தாயை மகன் துரத்திய போது நடந்த கொடூர செயல்!!!

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் வசித்து வந்தவர் கலைவாணி. இவருக்கு விக்ரம் என்ற மகனும், நர்மதா என்ற மகளும் உள்ளனர். இவரது கணவர் கடந்த 5 வருடங்களுக்கு முன் உயிரிழந்தார்.

கலைவாணி தனியார் பள்ளி ஒன்றில் வேலை செய்து வந்து பிள்ளைகளை வளர்த்து வந்திருக்கிறார். இந்நிலையில் அவரது மகன் விக்ரமிற்கு திடீரென குடிப்பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அதனால் அவருக்கும் அவரது மகனுக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. அதுமட்டுமின்றி விக்ரம் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அதனால் அப்பெண்ணின் குடும்பத்தினருக்கும், அவனுடைய தாய்க்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தெரிய வந்தநிலையில் விக்ரம் அவரது தாய் கலைவாணியுடன் சண்டை போட்டுள்ளார். மேலும் அவரை அடித்து தாக்கியுள்ளார்.

இதனால் பயந்து கலைவாணி வீட்டைவிட்டு வெளியேறி தேசிய நெடுஞ்சாலையில் ஓடியுள்ளார். விக்ரமும் அவரை துரத்திக்கொண்டு பின்னே ஓடியுள்ளார்.

அப்பொழுது அங்கு வந்து கொண்டிருந்த கண்டெய்னர் லாரி ஒன்று வேகமாக வந்துள்ளது. இந்நிலையில் விக்ரம் கலைவாணியை பிடித்து தள்ளியுள்ளார்.

அதில் கலைவாணி சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்துள்ளார். பின்னர் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கலைவாணியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் அவரது மகன் விக்ரமையும் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *