November 27, 2022
டிப்ஸ்

பாத வெடிப்பு, வறட்சியை போக்க இந்த டிப்ஸ் போதும்!

நம்மில் பலரும் முகத்தை அழகுபடுத்த அதிக முக்கியதுவம் கொடுக்கிறோம். ஆனால் கால்களை சரியாக பராமரிப்பதே இல்லை. இதனால் பாதங்களில் கருமை, வெடிப்பு, பழுப்பேறிய நகங்கள் என பல பிரச்னைகள் இருக்கும்.

இந்த பிரச்சனைகளுக்கு மருத்துவ மனைகளில் வீணாக பணத்தை செலவழிக்காமல் இயற்கை முறையில் வீட்டில் இருக்கும் பொருள்களை கொண்டே பாதங்களை எப்படி பராமரிப்பது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பாத வெடிப்பு

வெள்ளை எள்ளை அரைத்து மாதம் இரண்டு முறை பாதம் நகங்களில் தேய்த்து வர நகத்தின் இடுக்குகளில் படிந்துள்ள மண் அழுக்குகளை அகற்றி நல்ல பளபளப்பை கொடுக்கும். மேலும் பாத வெடிப்பு வராமலும் பாதுகாக்கும்.

பாத கருமை

கடலை மாவுடன் சிறிதளவு கற்றாழை ஜெல் கலந்து மிக்ஸியில் அரைத்து இரண்டு நாட்களுக்கு ஒருமுறை உள்ளங்கால் பாதம் கணுக்கால் முழுவதும் தேய்த்துக் கழுவி வந்தால் காயத்தால் ஏற்பட்ட தழும்புகள் மற்றும் கருமை மறையும்.

பாத வறட்சி

சிலருக்கு உள்ளங்கால் வறண்டு இருக்கும். அப்படி இருந்தால் ஒரு எலுமிச்சையை எடுத்து அதன் சாற்றை பிழிந்து அந்த சாறுடன் 4 சொட்டு கிளிசரின் கலந்து தூங்கச் செல்லும்போது நகம் விரல்கள் பாதம் முழுவதும் தடவி நன்கு காய்ந்தவுடன் சாக்ஸ் அணிந்து தூங்கவும். இப்படி செய்து வந்தால் சில நாள்களில் பாத வறட்சி பிரச்சனை அகலும்.

பாதம் மினுமினுக்க

சிறிதளவு விளக்கெண்ணெய்யை உள்ளங்கையில் எடுத்து 2 பாதங்களிலும் தேய்த்து வர பாதம் மினுமினுப்பாக மாறும். மேலும் பாதாம் பாலில் தோய்த்தெடுத்த பஞ்சு கொண்டு நகங்களில் தேய்த்து வந்தால் நகம் உடையாமலும் மினுமினுப்பாகவும் இருக்கும்.

சொரசொரப்பான பாதம்

தினமும் குளிப்பதற்கு முன் கஸ்தூரி மஞ்சளில் சிறிதளவு வெண்ணெயைக் கலந்து நன்றாகத் தேய்த்து வந்தால் சொரசொரப்பான பாதம் மாறி மென்மையாகும்.

Related posts

Leave a Comment