ஸ்ரீ ஸ்வாமிநாராயண் கோவில் இந்தியாவின் குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள புஜ் என்ற இடத்தில் உள்ள கோயில். இந்த கோவிலின் திறப்பு விழா 2010 மே 15 முதல் 23 வரை நடைபெற்றது.
ஜனவரி 26 2001 அன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் புஜ் நகரின் பெரும்பாலான பகுதிகள் நாசமடைந்தது. 1824 இல் சுவாமிநாராயணனால் கட்டப்பட்ட ஸ்ரீ ஸ்வாமிநாராயண் கோவிலும் நாசமடைந்தது.
இதற்குப் பதிலாக புதிய கோயில் பளிங்கு மற்றும் தங்கத்தால் கட்டப்பட்டது. சுவாமிநாராயணன் சிலைக்கான சிம்மாசனம், கோவிலின் குவிமாடங்கள் மற்றும் கதவுகள் தங்கத்தால் செய்யப்பட்டுள்ளன.
தூண்கள் மற்றும் கூரைகள் பளிங்குகளால் செய்யப்பட்டுள்ளன. ஹரி கிருஷ்ணா வடிவில் உள்ள நர் நாராயண் மற்றும் ஸ்வாமிநாராயணனின் கடவுள் உருவங்கள் பழைய கோவிலில் இருந்து புதிய கோயிலுக்கு மாற்றப்பட்டன.
புதிய கோயில் 100 கோடி ரூபாய் செலவில் 5 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டது. பளிங்குக் கல்லில் செய்யப்பட்ட சிற்ப வேலைப்பாடுகள் குஜராத்தில் கட்டப்பட்ட மிக விலையுயர்ந்த கோவிலின் தூண்கள் மற்றும் கூரையை அலங்கரிக்கின்றன.
இங்கிலாந்து மற்றும் ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகள் உட்பட வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஏராளமானோர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.