November 27, 2022
உடல்நலம்

துளசி செடியில் உள்ள மகத்துவம்

எந்த நோயாக இருந்தாலும் கவலை படாமல் துளசி நீர் மட்டும் அருந்தி வாருங்கள். அனைத்து நோய்களின் தாக்கமும் குறைந்து விடும்.

ஒரு சுத்தமான செம்பு பாத்திரத்தில் சிறிதளவு சுத்தமான தண்ணீர் விட்டு அதில் ஒரு கைப்பிடி அளவு துளசி இலையை போட்டு ஊற வைக்க வேண்டும். 8 மணி நேரம் ஊறிய பின்னர் இந்த தண்ணீரை வெறும் வயிற்றில் ஒரு டம்ப்ளர் அல்லது 2 டம்பளரோ குடிக்க வேண்டும்.

இந்த நீரை 48 நாட்கள் தொடர்ந்து பருகினால் பல வித நோய்களும் குறையும். அத்துடன் தோல் சுருக்கம் மறையும், பார்வை குணமடையும், நரம்புகள் பலப்படும்.

துளசி இலையை போட்டு ஊற வைத்த நீரை பருகினால், நீரிழிவு நோய் நம்மை அண்டாது.

நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். வாய் துர்நாற்றத்தை போக்கும்.

சிறுநீர் கோளாறுகள் உடையவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வந்தால் சிறுநீர் கோளாறுகள் நீங்கும்.

பல நாட்களாக தோலில் இருக்கும் படை, சொறி நீங்க துளசி இலையில் சிறிது எலுமிச்சை சாறு விட்டு நன்கு அரைத்து அந்த விழுதை தோலில் தேய்த்து வந்தால் படை, சொறி குணமடையும்.

நமது உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில், முந்தய நாளே கொஞ்சம் துளசி இலையை போட்டு வைத்திருக்க வேண்டும். அந்த தண்ணீரில் குளிக்கும் பொழுது உடலில் உள்ள வியர்வை நாற்றம் நீங்கும்.

துளசிச் சாறு ஆஸ்துமா, சளித் தொல்லை போன்ற நோய்களை குணப்படுத்தும்.

துளசி ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது. இருதயம் போன்ற உறுப்புகள் சீராக இயங்குவதற்கு துளசி மிகவும் உதவுகிறது.
இதனை பயன்படுத்துவதால் நாம் என்றும் இளமையுடன் வாழலாம்.

Related posts

Leave a Comment