இந்த 10 அழகான விலங்குகளை இன்னும் கொஞ்சம் நாள்களில் நீங்கள் பார்க்க முடியாதாம் தெரியுமா ?

உலகிலுள்ள பல விலங்குகள் மற்றும் பறவைகள் தொடர்ந்து அழிந்து கொண்டே வருகின்றன. அரிய விலங்குகள் பட்டியலில் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் சேர்ந்து கொண்டே வருகின்றன. ஏராளமான விலங்குகள் நம்முடைய பூமியில் இருந்து முற்றிலும் அழிந்து விட்டன.

இதற்கு மிக முக்கியமான காரணம் மனிதர்களாகிய நாம்தான். விலங்குகள் மற்றும் பறவைகளின் வாழிடங்களை மனிதர்கள் தொடர்ந்து அழித்து கொண்டே வருகிறார்கள். இப்படி அழிந்து வரும் மிகவும் அரிய 10 விலங்குகளை பற்றி பார்ப்போம்.

10. பாங்கோலின்(Pangolin)

ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் காடுகள் மற்றும் புல்வெளிகளில் வாழும் பாங்கோலின் மிகவும் அழகானவை, சிறியவை. இவை அச்சுறுத்தப்படுவதாக உணர்ந்தால் உடலை வட்டமாக சுருட்டி கொண்டு காப்பாற்றிக் கொள்ளும்.

உலகில் அதிக அளவில் கடத்தப்பட்ட பாலூட்டிகள் இவைகள்தான் . ஒவ்வொரு ஆண்டும் மக்கள் செதில்கள் மற்றும் இறைச்சிக்காக 100,000 பாங்கோலின்களைப் பிடிப்பதாக ஆய்வுகள் சொல்கிறது.

உலகின் மிக சட்டவிரோதமாக விற்கப்படும் பாலூட்டியான பாங்கோலினைக் காப்பாற்றுவதற்காக விலங்குகள் பாதுகாவலர்கள் போராடுகிறார்கள்.

சீன, வியட்னாம் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மக்கள் பங்கோலின் இறைச்சியை சுவையாக இருப்பதால் அதிகம் சாப்பிடுகிறார்கள். பாரம்பரிய மருத்துவத்தில் இதன் செதில்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

இது மிகவும் மதிப்புமிக்கவை. தற்பொழுது அதிகம் அழிந்து வரும் ஒரு உயிரினம் இது. இந்தியா, சீனா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் இவைகளின் எட்டு இனங்கள் உள்ளன.

9. ஜவான் காண்டாமிருகம்(Javan Rhino)

ஜவான் காண்டாமிருகங்கள் இந்திய காண்டாமிருக இனங்களுக்கு மிக நெருக்கமானது. ஆனால் அளவில் சிறியது. ஜவான் காண்டாமிருகங்கள் ஒரு காலத்தில் இந்தோனேசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் ஏராளமாக இருந்தன.

ஆனால் இப்போது சுமார் அறுபது மட்டுமே வனப்பகுதியில் உள்ளன. அவை இப்போது மிகவும் ஆபத்தான பட்டியலில் உள்ளன. அதன் இயற்கையான வாழ்விடம் கடுமையாகக் குறைந்து விட்டது மற்றும் இதன் இனத்தையே அழித்துவிட்டது.

கடந்த 15 ஆண்டுகளில், இரண்டு பெண் சுமத்ரான் காண்டாமிருகங்கள் மட்டுமே வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்துள்ளன.

8. சிவப்பு ஓநாய்(Red Wolf )

சிவப்பு ஓநாய் சாம்பல் நிற ஓநாய்களின் நெருங்கிய இனம். கிழக்கு வட கரோலினாவில் புளோரிடா மற்றும் தென்கிழக்கு பூர்வீகமாக இருந்தாலும், வனப்பகுதிகளில் 25 முதல் 40 சிவப்பு ஓநாய்கள் மட்டுமே வாழ்வதைக் காணலாம்.

