November 27, 2022
கனவுகள்

நாம் காணும் தீய பலன் தரும் கனவுகள்…!

நமது ஆழ்மனதில் புதைந்துள்ள நிறைவேறாத ஆசைகள், மூளையில் பதிவான சமீபத்திய நிகழ்வுகள் தான் தூக்கத்தில் கனவுகளாக வருகின்றன. இதற்கு பலன்களாக நாம் எடுத்துக் கொள்பவை, நம்மால் ஏற்படுத்தபட்டவைதான். “அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல் லாம் பேய்” என்பது போலத்தான். கனவுகள் தொடர்பான பலன்களும். நல்ல பலன் ஏற்படும் என்று நம்பினால் நல்ல பலனை அடையலாம் அல்லது அதை நெருங்கலாம்., அதேபோன்று தான் தீயபலனுக்கும்.

பூனையை நீங்கள் கனவில் கண்டால் வியாபாரத்தில் திடீர் என நஷ்டம் ஏற்படும்.

தேனீக்கள் கொட்டுவதை போல் கனவில் கண்டால் வீண் செலவுகள் ஏற்படும், குடும்பம் பிரியும்.

எறும்புகளை கனவில் கண்டால் மன கஷ்டம் பொருள் நட்டம் உண்டாகும்.

எலிகளை கனவில் கண்டால் எதிரிகளின் பலம் பெருகும்.

இடியுடன் மழை பெய்வதைப் போல் கனவில் கண்டால், உறவினர்கள் விரோதியாவார்கள்.

பசு நம்மை விரட்டுவதை போல் கனவில் கண்டால் உடல் நலம் கெட்டு வியாதி சூழும்.

புயல் காற்று, சூறாவளி ஆகியவற்றை கனவில் கண்டால் நோய் உண்டாகும்.

குதிரையில் இருந்து விழுவதை போல் கனவு கண்டால் கொடிய வறுமை வரும், செல்வாக்கு சரியும். சோகமான செய்தி வந்து சேரும்.

நோய் பீடித்ததாக கனவு கண்டால், நண்பர் ஏமாற்றுவார்.

ஊனமாவதை போன்று கனவு கண்டால் சோகமான செய்தி வந்து சேரும்.

நிர்வாண கோலத்தை கனவில் கண்டால், அவமானம் தேடி வரும்.

முட்டை சாப்பிடுவது கனவு கண்டால் வறுமை பிடிக்கும்.

முத்தமிடுவது போல் கனவு கண்டால் செல்வாக்கு சரியும்.

சமையல் செய்வது போல் கனவு கண்டால் அவமானம் வந்து சேரும்.

பழம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் நண்பர்களால் ஏமாற்றப்படுவீர்கள்.

காக்கை கத்துவது போல் கனவு கண்டால் திருட்டு நடக்க வாய்ப்புள்ளது. குருவிகள் கூட்டைப் பார்த்தால் கூட, இந்தப் பலன் உண்டு.

ஆனால் குருவிக் கூட்டைத் தானே பிரிப்பதாய் கனவு கண்டால் துயரமிகுந்த சம்பவம் நடக்க இருக்கிறது என்பதை அறியலாம்.

குருவிகள் குதூகலமாய் இருப்பதைக் காண்பதும் நல்லதே. ஆனால் குருவிகள் சண்டை போடுவதைப் போல கண்டால் குடும்பத்தில் பிளவுகள் ஏற்பட்டு பிரிய நேரும். தொழிலும் பகை ஏற்பட்டு ஜீவனக் கேடு உண்டாகும்.

குருவிகள் இறந்து கிடப்பதைக் கண்டால்கூட கெடுபலன். பல தொல்லைகள் உண்டாகும்.

அடுப்பு எரியாமல் அதனுள் பூனையோ அதன் குட்டிகளோ இருப்பதாகக் காண நேரின் ஆரோக்கியக் கேடும், செய்தொழிலில் நஷ்¢டமும் உண்டாகும்.

எரியும் அடுப்பு அணைத்து அதன் கரியையோ சாம்பலையோ காணநேரின் எதிர்பாராத நஷ்டம் ஏற்பட்டு அதனால் துன்புறப் போவதை உணர்த்தும்.

அழுக்கு ஆடை அணிந்திருப்பதாகக் கண்டால் பலவித சங்கடங்கள் நேர இருக்கின்றன என அறியலாம்.

நம்மை யாரோ ஏமாற்றிவிட்டதாகக் கனவு கண்டால் வஞ்சகத்தால் தன்னிடமுள்ள பொருள் பறிபோகப் போகிறது என்பதை அறியலாம்.

நீர்க்குமிழியைக் கண்டால் சிறு சிறு நஷ்டங்கள் ஏற்படும். பிறர் தன் மீது வீண்பழி சுமத்துவர்.

எலுமிச்ச மரம் உலர்ந்து போய் விட்டதாகக் கண்டால் பலவித கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாக நேரும்.

அப்பழத்தைச் சாப்பிடுவதாகக் கண்டால் நல்ல தன்று. குடும்பத்தில் ஏதோ ஓர் அசம்பாவிதம் நேரப் போவதைக் குறிக்கும். காய்ச்சல், நோய் ஏற்படும்.

காதுகளைக் கண்டால் குடும்பத்தில் கலகம் ஏற்பட்டு அதனால் கஷ்டம் நேரும்.

தனக்கு காதுநோய் வந்துவிட்டதாகக் கண்டால் கூட குடும்பத்தில் ஏற்படப் போகும் கலகத்தின் அறிகுறியே ஆகும்.

சாவிக் கொத்து காணாமல் போனதாகக் கண்டால், பலவித கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாக நேரும். நம்பிக்கை மோசம் போவார்.

நீங்கள் இந்த பதிவை படித்துவிட்டு இதை சிந்தித்துக் கொண்டிருந்தால் இந்த மாதிரியான கனவுகள் உங்களுக்கும் வர அதிக வாய்ப்புள்ளது.

Related posts

Leave a Comment