January 31, 2023
அறிந்திராத உண்மைகள்

மனித மூக்கு சுமார் 50,000 வெவ்வேறு நறுமணங்களை நினைவில் வைத்துக்கொள்ளுமாம் தெரியுமா?

நம்முடைய உடல் உறுப்புகளில் மூக்கு மிகவும் முக்கியமானது. இந்த மூக்கின் மூலமாக தான் நாம் சுவாசிக்கிறோம் மற்றும் வெவ்வேறு விதமான மணங்களை பிரித்தறிகிறோம்.

மேலும் கருவிலிருக்கும் போதே ஒரு குழந்தை முகர்திறன் பெற்றுவிடுகிறது. குழந்தை பிறந்தவுடனேயே இந்த வாசனையை வைத்து தன் தாயை அடையாளம் காண்கிறது. ஆனால் உங்களுக்குத் தெரியுமா நம்முடைய மூக்கு சுமார் 50,000 நறுமணங்களை நினைவில் வைத்து கொள்ளுமாம்.

ஐம்புலன்களில் நறுமணத்தை உணர கூடிய உறுப்பானது மிகவும் வலிமையானது தெரியுமா? நீங்கள் எதையாவது இதற்கு முன் வாசனை செய்து பார்த்தது உண்டா, நியாபகப்படுத்தி பாருங்கள்.

நிச்சயமாக நீங்கள் சாப்பிட்ட ஒரு குறிப்பிட்ட வகை உணவின் நினைவு வந்திருக்கும் என்பதில் மாற்றமில்லை. அல்லது உங்களுக்கு பிடித்த ஏதாவது பொருளின் வாசனை நினைவிற்கு வந்திருக்கலாம்.

உதாரணமாக மழை பெய்த பிறகு வரும் மண்ணின் வாசனை, சாக்லேட் களின் வாசனை என நம்முடைய மூக்கில் மில்லியன் கணக்கில் வாசனையை நுகரக் கூடிய செல்கள் இருக்கின்றன.

அந்த செல்கள்தான், நமக்கு பொருட்களின் வெவ்வேறு வகையான வாசனையை அறிய காரணமாக இருக்கின்றன. இயற்கையில் லட்சத்துக்கும் மேற்பட்ட வாசனைகள் உள்ளன.

இந்த வாசனைகளை அறிய, அந்தச் சூழலுக்குத் தகுந்தவாறு ஒருவருடைய மூக்கின் முகரும் தன்மை மாறிவிடுகிறது. ஏனென்றால் மூக்கின் உட்புறத்தில் ஆல்ஃபாக்டரி சென்சார் நியூரான்கள் உள்ளன.

அவை வாசனையை உணர அனுமதிக்கின்றன. ஒவ்வொரு பொருள்களின் நறுமணத்தை பொறுத்து நியூரான்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

மேலும் மூக்கு நரம்புக்கும் மூளைக்கும் நேரடி தொடர்பு உண்டு.  மூளையில் உள்ள ஹிப்போகாம்பஸ் (Hippocampus) என்னும் பகுதி, நினைவகமாக(memory) செயல்படுகிறது.

இதனால் பழத்தின் வாசனை, பூவின் வாசனை, ஒரு மண்ணின் வாசனை எது என்று நாம் பிரித்தறிய தக்க வண்ணம் நமது மூளை இந்த வாசனைகளை செயலாக்கி அவற்றை நினைவாக வைத்துக்கொள்கிறது.

மேலும் ருசியான உணவின் நறுமணத்தை நாசி மூளைக்கு எடுத்துச் செல்லும் போது பசி ஏற்படுகிறது. இந்த அற்புதச் செயல்பாடுகளுக்கு, வாசனையை மூளைக்கு எடுத்துச் செல்லும் மோப்ப செல்கள் தான் காரணமாக உள்ளன.

ஒரு சராசரி மனிதனால் 100 முதல் 200 வகையான வாசனையை அறிய முடியும்.
ஆனால் வாசனை திரவியங்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் சுமார் 800 வகையான நறுமணங்களை உணர்கிறார்கள்.

வாசனை பொருள்களை தயாரிக்கும் நிறுவனங்கள் ஏன் நல்ல வாசனையான பொருட்களை மட்டுமே பயன்படுத்துகின்றன என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

ஏனென்றால், அப்படி நல்ல வாசனை மிக்க பொருள்களை கொண்டு தயாரிக்கும் போது தான் நல்ல லாபம் பெற முடியும்.

இதனால்தான் மெழுகுவர்த்தி, சுகாதாரம், வாசனை திரவியம் போன்றவற்றை தயாரிக்கும் போது மலர்கள், மரங்கள், பழங்கள், மூலிகைகள், சந்தனம், கேம்ப்ஃபயர் போன்ற பொருள்களை பயன்படுத்துகின்றனர்.

ஆண்களை விட பெண்களுக்கு முகரும் தன்மை அதிகம். பெண்களுக்கு பதினைந்து முதல் பதினேழு வயது வரை மூக்கு வளரும். ஆண்களுக்கு பதினேழு வயது முதல் பத்தொன்பது வயது வரை மூக்கு வளரும்.  நம் உடலில் துத்தநாகம் (Zinc) குறைவாக இருந்தால் வாசனை அறியும் தன்மை குறையும்.

முகர்திறன் அளவீடு குறைவாக இருப்பவர்களுக்கு நினைவாற்றலில் பிரச்னைகள் ஏற்படும். இது ஒருவருக்கு ஏற்படப்போகும் மனநலப் பாதிப்பு மற்றும் அல்சைமர் நோயை முன்கூட்டியே அறிந்துகொள்ள உதவுகிறது என ஆய்வுகள் கூறுகின்றன .

கெட்ட வாசனை

சில நேரங்களில், சில கடுமையான வாசனைகள் நம்மை தாக்குகின்றன. அவற்றில் புகை, எரிச்சல், எண்ணெய் அல்லது சில கெமிக்கல்கள் போன்றவை நமக்கு கெட்ட வாசனையை ஏற்படுத்துகின்றன.

வாசனை சிகிச்சை – ஆர்மோதெரபி

சில வாசனை மனநிலையை உடனடியாக பாதிப்பதாக கூறுகின்றனர். பண்டைய எகிப்தியர்கள் மெழுகுகள் மற்றும் வாசனை திரவியங்களை அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் எடுத்துச் சென்று பயன்படுத்தி இருக்கின்றனர். இதனை கல்லறைகளில் கூட கண்டுபிடித்திருக்கின்றனர்.

மேலும் மக்கள் தங்கள் இருக்கும் இடங்கள் முழுவதும் வாசனையாக இருக்க டிஃப்பியூசர்கள் மற்றும் அதிக மணம் தரக்கூடிய எண்ணெய் வகைகளையும் பயன்படுத்தி இருக்கின்றனர்.

அது மட்டுமல்லாமல் அவர்களுக்கு நல்ல ஆற்றல் கிடைக்க குளிக்கும் போது எண்ணெய்கள் மற்றும் உப்பு சேர்த்து பயன்படுத்தி இருக்கின்றனர். சிலர் இரவு நேரங்களில் நல்ல மணமுடன் தூங்க லாவெண்டர் எண்ணெய்யை பயன்படுத்தி இருக்கின்றனர்.

Related posts

Leave a Comment