September 28, 2022
செல்வம்

அதிர்ஷ்டத்தை அள்ளிக்கொடுக்கும் பாதரச மேரு ரகசியம்

ஏராளமான மேருக்களை பூஜிப்பதால் கிடைக்கக்கூடிய பலன்களை எல்லாம் விட பாதரச மேருவை பூஜை செய்வதன் மூலமாக கணக்கிலடங்கா பலன்களை எளிதில் பெற முடியும் என சொல்கிறது சாஸ்திர புராணங்கள். மனதில் நினைக்கக்கூடிய ஆசைகளை எல்லாம் பூர்த்தி செய்யக்கூடிய பாதரச மேருவை பூஜிப்பவர்கள் மிகப் பெரிய செல்வம் நிறைந்தவர்கள் ஆகிறார்கள் என பிரம்ம புராணம் சொல்கிறது.

யார் வேண்டுமானாலும் இந்த பாதரச மேருவை பூஜித்து எல்லா உலக சுகங்களையும் அனுபவித்து பரமபதத்தை அடைய முடியும். பாதரச மேருவை விதிப்படியும் முறைப்படியும் ஒரே ஒருமுறை பூஜை செய்பவர்கள் கூட சூரிய சந்திரர்கள் இருக்கும் வரை அளவில்லா எல்லா சுகங்களையும் பெற முடியும் என பிரம்மவைவர்த்த புராணம் சொல்கிறது.

கல்லாலான மேருவை பூஜிப்பதே விட கோடி மடங்கு பலன்கள் தங்கத்தாலான மேருவை பூஜிப்பதால் கிடைக்கும். அதைவிட பல மடங்கு பலன்கள் ரத்தினங்கள் பதித்த மேருவை பூஜிப்பதால் கிடைக்கும். ஆனால் அதையெல்லாம் விட பல மடங்கு பலன்கள் பாதரச மேருவின் பூஜை அல்லது தரிசனத்தாலேயே கிடைக்கும். பாதரச மேருவை விட உயர்வான மேரு உலகில் இருந்ததுமில்லை, இருக்கப்போவதுமில்லை என ரசநிர்ணய ரத்னாகரம் சொல்கிறது.

நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம், நம் வாழ்வில் வேண்டுவதெல்லாம் பெறுவதற்கு ஒரே சுலபமான வழி பாதரச மேருவை பூஜித்து வழிபடுவது என வாய்விய சம்ஹிதை சொல்கிறது. பாதரசத்தை திடப்பொருள் ஆக்கி அதை மேருவாக்கி பூஜிப்பவர்களுக்கு எப்பொழுதுமே மரணபயம் இருப்பதில்லை தவிர எந்த ஒரு காலத்திலும் அவர்கள் வீட்டில் வறுமை எட்டிப் பார்ப்பதும் இல்லை என்று சிவபெருமான் பார்வதியிடம் கூறி இருப்பதாக சர்வதரிசன சங்கிரகம் சொல்கிறது.

ஒருவர் ஒரே ஒருமுறை பாதரச மேருவை பூஜித்து விட்டாலே போதும். அவருக்கு வாழ்க்கையில் அறம், பொருள், இன்பம், வீடு என்ற சித்திகள் கிடைத்துவிடுகின்றன. பிரசித்தி பெற்ற ஆயிரம் மேருக்களை பூஜிப்பதால் கிடைக்கும் பலனை விட கோடி மடங்கு நற்பலன்கள் பாதரச மேருவை பூஜிப்பதால் கிடைக்கிறது என ரிசார்ணவ தந்திரம் சொல்கிறது.

பாதரச மேருவை தொடர்ந்து பூஜித்து வருவதால் எல்லாவித நோய்களிலிருந்தும் விடுதலை கிடைக்கும். வயதான காலத்தில் மனிதனை நோயின்றி வைத்துக் கொள்வதற்கு வேறு எந்தவிதமான தாவரத்திற்கும், உலோகத்திற்கும் சக்தி இல்லை. ஏனென்றால் அது எல்லாமே தண்ணீரில் கரைந்து போகக்கூடியது. வெப்பத்தால் காய்ந்து போக கூடியது. ஆனால் பாதரசம் ஒன்றுதான் எதனாலும் பாதிக்கப்படுவதில்லை என ரசசமுச்சயம் கூறுகிறது.

பாதரசத்தை விசேஷ பல செயல்பாடுகள் மூலமாக திடப்பொருளாக மாற்றுவதால் அது அமிர்தம் ஆகிவிடுகிறது. அப்படி பதப்படுத்தப்பட்ட பாதரசத்தில் மேருவை உருவாக்கி அதை வழிபடும் பக்தர்களுக்கு கல்வி, அறிவு, செல்வம், சொத்து, சுகம், அமைதி, செழிப்பு, ஐஸ்வரியம் இப்படி எல்லா பலன்களும் தானாகவே வந்தடைகிறது. பாதரசம் நோய்களை நீக்கி புது இளமையை கொடுக்கிறது.

அஷ்ட சித்திகளை கொடுக்கிறது. சாதாரணமாக பாதரசத்தில் அழுக்குகள் அதிகம் காணப்படும். அதை புடமிட்டு அசுத்தங்களை போக்கிய பிறகுதான் அது திடமாக மாற்றப்படுகிறது. அதிலிருந்து வடிவமைக்கப்படும் ரசமேரு முழு பலன்களையும் கொடுக்கக்கூடியது. விதிமுறைப்படி பூஜை, அர்ச்சனை, ஆரத்தி சேவைகள் செய்து ஆராதிக்க கூடியவர்கள் மட்டும் தான் பாதரச மேருவை வீட்டில் வைக்க வேண்டும் என கிடையாது.

பாதரச மேருவை கொண்டு வந்து பூஜை அறையில் வைத்து முடிந்த அளவு வழிபாடு செய்தாலே போதும். பாதரச மேரு வீட்டுக்கு வந்தவுடனே மகாலட்சுமி, மகா சரஸ்வதி ஆகிய இருவரும் ஸ்ரீ லலிதாம்பிகையுடன் இல்லத்திற்கு வந்து விடுகிறார்கள் என சேஷ சமுச்சயம் சொல்கிறது.

Related posts

Leave a Comment