ரெண்டகம்:
அரவிந்த்சாமி நடிப்பில் “ரெண்டகம்” படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை இயக்குனர் ஃபெலினி இயக்கியுள்ளார். மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் இந்த படத்தின் மூலமாக தமிழ் திரை யுலகில் அறிமுகமாகிறார்.
கௌதம் சங்கர் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அப்பு பட்டதரி எடிட்டிங் பணிகளை மேற்கொள்ள, அருள்ராஜ் கென்னடி இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்தப் படம் வரும் வெள்ளிக்கிழமை இருபத்தி மூன்றாம் தேதி அன்று வெளியாகவுள்ளது.
பபூன்:
அறிமுக இயக்குனர் அசோக் வீரப்பன் இயக்கத்தில் நடிகர் வைபவ் நடித்துள்ள திரைப்படம் “பபூன்” இந்த படத்தில் நாயகியாக நடிகை அனகா நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் ஜோஜு ஜார்ஜ், அந்தக்குடி இளையராஜா, நரேன், மூனர் ரமேஷ், தமிழ், ஆடுகளம் ஜெயபாலன் நடித்துள்ளனர்.
கார்த்திக் சுப்பராஜ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் வரும் வெள்ளிக்கிழமை இருபத்தி மூன்றாம் தேதி அன்று வெளியாகவுள்ளது.
ஆதார்:
நகைச்சுவை நடிகர் கருணாஸ் தற்போது “ஆதார்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் சர்வதேச பட விழாக்களில் பத்தொன்பது விருதுகளை பெற்றுள்ளது. இந்த படத்தை அம்பாசமுத்திரம் அம்பானி, திருநாள் போன்ற படங்களை இயக்கிய ராம்நாத் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் ரித்விகா நாயகியாக நடிக்க, ஸ்ரீகாந்த் தேவா இசையமைத் துள்ளார். இந்தப் படம் வரும் வெள்ளிக்கிழமை இருபத்தி மூன்றாம் தேதி அன்று வெளியாகவுள்ளது.
ட்ரிக்கர்:
“குருதி ஆட்டம்” படத்தைத் தொடர்ந்து “டார்லிங்”, “கூர்கா” படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படம் “ட்ரிக்கர்”. பிரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பாவின் பிரமோத் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
அதர்வாவுடன் தான்யா ரவிச்சந்திரன், அருண் பாண்டியன், முனிஷ் காந்த உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் வெள்ளிக்கிழமை இருபத்தி மூன்றாம் தேதி அன்று வெளியாகவுள்ளது.
குழலி:
“காக்கா முட்டை” படத்தில் நடித்த விக்னேஷ், ஆரா நடித்த படம் “குழலி”. செரா.கலையரசன் இயக்கி உள்ளார். ஷமீர் இசை அமைத்துள்ளார். டி.எம்.உதயகுமார் இசை அமைத்துள்ளார்.
கிராமத்து பின்னணியில் உருவான இந்த காதல் திரைப்படம் பல்வேறு சர்வதேச பட விழாக்களில் கலந்து கொண்டு சிறந்த இசை, சிறந்த நடிப்பு, சிறந்த படம் உள்ளிட்ட பிரிவுகளில் பதினாறு விருதுகளை பெற்றுள்ளது. மொழித்திரைக்களம் என்ற நிறுவனம் வெளியிடுகிறது. இந்தப் படம் வரும் வெள்ளிக்கிழமை இருபத்தி மூன்றாம் தேதி அன்று வெளியாகவுள்ளது.