June 10, 2023
சமையல்

உங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு இனி இப்படி வெல்கம் ட்ரிங்க் செய்து கொடுத்து அசத்துங்க…!

உங்கள் வீட்டிற்கு உறவினர்கள் அல்லது நண்பர்கள் என்று விருந்தினர்கள் திடீர் என்று வந்துட்டாங்களா ? அவர்களை வரவேற்க ஏதாவது ஸ்பெஷலா புதுமையா செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களா ?

வழக்கமாக நம் வீட்டில் வரும் விருந்தினருக்கு டீ , காபி அல்லது ஜூஸ் என்று நாம் செய்து கொடுப்போம். இந்தமுறை நீங்கள் இந்த வெல்கம் ட்ரிங்க்கை செய்து கொடுத்து பாருங்க… மிகவும் அருமையாக இருக்கும்.

இதனை அனைவரும் விரும்பி சுவைத்து குடிப்பார்கள். குறிப்பாக குழந்தைகள் இதனை கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் குடித்து மகிழ்வார்கள்.

அப்படிப்பட்ட சூப்பரான வெல்கம் ட்ரிங்க்கை நாம் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

கெட்டி பால் – அரை லிட்டர்

கடற்பாசி பவுடர் – நான்கு ஸ்பூன்

சர்க்கரை – மூன்று ஸ்பூன்

புட் கலர் – ஒரு சிட்டிகை

ஜவ்வரிசி – அரை கப்

மில்க்மேட் – இரண்டு ஸ்பூன்

செய்முறை:

முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, தண்ணீர் சேர்க்காமல் சிம்மில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.

பின் பால் ஆறிய பிறகு அதனை ஃப்ரிட்ஜில் இரண்டு மணி நேரம் குறைந்தது வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு கிண்ணத்தில் கடற்பாசி மற்றும் சர்க்கரையை மூன்று கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் கொதிக்க வைக்க வேண்டும்.

கொதித்த பின்பு புட் கலர் சேர்த்துக் கொண்டு நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

கலவை ஆறிய பிறகு அதனை பெரிய தட்டில் ஊற்றி கத்தி வைத்து ஒரே அளவிலான சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக ஜவ்வரிசியை இருமுறை அலசிவிட்டு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, சுமார் பத்து நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை தண்ணீர் இல்லாமல் வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

ஊறிய ஜவ்வரிசியை குக்கரில் போட்டு இரண்டு கிளாஸ் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து ஒரு விசில் வரும் வரை வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

விசில் அடங்கி ஆறிய பிறகு குக்கரை திறந்து., வெந்துள்ள ஜவ்வரிசியை இரண்டு முறை கழுவி வடிகட்டி தனியாக எடுத்து கொள்ள வேண்டும்.

இப்போது ஃப்ரிட்ஜில் இருக்கும் பாலை எடுத்து, ஒரு பாத்திரத்தில் அல்லது கண்ணாடி கப்பில் ஊற்றி, அதில் வேக வைத்த ஜவ்வரிசி கொஞ்சம் சேர்த்து, சில ஜெல்லிகள் மற்றும் இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

இறுதியில் இந்த கப்பில் சிறிது மில்க்மேட் சேர்த்து கொஞ்சம் மிக்ஸ் செய்து விட்டு, மீண்டும் ஃப்ரிட்ஜில் வைத்து விட்டு, விருந்தினர்கள் வந்த பிறகு இதனை ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து பரிமாறினால் சூப்பரான அசத்தலான வெல்கம் ட்ரிங்க் ரெடி…!

Related posts

Leave a Comment