November 27, 2022
அறிந்திராத உண்மைகள்

உலகின் ஆபத்தான தோட்டம்…இந்த தோட்டத்தில் உள்ள எந்த தாவரத்தையும் தொடவோ, நுகரவோ அனுமதியில்லை – ஏன் தெரியுமா ?

இந்த விஷ தோட்டம் இங்கிலாந்தின் நார்தம்பர்லேண்ட் கவுண்டியில் உள்ள அல்ன்விக் என்ற பகுதியில் அமைந்து உள்ளது. உலகின் மிகக் கொடிய தோட்டமாக அறியப்பட்ட இந்த விஷத் தோட்டத்தில் மனிதர்களை கொல்ல கூடிய அளவிற்கான தாவரங்கள் உள்ளன.

அல்ன்விக்கில் அமைந்துள்ள இந்த தோட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட ஆபத்தான தாவரங்கள் உள்ளதால் ஒரு அங்கீகரிக்கப்பட்ட வழிகாட்டி ஒருவருடன் மட்டுமே இந்த அபாயகரமான கார்டனை பார்வையிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

14 ஏக்கர் பரப்பளவில் இன்று தோட்டம் உள்ளதால் 700 விஷச் செடிகள் இதில் உள்ளன. உங்களுடன் வரும் காவலர்கள் இந்த தாவரங்களை பற்றி உங்களுக்கு விளக்கம் தருவார்கள். ஆபத்தான தோட்டத்தின் நுழைவாயிலில் ஒரு பெரிய இரும்பு கேட் உள்ளது. அந்த பெரிய இரும்பு கேட்களின் மேலேயே ஆர்ச் வடிவிலான போர்டில் “The Poison Garden” என்று ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

வலது மற்றும் இடது என இரண்டு இரும்பு கேட்களிலும் மண்டை ஓடு மற்றும் குறுக்கு எலும்பு அடையாளம் உள்ளது. மேலும் “இந்த தாவரங்கள் உங்களைக் கொல்லக்கூடும்” என்று ஆங்கிலத்தில் எச்சரிக்கை செய்தியும் கொடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் இந்த விஷ தோட்டத்தில் உள்ள தாவரங்கள் அல்லது பூக்களின் வாசனை எப்படி இருக்கிறது என்று யாரும் முகர்ந்து பார்த்து விட வேண்டாம் என்று பார்வையாளர்களை வெளிப்படையாக எச்சரிக்கவும் செய்கிறார்கள்.

இந்த கார்டானின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் பார்வையாளர்கள் உள்ளே இருக்கும் எந்த செடியையும் வாசனையோ, சுவைக்கவோ அல்லது தொடவோ அனுமதிக்கப்படுவதில்லை என்று குறிப்பிடுகிறது. என்னதான் எச்சரித்தாலும் சிலர் ஆர்வத்தில் கார்டனில் இருக்கும் கொடிய தாவரங்கள் அல்லது பூக்களை நுகர்ந்து பார்த்து மயக்கமடைகின்றனர்.

இந்த விஷ தோட்டத்தை நிர்வகிக்கும் அதிகாரிகளின் கூற்றுப்படி, ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 6,00,000 பேர் வருகை தருகின்றனர், மேலும் வழிகாட்டியுடன் வரும் விசிட்டர்களுக்கு மட்டுமே இந்த பாய்சன் கார்டனை சுற்றி பார்க்க அனுமதி என்றும் குறிப்பிடுகிறார்கள்.

சுற்றுலா பயணிகளைத் தவிர, உலகெங்கிலும் உள்ள தாவரவியலாளர்களும், மாங்க்ஸ்ஹூட், ரோடோடென்ட்ரான்ஸ் மற்றும் வுல்ஃப்ஸ் பேன் போன்ற நச்சுத் தாவரங்களைப் பார்க்க தோட்டத்திற்கு வருகை தருகின்றனர்.

கின்னஸ் உலக சாதனைகளின் படி உலகின் மிக நச்சு தாவரமான ரிசின் இந்த தோட்டத்தில் உள்ளது. ஆனால் இங்கிருக்கும் சில தாவரங்கள் முரண்பாடாக பெரிய அல்லது தீவிர நோய்களை குணப்படுத்த மற்றும் சிகிச்சையளிப்பதில் பங்களிக்கின்றன. ஆம், நச்சுத்தன்மை வாய்ந்ததாக இருந்தாலும், தோட்டத்தில் உள்ள பல தாவரங்கள் குணப்படுத்த முடியாத சில நோய்களைக் குணப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன.

உதாரணமாக “yew tree” டாக்சின் எனப்படும் ஒரு விஷத்திற்கு பெயர் பெற்றது, இது இருபது நிமிடங்களுக்குள் ஒருவரைக் கொல்லும் திறன் கொண்டது. ஆனால் மார்பகப் புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படும் மருந்தான taxol-ஐ இந்த மரம் உற்பத்தி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment