September 28, 2022
செய்திகள்

வரலாற்று சாதனை படைத்து மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்…!

இங்கிலாந்து வரலாற்றில் மிக நீண்ட காலமாக மகாராணியாக இருந்து முடியாட்சி நடத்திய ராணி இரண்டாம் எலிசபெத் நேற்று பிற்பகல் காலமானார். அவருக்கு வயது 96.

1926 ஆம் ஆண்டு ஏப்ரல் இருபத்தியொன்றாம் தேதி இங்கிலாந்து அரச குடும்பத்தில் பிறந்தவர் எலிசபெத் அலெக்சேன்ட்ரா மேரி.அவர் பிறந்தபோது இங்கிலாந்தை அவரது தாத்தா ஐந்தாம் ஜார்ஜ் ஆண்டு கொண்டிருந்தார். அவர் 1936-ல் மரணமடைந்தபோது மன்னராக மூத்த மகன் எட்டாம் எட்வர்டு அரியணை ஏறினார். ஆனால் குறுகிய காலத்திலேயே தன்னுடைய காதலுக்காக மன்னர் பதவியைத் துறந்தார்.

அதைத் தொடர்ந்து எலிசபெத்தின் தந்தையான ஆல்பர்ட் ஆறாம் ஜார்ஜ் என்ற பெயருடன் மன்னரானதும் பத்து வயதில் பட்டத்து இளவரசி ஆனார் எலிசபெத். 1952 ஆம் ஆண்டில் தந்தை மறைந்ததும் இங்கிலாந்தின் ராணியாக முடிசூடினார் இரண்டாம் எலிசபெத்.

எழுபது ஆண்டு காலம் இங்கிலாந்தை ஆண்ட எலிசபெத் அந்நாட்டு வரலாற்றில் அதிக ஆண்டுகள் ஆண்ட ராணி என்ற பெருமையைப் பெற்றவர், கிரேக்கம் மற்றும் டென்மார்கின் இளவரசராக இருந்த பிலிப்புடன் காதல் கொண்ட நிலையில் தனது பட்டத்தை துறந்து 1947-ல் ராணி எலிசபெத்தின் கரம் பற்றினார் பிலிப்.

1947 ல் இரண்டாம் எலிசபெத், பிலிப் என்பவரை மணந்தார். இவர்களுக்கு சார்லஸ், ஆன், ஆண்ட்ரூ, மற்றும் எட்வர்டு என நான்கு பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்ம னையில் இரண்டாம் எலிசபெத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இவரது கணவர் பிலிப் 99 வயதில் காலமானார்.

இந்நிலையில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (96) சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு காலமானார். நீண்ட ஆண்டுகளாக இங்கிலாந்தை ஆட்சி செய்த இரண்டாவது ராணி என்ற பெருமைக்குரியவர்.

1953ம் ஆண்டு மன்னர் ஆறாம் ஜார்ஜ் மறைவுக்கு பிறகு இவர் ராணியாக பொறுப்பேற்று சுமார் எழுபது ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார். பதினான்கு பிரதமர்கள் இவர் அரசியாக இருந்த காலத்தில் ஆட்சி செய்தனர். இவர் பதினாறு நாடுகளின் ராணியாகவும் இருந்துள்ளார்.

1997-ல் கமல்ஹாசனுடன் மருதநாயகம் படத் தொடக்க விழாவில் முன்னாள் முதல்வர் கலைஞருடன் எலிசபெத் ராணி பங்கேற்றார். இருபத்திஐந்து ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு வந்த எலிசபெத் ராணி மருதநாயகம் படத் தொடக்க விழாவில் இருபது நிமிடங்கள் பங்கேற்றார்.

Related posts

Leave a Comment