கனவுகள்

அணில் உங்கள் கனவில் வந்தால் கனவு பலன்கள்

நீங்கள் உங்கள் கனவில் அணிலை கண்டால் அதற்கு என்னென்ன அர்த்தங்கள் உள்ளது என்பதை பற்றி பார்ப்போம்.

அணில் வேகம் மற்றும் சுறுசுறுப்பின் அடையாளம். அணிலை பற்றி நீங்கள் காணக்கூடிய கனவு உங்களுக்கு வரவிருக்கும் ஒரு சில பிரச்சனைகளை எதிர்கொள்ள நீங்கள் தயாராக இருக்க வேண்டிய நேரம் என்பதை குறிக்கிறது.

உங்கள் கனவில் நீங்கள் அணில் விளையாட வருவதை போல கண்டால் உங்களுடைய எதிர்காலத்தில் நீங்கள் சந்திக்க வேண்டிய சவால்களை எதிர்கொள்ள தயாராகும் நேரம் என்ற உண்மையை வெளிப்படுத்துகிறது.

விளையாட்டுத்தனமான அணிலை நீங்கள் கனவில் கண்டால் நீங்கள் கொஞ்சம் கடினமாக உழைக்கிறீர்கள் இருந்தாலும் அதன் பலன் உங்களுக்கு கிடைக்க சிறிது காலம் ஆகும் என்பதை இது குறிக்கிறது. சமீபகாலமாக நீங்கள் சோம்பேறித்தனமாக இருந்தால் அதிலிருந்து வெளிவந்து உங்கள் கடமையை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என அர்த்தம்.

ஒன்றும் செய்யாமல் சோம்பேறியாக உட்கார்ந்திருக்கும் அணிலை நீங்கள் உங்கள் கனவில் கண்டால் உங்கள் நண்பர்கள் உங்களிடமிருந்து பிரிந்து செல்லப் போகிறார்கள். அதற்காக நீங்கள் கவலைப்பட போகிறீர்கள் என்பதை குறிக்கிறது. மேலும் நீங்கள் உங்களுடைய நண்பர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாமல் இருந்ததால் உங்கள் நண்பர்களுக்கிடையே மனம் முறிவு ஏற்படப் போகிறது என்பதை குறிக்கிறது.

ஒரு அணில் இரு கால்களில் நின்று விதைகளை பிடித்து வைத்து கொண்டு உற்சாகத்துடன் மென்று சாப்பிட்டு கொண்டிருப்பதை நீங்கள் உங்கள் கனவில் கண்டால் சந்தோஷமான வாழ்க்கைக்குத் தயாராகுங்கள் என்பதை இது குறிக்கிறது. இந்த கனவுக்குப் பிறகு நீங்கள் எதையும் பெற அவசரப்பட வேண்டாம். மிகப்பெரிய அளவில் பொன், பொருள், செல்வம், புகழ் எல்லாம் உங்களை தேடி வரப்போகிறது என்பதை குறிக்கிறது.

உங்கள் கையிலிருந்து ஒரு அணிலுக்கு உணவு கொடுப்பது போல நீங்கள் கனவு கண்டால் நீங்கள் இனி எப்பொழுதும் மிகவும் பரபரப்பாகவும், விளையாட்டுத்தனமாகவும் இருப்பீர்கள் என்று அர்த்தம். இவை அனைத்தும் உங்களுக்கு மகிழ்ச்சியையும் தருகிறது.

நீங்கள் உங்கள் கனவில் ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்குத் தாவிக்கொண்டு ஓய்வில்லாமல் இருக்கும் அணிலை கண்டால் உங்கள் நண்பர்கள் மூலமாக நீங்கள் நினைத்து கொண்டிருந்த முக்கியமான ஒரு காரியம் நிறைவேறாமல் போகும் என்பதை குறிக்கிறது.

நீங்கள் உங்களுடைய கனவில் ஒரு அணில் குதிக்கும் போது கீழே விழுவதை போல கண்டால் உங்களிடம் வேண்டுமென்றே வீம்பு செய்ய ஒரு நபர் உங்களை தேடி வருவார் என அர்த்தம்.

நீங்கள் உங்களுடைய கனவில் அணிலுடன் சிறிய அணில்களை சேர்த்து பார்த்தால் உங்கள் குழந்தைகளுடன் சில எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.

மரத்தடியில் இருக்கும் நரியை அணில் பயப்படாமல் பார்ப்பதை போல நீங்கள் உங்கள் கனவில் கண்டால் இந்த கனவு நீங்கள் பயந்து கொண்டிருந்த ஒரு விஷயத்தில் இருந்து வெளிவர உங்களுக்கு பலத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கும். உங்களுக்கு தொடர்ந்து பிரச்சனைகளை கொடுத்துக்கொண்டிருக்கும் எதிரிகளை நீங்கள் வெல்வீர்கள்.

அணில் உங்களுடைய கனவில் இறந்துவிட்டது போல நீங்கள் கண்டால் உங்களுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்த ஒரு பிரச்சனை முடிவுக்கு வரப்போகிறது என்பதை இது குறிக்கிறது.

