August 18, 2022
லைப் ஸ்டைல்

தாம்பத்திய உறவில் பெண்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் இவ்வளவுதான்..!

தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டுமெனில் மனைவியின் விருப்பு, வெறுப்புகளை புரிந்து கணவர் நடக்க வேண்டும்.

படுக்கையறையில் நெருக்கம் என்பதை உடல் ரீதியான விஷயமாக பார்க்காமல், உணர்வுபூர்வமான விஷயமாகப் கணவன்மார் பார்க்க வேண்டும்.

புரியும் வகையில் கூற வேண்டும் என்றால், படுக்கையறையில் நெருக்கம் காட்டுவதற்கு விருப்பம் தெரிவிக்கும் ஆண்கள், மற்ற இடங்களில் முகத்தை கோபமாக காட்டுவது, எரிச்சல் அடைவது என இருந்தால் உணர்வுபூர்வமா தாம்பத்தியத்தை அனுபவிக்க முடியாது.

இல்லற வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு தாம்பத்திய வாழ்க்கையும் சரியாக இருக்க வேண்டும். அப்போதுதான் அது முழுமையான அல்லது ஒரு பூரணமான திருமண வாழ்க்கையாக இருக்க முடியும்.

அப்படி தாம்பத்திய வாழ்க்கையும் சிறப்பாக இருக்க வேண்டுமெனில் மனைவியின் விருப்பு , வெறுப்புகளை புரிந்து நடக்க வேண்டும் கணவன்மார். இதை திருமணம் செய்துகொண்ட ஒவ்வொரு ஆண், பெண்ணிடமும் தாம்பத்திய வாழ்க்கையைத் தொடங்கும் முன் பெரியவர்கள் சொல்வதுண்டு. அப்படி பெண்கள் பொதுவாக எதிர்பார்க்கும் சில தாம்பத்திய ஆசைகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

விளையாட்டு:

தாம்பத்திய உறவின் தொடக்கமே விளையாட்டுதான். எடுத்தவுடன் விஷயத்தில் இறங்குவது பல பெண்களுக்குப் பிடிக்காது. அவர்களை விரலால் வருடுவது, முத்தமிடுவது என சில சின்ன சின்ன சில்மிஷங்களை கணவன்மார் செய்ய வேண்டும். இதை ஆங்கிலத்தில் ஃபோர்பிளே என்று கூறுவார்கள். இதை செய்வதால் பெண்கள் எளிதில் தாம்பத்திய உறவின் மனநிலைக்கு செல்வார்கள்.

முரட்டுத்தனமான தழுவல்:

சில பெண்களுக்கு மென்மையாக தடவி கொடுப்பது பிடிக்காமல் போகலாம். ஃபிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரே(Fifty Shades Of Grey) படம் போல் முரட்டுத்தனமான தாம்பத்திய உறவை விரும்பும் பெண்ணாக இருந்தால் அந்த வழியில் செல்வது உங்கள் தாம்பத்திய வாழ்க்கையை திருப்தி படுத்தலாம்.

பராட்டு:

சில பெண்கள் படுக்கையில் கணவர் பாராட்ட வேண்டும் என நினைப்பார்கள் தன் நிலையைக் குறித்து அதாவது தன்னுடைய உடல் பாகங்கள், அவளின் வெக்கம், கூச்சத்தைப் பற்றி சில வரிக் கவிதை சொல்லாவிட்டாலும் அழகை ரசித்து சில வார்த்தைகள் கணவன் கூறலாம். அதில் பூரித்து போய் ஆழமாக தாம்பத்திய உறவில் ஈடுபடும் மனநிலைக்கு வந்துவிடுவார்கள்.

அள்ளி அரவணைத்தல்:

படுக்கையில் இருக்கும்போது மனைவியை உடலுறவுக்கு அழைப்பதைக் காட்டிலும் அவள் தாம்பத்திய உறவில் ஈடுபடும் மனநிலையில் இருப்பதை கணவன்மார் உறுதி படுத்திவிட்டு அப்படியே மனைவியை தூக்கிக் கொண்டு போய் கட்டிலில் படுக்க வைத்து மெல்ல வருடி ஆடைகளை அவிழ்ப்பதை பல பெண்கள் விரும்புகிறார்கள். இதை செய்து பாருங்கள் நிச்சயம் உங்களுக்கு விருந்துதான்.

ஓரல் செக்ஸ்:

எந்த பெண்ணுக்குதான் ஓரல் செக்ஸ் பிடிக்காது. எடுத்தவுடன் நேரடியாக விஷயத்திற்கு செல்லாமல் முத்தத்தால் அவரை பூரிக்கச் செய்யுங்கள். இது அவர்களின் தாம்பத்திய உறவினை தூண்டும். இதை பெண்கள் மிகவும் ரசிக்கின்றனர். சொல்லப்போனால் விரும்புகின்றனர். எனவே முத்த மழையால் அவரை நனைக்கச் செய்துவிட்டு மற்ற விஷயங்களில் இறங்குங்கள். உங்கள் தாம்பத்திய உறவின் வாழ்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

Related posts

Leave a Comment