மிகவும் ஆபத்தான பட்டியலில் ஐ.யூ.சி.என் சிவப்பு ஓநாய்களை வகைப்படுத்துகிறது. இந்த புத்திசாலித்தனமான விலங்குகளை காப்பாற்றுவதற்கான பாதுகாப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆனால் அவை இன்னும் அழிவின் விளிம்பில் உள்ளன. 1980 இல் காடுகளில் ரெட் ஓநாய் அழிந்துவிட்டதாகக் கருதப்பட்டது. இப்போது காடுகளில் சுமார் 100 எண்ணிக்கையில் உள்ளதாக விலங்குகள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவைகளை அதிக அளவில் வேட்டையாடியதே இதன் அழிவிற்கு முக்கிய காரணமாக இருந்தது.

7. ஒகாபி(Okapi)

இந்த அரிய இனம் சில நேரங்களில் வன ஒட்டகச்சிவிங்கிகள் என்று அழைக்கப்பட்டாலும் நெருக்கமாகப் பார்க்கும் வரை கண்டுபிடிக்க முடியாது. ஒகாபிக்கு நீண்ட நாக்கு உள்ளது.

ஆனாலும் அவற்றின் கைகால்களில் வரிக்குதிரை போன்ற கருப்பு மற்றும் வெள்ளை கோடுகள் உள்ளன. குதிரை போன்ற உடலும் உள்ளன. ஒகாபியின் வரலாறு பண்டைய எகிப்தில் ஓவியமாக காணப்படுகிறது.

இந்த விலங்குகளின் சுவர் ஓவிய வேலைப்பாடுகளை நாம் எகிப்தில் காணலாம். இவைகளின் வாழ்விடங்கள் பெரும்பாலும் அளிக்கப்பட்டதன் காரணமாக இது அரிய விலங்குகள் பட்டியலில் உள்ளது.

6. அமுர் சிறுத்தை(Amur Leopard)

அமுர் சிறுத்தைகள் உலகில் உள்ள மிகவும் ஆபத்தான அழிவின் விளிம்பில் இருக்கும் பூனை இனமாகும். கிழக்கு ரஷ்யாவில் உள்ள அமுர் படுகையின் காடுகளில் 84 க்கும் மேற்பட்ட அமுர் சிறுத்தைகள் வசிக்கின்றன. இது ஒரு தனிமையான இரவு நேர சிறுத்தை.

அமுர் சிறுத்தை அடர்த்தியான தோல் மற்றும் நீண்ட அடர்த்தியான முடிகளை கொண்டுள்ளது. இது பனி சூழ்ந்த சுற்றுசூழலுக்குக்கேற்ப மஞ்சள் வண்ணம் முதல் ஆரஞ்சு வண்ணம் வரை நிறத்தில் மாறுபடும். சுற்றுசூழல் மாறுபாடு காரணமாக இந்த இனம் அறிய வகை பட்டியலில் சேர்ந்துள்ளது.

5. தி எலிபன்ட் ஷ்ரீயூ(The Elephant Shrew)

இந்த சிறிய ஆப்பிரிக்க கொறித்துண்ணி வித்தியாசமான மிகவும் அழகான உயிரினம். இது உலகின் மிகவும் ஆபத்தான உயிரினங்களில் ஒன்றாகும். மனிதர்களின் தொந்தரவு காரணமாக கென்யாவின் அரபுகோ சோகோக் ரிசர்வ் பகுதியில் இவைகளின் எண்ணிக்கை அதிக அளவில் குறைந்தது.

மிக முக்கியமாக இவைகளின் இறைச்சி மிகவும் சுவை காரணமாக வேட்டையாடப்பட்டதன் மூலம் அதிக அளவில் பாதிக்கப்பட்டு அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் சேர்ந்துவிட்டது.

4. ஏஞ்சல் ஷார்க்(Angel Shark)

கருங்கடல், மத்திய தரைக்கடல் மற்றும் வடக்கு அட்லாண்டிக் ஆகிய நாடுகளில் பரவிக்காணப்பட்ட இந்த ஏஞ்சல் ஷார்க் அதிக அளவில் பிடிக்கப்பட்டதால் அழியும் நிலையில் உள்ளது.

தற்பொழுது கேனரி தீவுகள் மற்றும் தெற்கு கரீபியனில், ஒரு சில ஏஞ்சல் சுறாக்கள் மட்டுமே உள்ளன. இந்த ஏஞ்சல் ஷார்க் குறிப்பாக மணலுக்கு அடியில் காணப்படும்.

