November 27, 2022
ராசிபலன்

ஆடம்பரமாக வாழ்வதில் அதிக விருப்பம் உள்ள மிதுன ராசியினரின் பொதுவான குணநலன்கள்

பொதுவாக மிதுனராசியில் பிறந்தவர்கள் உயரமான தோற்றமும், சதைப்பிடிப்பு இல்லாத ஒல்லியான உடல் அமைப்பும், நீள்வட்டம் முகமும், நேரான சற்று உயர்ந்த மூக்கும் கொண்டவர்களாக இருப்பார்கள், சற்று இரக்கம் கொண்ட பற்களும், விரிந்த மார்பும், மார்பில் ரோமமும், வயதான பிறகு தொப்பையும் கொண்டவர்களாக இருப்பார்கள்

மிதுன ராசியின் அதிபதி புதன் பகவானாவார். மிதுனராசியில் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்களும், திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரத்தின் 1,2,3 ம் பாதங்கள் ஆகியவை அடங்கும். இவர்கள் எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் அதை துல்லியமாக எடைபோட்டு நீதி வழங்குவார்கள்.

இவர்கள் யாருடைய துணையும்மின்றி தனியாக வாழ விரும்புவார்கள். யாரிடமும் உதவி கேட்டு செல்ல மாட்டார்கள். ஆனால் பிறர் உதவி என்று வரும் போது தயங்காமல் செய்யக்கூடியவர்கள். எந்த வேலையாக இருந்தாலும் அதை ஆர்வமாக செய்வார்கள்.

இவர்கள் ஏதாவது ஒரு காரியத்தை எடுத்து கொண்டால் மிகவும் அக்கறையோடு பொறுப்பாக அதனை செய்து முடிக்கும் இயல்பு உடையவர்கள். அத்துடன் அபாரமான ஞாபக சக்தி இவர்களுக்கு உண்டு.

எந்த சந்தர்பத்திலும் கவனத்துடனும் அவதானத்துடனும் செயற்படக் கூடியவர்கள் வாழ்வில் தாம் நினைத்த இலக்குகளை அடைந்து கொள்வார்கள். பார்ப்பதற்கு அப்பாவிகள் போல காட்சியளித்தாலும் தமது காரியங்களை சாதிப்பதில் வல்லவர்களாக இவர்கள் காணப்படுவார்கள்.

அவ்வாறே தனக்கு தோன்றும் விடயங்களை வெளிப்படையாக பேசக்கூடியவர்கள் தமக்கு பிடிக்காத விடயங்களில் மௌனமாக சென்று விடுவார்கள். பிறரை கேலியாகவும் கிண்டலாகவும் பேசும் இவர்கள் பேச்சாற்றல் நிறைந்தவர்களாக காணப்படுவர்.

எப்போதும் தன்னை மற்றவர்கள் புகழவேண்டும் என்பதில் அதிகம் விருப்பம் உடையவர்களாக இருப்பர். பெரும்பாலும் ஆடம்பர வாழ்க்கையினை வாழ விரும்புவார்கள். எல்லா சுகங்களையும் பெற்று சுக போகமாக வாழ விரும்புவார்கள்.

பெற்றோர்களை மதிப்பதுடனும் நண்பர்களை நேசிக்க கூடியவர்களாக இருப்பர். எதையும் அவசரமாக முடிவெடுத்து பின் சிக்கல்களில் மாட்டி கொள்வார்கள். எப்போதும் கடினமான வேலைகளை விட புத்திசாலித்தனமான வேலைகளையே தேர்ந்தெடுப்பார்கள்.

அடுத்தவர்களுடைய கருத்துக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதனால் பல மனக்குழப்பங்களுக்கு ஆளாவார்கள். இவர்கள் நெருங்கியவர்களுடன் கூட உதவி கேட்க தயங்குவார்கள் பிறரோடு இலகுவாக பழகி நட்பு வைக்க கூடிய இயல்புடையவர்களாக இருப்பார்கள்.

தங்களுடைய சிறப்பான பேச்சாற்றலால் மற்றவர்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாக விளங்குவார்கள். பொதுவாகவே கலையில் அதிக ஆர்வம் உடையவர்கள். தான, தர்மம் செய்வதில் வல்லவர்களாக இருப்பார்கள். எப்போதும் தமது மனதுக்கு திருப்தி தரும் காரியங்களை செய்யவே விரும்புவார்கள்.

தனிப்பட்ட முடிவுகளை எடுக்கும் போது சுயமாகவே முடிவுகளை எடுப்பார்கள். பதவிகளுக்கு பெரிதும் ஆசைப்படாத எளிமை விரும்பிகளாக இருப்பார்கள்.

மிதுன ராசிகார்கள் சேமிப்பில் அதிக ஆர்வம் காட்ட மாட்டார்கள். எவ்வளவு பணம் இருந்தாலும் அதை செலவு செய்து விடுவார்கள். இவர்கள் எதிலும் அவசரமாக முடிவு செய்து பின்பு சிக்கலில் மாட்டி கொள்வார்கள். கடின உழைப்பை தவிர்த்து புத்திசாலிதனமான வேலையையே தேர்ந்தெடுப்பார்கள்.

Related posts

Leave a Comment