம் வாங்கி வைத்திருப்போம். காரை எப்பொழுதும் பளபளப்பாக துடைத்து புதிது போல் வைத்திருப்போம். ஆனால் காரின் சீட் இடுக்குகள், ஜன்னல் இடுக்குகள், கை வைத்து துடைக்க கடினமான காரின் உள் பகுதிகளில் தூசுக்களும், அழுக்குகளும் சேர்ந்து சில நேரங்களில் நமக்கு தர்ம சங்கடத்தை தரும். அப்படி காரின் உள் இருக்கும் தூசுக்களை இழுத்து வெளியேற்ற கையடக்க வகையில் உள்ள போர்ட்டபிள் கார் வேக்குவம் கிளீனர் உங்களுக்கு உதவும்.

இது துருப்பிடிக்காத எஃகு HEPA பில்டர் கொண்டு இருக்கிறது. இது கருப்பு நிறத்தில் இருக்கும் பெர்க்மேன் பிராண்ட் . 12 வோல்ட் பேட்டரி ஆற்றல் மூலம் இயங்குகிறது. இதன் நீளம், அகலம்,உயரம் 40 x 12 x 12 சென்டிமீட்டர் கொண்டது. இதில் அதிக சக்தி கொண்ட 100% காப்பர் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. 30 நிமிடங்கள் வரை தொடர்ந்து பயன்படுத்தலாம்.
வாங்கும் லிங்க்

4. ஜார் மற்றும் பாட்டில் ஓப்பனர்

உணவுப்பொருட்கள் அடைக்கப்பட்டு வரும் ஜாடிகள் மற்றும் பாட்டில்களின் மூடிகள் இறுக்கமாக அடைக்கப்பட்டிருப்பதால் பெண்கள் மற்றும் குழந்தைகள் திறக்க கொஞ்சம் கடினமாக இருக்கும். ஊறுகாய் பாட்டில், சாஸ் பாட்டில், ஜாம் பாட்டில் இப்படி பலவிதமான ஜார் மற்றும் பாட்டில்களை எளிதில் ஓப்பன் செய்யும் வகையில் இந்த ஜார் மற்றும் பாட்டில் ஓப்பனர் சந்தைக்கு வந்துள்ளது. இந்த ஜி.டி.சி மல்டி பர்பஸ் கிரிப் ஜார் & பாட்டில் ஓப்பனர் ரப்பர் டிசைன் அனைத்து பாட்டில்களுக்கும் பொருந்துகிறது. திறப்பதற்கு இதன் கைப்பிடி மிகவும் எளிதாக இருக்கும்.
வாங்கும் லிங்க்

5. காபி ஃபேஸ் மாஸ்க்

எண்ணெய் சருமத்தை பொலிவாக்கி சூரிய ஒளியால் ஏற்படும் கருமையை போக்க கூடிய ஃபேஸ் மாஸ்க். மேக்கபெயின் நேக்டு ரா காபி ஃபேஸ் மாஸ்க். எண்ணெய் சருமம் மற்றும் கலவையான தோல் சருமத்தை சமநிலை செய்யும் வகையில் நுட்பமான நோக்கத்திற்காக இந்த காபி ஃபேஸ் மாஸ்க் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உங்கள் சருமத்திலிருந்து அதிகப்படியான எண்ணெய் மற்றும் முகப்பரு தழும்புகளை நீக்கி, தூய்மையான இயற்கை ஆர்கான் எண்ணெயை சமநிலைப்படுத்துகிறது.

தேவையற்ற பழுப்பு மற்றும் கருப்பு வளையங்களை நீக்குகிறது. இது முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்ற உதவுகிறது. அழுக்கு மற்றும் அசுத்தங்களை உறிஞ்சி உங்களுக்கு ஈரப்பதமான இளமை மற்றும் ஒளிரும் சருமத்தை அளிக்கிறது. காஃபின் சருமத்தை மேம்படுத்துகிறது. இதில் உள்ள வைட்டமின் ஈ உங்களுக்கு ஆரோக்கியமான பிரகாசத்தை அளிக்கிறது.
வாங்கும் லிங்க்

Related posts

Leave a Comment