ஏஞ்சல் சுறாக்கள் பெரும்பாலும் சிறிய மீன் மற்றும் பிற சிறிய கடல் விலங்குகளை சாப்பிடுகின்றன. மனிதர்கள் அதிக அளவில் ஏஞ்சல் ஷார்க்கை வேட்டையாடுவதால் தற்பொழுது அழியும் நிலையில் உள்ளது.

3. கோல்டன் டேபி டைகர்(Golden Tabby Tiger)

வன உயிரினங்களை பாதுகாக்கும் பூங்காக்களில் மட்டுமே இந்த வகை அரிய புலி காணப்படுகிறது. மற்ற புலிகளைப் போலல்லாமல், இது ஸ்ட்ராபெரி டைகர் அல்லது கோல்டன் டேபி என்றும் அழைக்கப்படுகிறது.

இத்தகைய புலிகள் 1900 களின் முற்பகுதியில் இந்தியாவில் இருந்தது. மேலும் அவை மண்ணில் அதிக களிமண் செறிவுள்ள பகுதிகளுடன் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் இருந்தது. தற்பொழுது இந்த புலிகளில் 30 க்கும் குறைவான புலிகள் மட்டுமே வனவிலங்குகள் காப்பகத்தில் உள்ளது.

2. வாகிதா(Vaquita)

நீல திமிங்கலங்கள் மற்றும் டால்பின்கள் போன்ற பல கடல் பாலூட்டிகள் ஐ.யூ.சி. என் ஆபத்தான உயிரினங்களின் பட்டியலில் இருக்கிறது. அதில் ஒரு இனம் மிகவும் அழிந்து போகும் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது அது வாகிதா.

வாகிதா கடல் பாலூட்டிகளில் மிகச் சிறியது. சுமார் நான்கு அடி அளவு கொண்டது. ஸ்பானிஷ் மொழியில், இந்த விலங்கின் பெயர் “சிறிய மாடு” என்று பொருள்.

கடல் பாலூட்டி மையம் இப்போது உலகில் சுமார் 10-15 வாகிதாக்கள் மட்டுமே உள்ளன என்றும் அவற்றின் எண்ணிக்கை மிகவும் அரிய விகிதத்தில் குறைந்துள்ளது என்றும் மதிப்பிடுகிறது.

அவற்றின் பாதுகாப்பிற்கு நாம் உறுதியான நடவடிக்கை எடுக்காவிட்டால் 2020 இறுதியில் முற்றிலுமாக இந்த உதவியற்ற விலங்குகள் அழிந்துவிடும்.

1. சாவோலா(Saola)

உலகில் மிகவும் அரிதான வகையில் அழிந்து வரும் உயிரினம் சாவோலா. விலங்குகள் பற்றிய ஆராய்ச்சியாளர்கள் இதை இப்போது வரை நான்கு முறை மட்டுமே காடுகளில் பார்த்திருக்கிறார்கள்.

உலகின் மிக அரிதான விலங்கான சாவோலா ‘ஆசிய யூனிகார்ன்’ என்று அழைக்கப்படுகின்றன. சாவோலா தனது தலையில் இரண்டு சிறிய கொம்புகளை முகத்தில் வித்தியாமான வெள்ளை அடையாளங்களையும் கொண்டது.

இதை தென்கிழக்கு ஆசியாவின் லாவோஸ் மற்றும் வியட்நாமில் மட்டுமே காண முடியும். காடுகள் அழிக்கப்பட்டு இருப்பிடங்கள் நாசமடைந்ததால் சாவோலா அழிந்துபோகும் நிலையில் உள்ளது.

மேலும் சட்டவிரோத வர்த்தகம், மருந்துகள் மற்றும் இறைச்சிக்காக மனிதர்களின் அளவுக்கதிகமான வேட்டையாடுதல் காரணமாக இந்த உயிரினம் இன்னும் சில வருடங்களில் முற்றிலுமாக நம்மை விட்டு நம்முடைய பூமியை விட்டு அழிக்கப்படும். இதுமட்டுமல்ல இன்னும் பல விலங்குகள் அழியும் தருவாயில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *