September 28, 2022
செய்திகள் தகவல்

இந்த ஆண்டின் கடைசி சூப்பர் மூன் – இன்று வானத்தில் நிலா பெரிதாக பிரகாசமாக தெரிவதை கண்டு ரசிக்கலாம்…!

இந்தாண்டில் மிகப்பெரிய சூப்பர் மூன் இன்று அதாவது ஜூலை பனிரெண்டாம் தேதி மிகப் பிரகாசமாக தெரிய உள்ளது. இன்று ஆனி மாதம் பெளர்ணமி வானில் அதிசய நிகழ்வாக, சாதாரண நாட்களை விட நிலவு வானில் மிகப்பெரியதாகவும், வானமும் மிகவும் பிரகாசமாகவும் தெரியும். இந்த நிகழ்வு உலகின் எல்லா பகுதிகளிலும் தெரியும்.

சூப்பர் மூன் என்றால் என்ன ?

இன்று வானில் தோன்றும் சூப்பர் மூன் பெயர் “ஸ்ட்ரூஜென் மூன்”(Sturgeon Moon)என்று பெயரிடப்பட்டுள்ளது. அதாவது கடலில் “ஸ்ட்ரூஜென்” என்ற மீன் மிகப்பெரியதாக இருக்கும். இந்த மீனை இரவு நேரத்தில்தான் பிடிக்க முடியும்.

வடக்கு அமெரிக்காவில் உள்ள அல்கான்குயின் பழங்குடி மக்கள் இந்த பவுர்ணமி நாளில் எளிதாக “ஸ்ட்ரூஜென்” மீனை பிடித்துவிடுவார்கள். ஆதலால், இந்த சூப்பர் மூனுக்கு “ஸ்ட்ரூஜென் மூன்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் “ஸ்ட்ராபெர்ரி மூன்” வானில் தோன்றியது, ஜூலை மாதம் “பக் மூன்” தோன்றியது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன், “ஸ்ட்ரூஜென் மூன்” இன்று வானில் தோன்றுகிறது.

“சூப்பர் மூன்” என்பது அதிகாரபூர்வப் பெயர் இல்லை. இன்று வரும் சூப்பர்மூன், பூமியிலிருந்து மூன்று லட்சத்து 57ஆயிரத்து 264 கி.மீ தொலைவில் தெரியும்.

சூப்பர் மூன் ஆண்டுக்கு மூன்று அல்லது நான்கு முறைவரை தோன்றலாம். சூப்பர் மூன் வழக்கத்தைவிட பதினேழு சதவீதம் பெரிதாகவும், முப்பது சதவீதம் ஒளி அதிகமாகவும் இருக்கும்.

“சூப்பர் மூன்” மற்ற நாட்களில் வரும் நிலவைவிட சற்றுதான் பெரிதாக இருக்கும், ஆனால் ஒளி அளவில் அதிகான ஒளிவீச்சை வழங்கும். இந்த “சூப்பர் மூன்” வரும் காலத்தில் கடலில் அலைகள் ஆக்ரோஷமாக எழும்பு, கடல் கொந்தளிப்பாகக் காணப்படும்.

இந்த சூப்பர் மூன் பதினொன்றாம் தேதி நள்ளிரவிலிருந்து பனிரெண்டு மற்றும் பதிமூன்றாம் தேதி வரை வானில் அனைவரும் காணலாம்.

அது மட்டுமல்லாமல் சனிக்கிரகத்தையும் இந்த முறை காணமுடியும் என்று நாசா தெரிவித்துள்ளது. இந்த கிரகம் பூமிக்கு அருகே “சூப்பர் மூன்” தோன்றபின் அருகே வரும் அப்போது சனிக்கிரகத்தை காணமுடியும் என நாசா தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் கடைசி “சூப்பர் மூன்” உண்மையில் நேற்று இரவு 9.40 மணிக்கு தோன்றுவிட்டது. ஆனால், இந்தியாவில் தெரியவில்லை. ஆனால், இன்று(12ம்தேதி) “சூப்பர் மூன்” முழுமையாக வழக்கத்தைவிட பெரிதாகவும், அதிக பிரகாசமாகவும் தோன்றும் இதை இந்தியா முழுவதும் காணலாம்.

அடுத்த சூப்பர் மூன் எப்போது ?

2023 ஜூலை மூன்றாம் தேதி சூப்பர் மூன் வரும். இந்த ஆண்டைப் போல் அடுத்த ஆண்டும் நான்கு “சூப்பர் மூன்” நிகழ்வு நடைபெறும்.

Related posts

Leave a Comment