September 28, 2022
சமையல்

விநாயகர் சதுர்த்தியை ஆரோக்கியத்துடன் சேர்த்து கொண்டாடுவதற்கு ஸ்பெஷல் சுண்டல் ரெசிபி

விநாயகர் சதுர்த்தி நாளில், கொழுக்கட்டை, சுண்டல், வடை போன்ற உணவு தானியங்களை பிள்ளையாருக்கு வைத்து பூஜை செய்து, உற்றார் உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் கொடுத்து மகிழ்வார்கள்.

அதிலும், ஆரோக்கியம் நிறைந்த சுண்டல் ரெசிபி விநாயகப் பெருமானுக்கு விருப்பமானது. இதை நம் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். இதன் செய்முறை விளக்கத்தை இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

இதை நீங்கள் வெள்ளை கொண்டைக்கடலை அல்லது கருப்பு கொண்டைக்கடலை எதில் வேண்டுமானாலும் செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

சுண்டல் – ஒரு கப்

வெங்காயம் – ஒரு கப்

கடுகு – அரை டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்

எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – ஆறு

தேங்காய்த் துருவல் – ஒரு கப்

மாங்காய்த் துருவல் – ஒரு கப்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் சுண்டலை முதல் நாள் இரவே ஊறவைத்து கொள்ள வேண்டும். பின்னர் மறுநாள் காலை எழுந்து குக்கரில் சிறிது எண்ணெய், உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, சேர்த்து தாளித்து விடவும். பின்னர், நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

பின்னர், அதனுடன் வேக வைத்த சுண்டலைச் சேர்த்துக் கிண்டவும், தேங்காய்த் துருவல், மாங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.

விநாயகருக்கு மிகவும் பிடித்தமான இந்த சுண்டல் ரெசிபியை விநாயகர் சதுர்த்தி நாளில் கட்டாயம் செய்து அசத்துங்கள்.

Related posts

Leave a Comment