September 28, 2022
சினிமா

ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் முதன் முறையாக இணைத்து நடிக்கும் பிரபல நடிகை…!

அண்ணாத்த படத்திர்க்கு பின்னர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராக உள்ள படம் ஜெயிலர்.

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களை இயக்கிய நெல்சன்தான் இந்த படத்தை இயக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

ஜெயிலர் படம் குறித்த அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதமே வெளியிடப்பட்டாலும், அப்படத்தின் ஷூட்டிங் தற்போது தான் தொடங்கி உள்ளது. ஆக்ஸ்ட் பத்தாம் தேதி முதல் ஷூட்டிங் தொடங்கப்பட்டு உள்ளது.

ஆனால் ரஜினி வருகிற ஆகஸ்ட் இருபத்திரெண்டாம் தேதிதான் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள உள்ளாராம். அதுவரை இதர நடிகர், நடிகைகள் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ரம்யா கிருஷ்ணன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதனை சமீபத்திய பேட்டியில் அவரே உறுதிப்படுத்தினார். இது தவிர நடிகைகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோரும் இப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வாறு ஏற்கனவே மூன்று ஹீரோயின்கள் ஜெயிலர் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது நான்காவதாக மேலும் ஒரு ஹீரோயின் இணைந்துள்ளார். அது வேறுயாருமில்லை தமன்னா தான். அவரும் தற்போது புது வரவாக இப்படத்தில் இணைந்துள்ளார்.

ஏற்கனவே விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள தமன்னா, தற்போது முதன் முறையாக ரஜினி உடன் கூட்டணி அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment