November 27, 2022
டிப்ஸ்

இந்த டிப்ஸ்களை சமயலறையில் பயன்படுத்தி பாருங்க!!!!

சமயலறையில் நாம் பயன்படுத்த கூடிய சில பயனுள்ள டிப்ஸ் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஈக்கள் :

மே , ஜூன் மாதங்கள் என்றாலே மா, பலா, மற்றும் அன்னாசி பழம் சீசன் என்பதால் ஈக்கள் அதிகமாக வீடுகளில் மொய்ந்து கொண்டே இருக்கும்.

இதை எளிய முறையில் போக்க சிறிதளவு தண்ணீருடன் உப்பு கலந்து ஈக்கள் இருக்கும் இடங்களில் தெளித்து கொள்ளுங்கள் ஈக்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடி போகும்.

மேலும் புதினா இலைகளை அரைத்து தண்ணீர் கலந்து கூட அந்த இடங்களில் தெளித்தால் ஈக்கள் மறைந்து விடும்.

எலுமிச்சை

சிலர் வீடுகளில் எலுமிச்சை பழங்களை எப்போதுமே வைத்திருப்பர். இது அதிக நாள் இருக்கும் போது கெட்டு போகும்.

இந்த எலுமிச்சை பழங்கள் நீண்ட நாள் கெட்டு போகாமல் இருக்க தினமும் சில மணி நேரங்கள் தண்ணீரில் ஊற வைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

இப்படி தினமும் செய்து வந்தால் குளிர்சாதன பெட்டியில் வைக்காமலே 10 நாள்களுக்கு மேல் கெட்டு போகாமல் வைத்து கொள்ளலாம்.

சாதம்

வாரத்திற்கு ஒருமுறையாவது தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம் போன்றவற்றை வீடுகளில் சமைத்து சாப்பிடுவோம்.

இதற்கு அதிகமாக நாம் சேர்ப்பது கடலை பருப்பு. இதில் கடலை பருப்பு அதிகமாக இருக்கும் போது வீட்டில் இருக்கும் முதியவர்களால் சாப்பிடுவதர்கு மிகவும் கடினமாக இருக்கும், அவர்களும் முறுமுறுத்து கொண்டே இருப்பார்கள்.

இந்த பிரச்சனையை சரி செய்ய இனிமே கடலை பருப்பை சேர்க்காமல் பொட்டு கடலை சேர்த்து செய்து பாருங்க.

இப்படி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும் அதுமட்டுமல்லாமல் பல் இல்லாதவங்க கூட எளிமையாக இதை சாப்பிடலாம்.

துவரம் பருப்பு

துவரம் பருப்பு வேக வைத்து எடுக்க வேண்டுமானால் நேரம் அதிகமாகவே எடுக்கும். ஆனால் இதை மழை காலங்களில் மழை நீரில் வேக வைத்து பாருங்க சீக்கிரத்தில் வெந்து விடும் மற்றும் மிகவும் சுவையாகவும் இருக்கும்.

வத்தல் குழம்பு

சிலருக்கு வத்தல் குழம்பு என்றாலே மிகவும் பிடிக்கும். ஆனால் எப்படி தான் வைத்தாலும் சுவையாகவே இல்லையே என்று நினைத்து கொண்டு இருக்கீங்களா.

அப்போ இனிமே குழம்பு ரெடி ஆகும் போது மிளகு கூட சேர்த்து இறக்கி பாருங்க நல்ல சுவையாக இருக்கும்.

தலை முடி

சிலருக்கு முடியில் பலவிதமான இயற்கை மூலிகைகள் மற்றும் ஷாம்பூ போன்றவைகள் போட்டாலும் முடி சாப்ட்டாகவே இருக்காது.

அப்படிபட்டவர்கள் குளிப்பதற்கு அரைமணிநேரத்திற்கு முன் சிறிதளவு தயிர் கொண்டு முடியை ஊற வைத்து பின் குளியுங்கள். இப்படி செய்து வந்தால் சில நாள்களில் முடி ரொம்ப சாப்ட் ஆக மாறி விடும்.

Related posts

Leave a Comment