November 27, 2022
சினிமா

ரசிகர்களின் அமோக வரவேற்பால் வசூலில் சாதனை படைத்த “லவ் டுடே” திரைப்படம்…!

“லவ் டுடே” திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பால் வசூலில் அதிரடி சாதனை படைத்து வருகிறது.

ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடித்த “கோமாளி” திரைப்படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் “லவ் டுடே” என்ற திரைப்படத்தை இயக்கி அவரே நாயகனாக நடித்திருந்தார்.

கடந்த நான்காம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக, லவ் டுடே திரைப்படத்திற்கு இளைஞர்களின் வருகை அதிகமாக இருந்தது.

இதன் காரணமாக முதல் நாளில் இருந்தே லவ் டுடே திரைப்படம் வசூலை குவித்து வந்தது. இந்த திரைப்படம் வெளியாகி இருபது நாட்களை நெருங்கி இருக்கும் நிலையில், தமிழகத்தில் மட்டும் ஐம்பத்தைந்து கோடி வசூல் செய்திருப்பதாக திரைத்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது . லவ் டுடே திரைப்படம் ஆறு கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டது.

மேலும் படத்தை “ரெட் ஜெயண்ட்” நிறுவனம் மூலம் டிஸ்ட்ரிபியூஷன் அடிப்படையில் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் வெளியிட்டு இருந்தது. இதன் மூலம் அந்த நிறுவனத்திற்கு பெரும் லாபம் கிடைத்திருப்பதாக கூறுகின்றனர். இதுவரை ஷேர் தொகையாக மட்டும் இருபத்தி ஏழு கோடி ரூபாய்க்கு மேல் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related posts

Leave a Comment