January 31, 2023
வேலைகள்

தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கக் கடைசி நாள் – 02/01/2023

சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவு விளையாட்டு கோட்டாவில் சம்பள நிலை 2,3,4,5 பிரிவுகளில் உள்ள இருபத்திஒன்று காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான விவரங்கள் இந்த பதிவில்…

பணியின் விவரங்கள்:

நிலை 4/5 சம்பள பணிகள்:

விளையாட்டு பிரிவு – கூடைப்பந்து(ஆண்)
பணியிடம் – 2

விளையாட்டு பிரிவு – கூடைப்பந்து(பெண்)
பணியிடம் – 1

விளையாட்டு பிரிவு – கிரிக்கெட்(பெண்)
பணியிடம் – 1

விளையாட்டு பிரிவு – கைப்பந்து(பெண்)
பணியிடம் – 1
மொத்தம் -= 5

நிலை 2/3 சம்பள பணிகள்:

விளையாட்டு பிரிவு – கூடைப்பந்து(ஆண்)
பணியிடம் – 2

விளையாட்டு பிரிவு – கூடைப்பந்து(பெண்)
பணியிடம் – 2

விளையாட்டு பிரிவு – கிரிக்கெட்(ஆண்)
பணியிடம் – 2

விளையாட்டு பிரிவு – ஹாக்கி(ஆண்)
பணியிடம் – 3

விளையாட்டு பிரிவு – நீச்சல்(ஆண்)
பணியிடம் – 1

விளையாட்டு பிரிவு – கைப்பந்து(ஆண்)
பணியிடம் – 2

விளையாட்டு பிரிவு – கைப்பந்து(பெண்)
பணியிடம் – 2
மொத்தம் – 16

வயது வரம்பு:

இப்பணிகளுக்கு பதினெட்டு வயதில் இருந்து இருபத்தி ஐந்து வயது வரை உள்ள விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்:

நிலை – 2 – தொடக்கச் சம்பளம் – ரூ.19,900
நிலை – 3 – தொடக்கச் சம்பளம் – ரூ.21,700
நிலை – 4 – தொடக்கச் சம்பளம் – ரூ.25,500
நிலை – 5 – தொடக்கச் சம்பளம் – ரூ.29,200

கல்வித்தகுதி:

ஏழாவது சிபிசி படி நிலை இரண்டு மற்றும் நிலை மூன்று சம்பள பணிகளுக்கு பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நிலை நான்கு மற்றும் நிலை ஐந்து சம்பள பணிகளுக்கு டிகிரி படித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்குத் திறன் தேர்வு, விளையாட்டில் படைத்த சாதனைகள் மற்றும் கல்வித்தகுதி போன்றவற்றில் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுந்த தகுதியுடையவர்கள் https://rrcmas.in/ என்ற இணையத்தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். SC/ST/Women/ Ex. Servicemen/Persons with Disabilities பிரிவினருக்கு ரூ.250/-விண்ணப்பக்கட்டணமாகச் செலுத்த வேண்டும். இதர பிரிவினருக்கு ரூ.500/-செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க: https://iroams.com/rrc_sr_chennai_sports/

விண்ணப்பிக்கக் கடைசி நாள்:  02/01/2023

மேலும் விவரங்களுக்கு https://iroams.com/rrc_sr_chennai_sports/pdfs/RRC_English%203%20pages_.pdf

Related posts

Leave a Comment