அழகு குறிப்புகள்

இந்த ஒரு பொருள் போதும் உங்கள் நரைமுடியை கருமையாக்க…!

முன்பெல்லாம் நாற்பது வயதை கடந்தவர்களுக்குதான் நரைமுடி அதிகளவில் காணப்படும். ஆனால் தற்போதைய நவீன காலக்கட்டத்தில் சிறுவர்களுக்கு கூட நரைமுடி முளைக்க ஆரம்பித்துவிட்டது.

பொதுவாக சரும தொந்தரவு மற்றும் முடி வளர்ச்சி குறைபாடு போன்ற பிரச்னைகளுக்கு இயற்கை முறையில் பல்வேறு தீர்வுகள் உள்ளன. அதன்படி, குறிப்பிட்ட இந்த ஒரு பொருளை வைத்து இள வயதில் ஏற்படும் நரைமுடி பாதிப்பை முற்றிலுமாக நாம் மாற்றி விடலாம்.

வயல்வெளி ஓரங்கள் மற்றும் குப்பைப் மேட்டுப் பகுதியில் கேட்பாரற்று கிடைக்கும் இடங்களில் முளைக்கும் ஒரு வகை செடி தான் “கையாந்தரை”. இந்த ஒரு அற்புதமான செடியை மட்டும் வைத்து நரைமுடியை கருப்பாக மாற்றிவிடலாம்.

இதை பயன்படுத்துவதற்கு முன்பு பலமுறை சுத்தம் செய்ய வேண்டும். இது குப்பைப் பகுதிகள் மற்றும் கேட்பாரற்ற நிலப்பகுதிகளில் வளருவதால், இதை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.

மேலும் இதில் மண் மற்றும் பூச்சிகளின் முட்டைகள் இருக்கும் என்பதால், ஒவ்வொரு இலைகளையும் நன்றாக பார்த்து பார்த்து சுத்தம் செய்துகொள்ளவும்.

பிறகு சிறிதுநேரம் தண்ணீரில் ஊறவைத்துவிட்டு, மிக்ஸியில் நன்றாக மைப் போல அரைத்துக்கொள்ள வேண்டும். அரைக்கும் போது இலைகளில் இருக்கும் ஈரப்பதமே போதும். வேண்டுமென்றால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

நல்ல மையாக அரைத்து எடுத்துக் கொண்ட பேஸ்டை, முடிகளின் வேர்களில் இருந்து நுனி வரை நன்றாக தேய்க்க வேண்டும். இதை ஒரு மாத காலம் வாரம் இருமுறை என்கிற கணக்கில் தேய்த்து வரவேண்டும்.

கையாந்தரை பேஸ்டு நன்றாக காய்ந்தவுடன், பிஎச். அளவு மைல்டாக அதாவது குறைவாக இருக்கும் ஷாம்பூவை பயன்படுத்தி தலையை நன்றாக கழுவிடுவது நல்லது. குறைந்தது இந்த செயல்முறையை ஒரு மாத காலம் தொடர்ந்து செய்து வாருங்கள்.

இந்த செயல்முறையை செய்ய துவங்கிய முதல் இரண்டு வாரங்களில் உங்களுடைய கேசத்தில் மாற்றம் தெரிய ஆரம்பிக்கும். நரைமுடிகள் உதிர்ந்து அந்த இடத்தில் கருமையான முடிகள் வளர துவங்கும்.

அவ்வப்போது தலைக்கு எண்ணெய் வைத்து வருவதும் நல்ல பலனை தரும். வெறும் நரைமுடி என்றில்லாமல், செம்பட்டை பாய்ந்த முடிகளுக்கும் இந்த செயல்முறையை நீங்கள் பின்பற்றி மாற்றத்தை காணலாம்.

Related posts

Leave a Comment