January 31, 2023
தகவல்

உலக புகழ் பெற்ற மிகப்பெரிய திருவள்ளுவர் சிலை

கன்னியாகுமரி மாவட்டம் சுற்றுலா தலங்களுக்கு புகழ்பெற்றது. அதில் மிகவும் முக்கியமானதும் உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் சிறப்பு பெற்ற கன்னியாகுமரி கடல் பாறையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை.

கன்னியாகுமரி கடற்கரையில் நாம் பார்க்க வேண்டிய மிக முக்கியமான இடங்களில் ஒன்று திருவள்ளுவர் சிலை. உலக பொதுமறையை தமிழுக்கு கொடுத்த அய்யன் திருவள்ளுவரின் சிலை ஜனவரி 1ம் தேதி 2000 ம் ஆண்டில் கன்னியாகுமரி கடலின் நடுவே உள்ள நீர்மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறை மீது நிறுவப்பட்டு திறக்கப்பட்டது. இந்த சிலை அமைக்கும் பணி 1990 ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

இது விவேகானந்தர் பாறைக்கு அடுத்து நிறுவப்பட்டிருக்கிறது. பல கற்களைக் கொண்டு கட்டப்பட்ட பல மாடிக் கட்டிடம் போன்ற அமைப்பு கொண்டதாகும் இந்த சிலை. உலகில் இது போன்ற கருங்கற்களால் ஆன சிலை இது வரை இல்லை.

சிலையினுள் 130 அடி உயரம் வரை வெற்றிடம் உள்ளது. இந்த வெற்றிடம் சிலையின் ஸ்திரத் தன்மையை உறுதிப்படுத்தும் தன்மையுடையது. கல்லால் ஆன உத்திரங்களும், கட்டாயங்களும் பரவப்பட்டு சிலை எப்பக்கத்திலும் சாய்ந்து விடாது நேரே நிற்குமாறு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மேடையின் உயரம் 38 அடியாகும். இது திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளின் 38 அறத்துப்பாலை குறிக்கும். மேடையின் மேல் இருக்கும் சிலையின் உயரம் 95 அடியாகும். இது 25 இன்பத்துப்பாலையும் 70 பொருட்பாலையும் குறிக்கும்.

மண்டபத்தின் உட்புறச் சுவற்றில் ஒவ்வொரு அதிகாரத்திலிருந்து ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் தமிழிலும் அவற்றுக்கு நிகராக ஆங்கில மொழி பெயர்ப்பிலும் பொறிக்கப்பட்டுள்ளன. இச்சிலையை செதுக்கிய சிற்பியின் பெயர் Dr. வி. கண்பதி ஸ்தபதி.

சிலை குறிப்புகள்
  1. சிலையின் மொத்த எடை – 7,000 டன்
  2. சிலையின் எடை – 2,500 டன்
  3. பீடத்தின் எடை – 1,500 டன்
  4. மொத்த சிலையின் உயரம் – 133 அடி
  5. சிலையின் உயரம் – 95 அடி
  6. பீடத்தின் உயரம் – 38 அடி
  7. சிலையின் உருவாக்கம் – 3 டன் முதல் 8 டன் வரை எடையுள்ள 3681 கருங்கற்களைக் கொண்டு நிறுவப்பட்டுள்ளது.
  8. பீடத்தைச் சுற்றி அமைந்துள்ள மண்டபத்தின் எடை – 3,000 டன் சிலை அளவுகள்
  9. முக உயரம் – 10 அடி
  10. கொண்டை – 3 அடி
  11. முகத்தின் நீளம் – 3 அடி
  12. தோள்பட்டை அகலம் -30 அடி
  13. கைத்தலம் – 10 அடி
  14. உடம்பு (மார்பும் வயிறும்) – 30 அடி
  15. இடுப்புக்குக் கீழ் தொடை மற்றும் கால் – 45 அடி
  16. கையில் ஏந்திய திருக்குறள் ஏட்டின் நீளம் – 10 அடி

Related posts

Leave a Comment