November 27, 2022
செய்திகள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உதவிப் பேராசிரியர் காலிபணியிடங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மருத்துவப் பணியில் அடங்கிய உளவியல் உதவிப் பேராசிரியர் உடன்கலந்த மருத்துவ உளவியலாளர் பதவிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளாது. இப்பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகளை இதில் தெரிந்துகொள்ளுங்கள்.

பணியின் விவரங்கள்:

பணியின் பெயர் – தமிழ்நாடு மருத்துவப் பணிகள்

பதவியின் பெயர் – உளவியல் உதவிப் பேராசிரியர் உடன்கலந்த மருத்துவ உளவியலாளர்

காலிப்பணியிடங்கள் – 24

சம்பள விவரம் – ரூ.56,100 – 2,05,700/- வரை

பணிக்கான வயது வரம்பு – ஆ.தி.ஆ.தி(அ),ப.ப, பி.பி.வ, சீ.ம, பி.வ, பி.வ(மு) மற்றும் அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் வயது வரம்பு இல்லை. இதர பிரிவினருக்கு 37 ஆண்டுகள். வயது வரம்பு சலுகைகளுக்கு அறிவிப்பைப் பார்க்கவும்.

கல்வித்தகுதி:

உளவியலில் (Psychology) M.A/ B.A (Hons)/B.Sc (Hons) அல்லது உளவியல் மருத்துவம் (Clinical Psychology)பிரிவில் முதுகலை டிப்ளமோ அல்லது உளவியல் மருத்துவம் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மருத்துவ மற்றும் சமூக உளவியலில் (Medical and Social Psychology) முதுகலை டிப்ளமோ அல்லது சமூக உளவியலில் (Social Psychology) டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்குக் கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதார்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

பதிவுக் கட்டணம்: ரூ.150/-

தேர்வு கட்டணம்: ரூ.200/-

தமிழ்நாட்டில் தேர்வு நடைபெறும் இடங்கள் – சென்னை, மதுரை,கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்குத் தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் டிஎன்பிஎஸ்சி இணையத்தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணபிக்க வேண்டிய முகவரி:  https://apply.tnpscexams.in/

அறிவிப்பு வெளியான நாள் – 15.11.2022

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கக் கடைசி நாள் – 14.12.2022

ஆன்லைனில் திருத்தம் செய்ய அவகாசம் – 19.12.2022 முதல் 21.12.2022 வரை

கணினி வழி தேர்வு நாள் – 14.03.2023

மேலும் விபரங்களுக்கு https://tnpsc.gov.in/Document/tamil/33_2022_AP_PSY_TAM.pdf

Related posts

Leave a Comment