நீங்கள் உங்களுடைய கனவில் ஒரு அணிலைத் துரத்துவது போல கண்டால் விரைவில் நீங்கள் மிகப்பெரிய பணக்கஷ்டத்திற்கு உள்ளாக போகிறீர்கள் என்பதை இது குறிக்கிறது. இப்படிப்பட்ட கனவு உங்களுக்கு வந்தால் அதன் பிறகு நீங்கள் கவனமாகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும்.

பெண்கள் நீங்கள் உங்களுடைய கனவில் அணிலை கண்டால் விரைவில் உங்களுக்குப் பிடித்த ஒரு நபரால் ஏமாற்றப்படுவீர்கள் என்பதை இது குறிக்கிறது.

நீங்கள் பிறருடைய ஏதோ ஒரு பொருளை அவர்களுக்கு கொடுக்காமல் உங்களிடமே வைத்திருக்கிறீர்கள், இதனால் மிகப் பெரிய பிரச்சனையை சந்திக்கப்போகிறீர்கள் என்பதை குறிக்கிறது. அப்படி ஏதாவது ஒரு பொருள் உங்களிடம் இருந்தால் உடனடியாக அதை கொடுத்து விடுவதே நல்லது. இதனால் பெரிய பிரச்சனையில் இருந்து நீங்கள் தப்பிக்கலாம்.

நீங்கள் உங்களுடைய கனவில் ஒரு அணில் பூங்காவில் இருக்கும் போது உங்களை முறைத்து பார்த்துக் கொண்டிருக்கிறது போல கண்டால் நீங்கள் தொழில், வேலை அல்லது உறவுகளை சரியாக கவனிக்காமல் இருக்கிறீர்கள் என்பதை இது குறிக்கிறது. இதனால் உங்களுடைய வாடிக்கையாளர்கள் அல்லது குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களிடமிருந்து பிரிந்து செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

உங்களுடைய கனவில் அணில் உங்களைப் பின்தொடர்ந்து துரத்துவது போல கனவு காண்பது நீங்கள் செய்யக்கூடிய செயல்களை பிறர் கூர்மையாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை குறிக்கிறது. நீங்கள் செய்யக்கூடிய செயல்களை வைத்து ஏதோ தவறான விஷயங்களை செய்கிறீர்கள் என்ற தவறான புரிதல்கள் உங்களை சுற்றி இருப்பவர்களிடம் ஏற்படும்.

அணில் உங்களுடன் பேசுவதை போல நீங்கள் உங்கள் கனவில் கண்டால் அது என்ன சொல்ல வருகிறது என்பதை உன்னிப்பாக கவனியுங்கள். அது உங்கள் ஆழ்மனதின் வெளிப்பாடாக கூட இருக்கலாம். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்தித்துக் கொண்டு வரக்கூடிய மிகப்பெரிய ஒரு பிரச்சனையில் இருந்து உங்களுக்கு விடுபடுவதற்கு நல்ல ஒரு தீர்வு கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

நீங்கள் உங்கள் கனவில் அணில் ஒரு மரக்கிளையில் இருந்து மற்றோரு மரக்கிளைக்கு தாவுவது போல நீங்கள் கண்டால் உங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து வெற்றி பெறுவதற்கு திட்டமிடல் வேண்டும் என்பதைக் குறிக்கிறது. நீங்கள் தொழில் மற்றும் வேலை செய்யும் இடங்களில் உங்கள் அருகில் இருப்பவர்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்பதையும் குறிக்கிறது.

நீங்கள் உங்களுடைய கனவில் ஒரு அணில் தூங்குவதைப் போல கண்டால் உங்கள் தொழில் மற்றும் வேலைகளால் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கிறீர்கள். தற்பொழுது உங்களுடைய வாழ்க்கை நிம்மதியாக இல்லை. உங்களுடைய உடல்நிலை உங்களை அறியாமல் மிக மோசமாக சென்று கொண்டிருக்கிறது. மிகவும் கடினமாக உழைத்து கொண்டிருக்கிறீர்கள்.

நீங்கள் இனிவரும் வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பதற்காக உங்களுடைய தொழில் மற்றும் வேலைகளிலிருந்து சிறிது விலகி இருங்கள். கொஞ்சம் ஓய்வெடுப்பது நல்லது. மனதை சந்தோசமாக வைத்திருந்தால் நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகள் உங்களுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தரும்.

நீங்கள் உங்களுடைய கனவில் வால்நட் சாப்பிடக்கூடிய அணில்களை கண்டால் விரைவில் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் ஏற்படப் போகிறது என்பதை குறிக்கிறது. உங்களுடைய வேலையில் மிக சிறந்த வருமானம் கிடைக்கும். உங்களுடைய அறிவு புத்தி காரணமாக மிக சந்தோஷமான வாழ்க்கையை வாழப் போகிறீர்கள்.

நீங்கள் உங்களுடைய கனவில் அணில் ஓடுவது போல கண்டால் உங்களுக்கு ஒரு சில பிரச்சனைகள் ஏற்பட போகிறது என்பதை இது குறிக்கிறது. நீங்கள் உங்களுடைய சொத்துக்கள் மற்றும் முதலீடுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இது குறிக்கிறது.

Related posts

Leave a Comment