கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து கடைகள் மற்றும் அழகுநிலையங்கள் மூடப்பட்டது. இதனால் பெரும்பாலான பெண்கள் முகத்தை அழகுபடுத்த சமையல் அறையில் இருக்கும் பொருள்களை பயன்படுத்தி வருகின்றனர்.
அந்த பொருட்களின் பட்டியலில் கடலை மாவு முதலிடத்தை பிடித்துள்ளது. சாதாரண மக்கள் மட்டுமல்ல பிரபலங்களும் கூட, முகம் மற்றும் சருமத்தை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வீட்டில் பேஸ் மாஸ்க் முயற்சித்து வருகின்றனர்.
பிரபலங்களான கரிஷ்மா கபூர், கரீனா கபூர் கான் முதல் சோஹா அலிகான் வரை அனைவரும் வீட்டில் தயாரிக்கப்படும் பேஸ் மாஸ்க்கின் நன்மைகள் குறித்து பேசியுள்ளனர்.
அழகு நிபுணரான அனிகா சர்மா இரண்டு வெவ்வேறு வகையான கடலைமாவு கொண்டு தயாரிக்கப்படும் பேஸ் மாஸ்க் பற்றி விளக்கியுள்ளார்.
இந்த பேஸ் மாஸ்க் வறண்ட சருமம் மற்றும் முகப்பரு பிரச்சனைகளை போக்க உதவுகிறது. இதை எப்படி தயாரிப்பது என்பது பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
வறண்ட சருமத்தை போக்க:
உங்கள் வறண்ட சருமத்தை போக்க கடலைமாவு ஒரு சிறந்த பொருள். இதை செய்வதற்கு உங்களுக்கு தேவையான பொருள் ஒரு ஸ்பூன் கடலை மாவு மற்றும் சிறிதளவு கிரீம் பால்.
கடலை மாவுடன் கிரீம் பால் ஊற்றி நன்கு பேஸ்ட்டாக கலக்கி அதை உங்கள் முகத்தில் தடவி 10 நிமிடங்கள் ஊற விடுங்கள். அதன் பின் உங்கள் முகத்தை குளிர்ந்த நீரால் நன்கு கழுவுங்கள்.
இப்படி செய்யும் போது இந்த பேக் உங்கள் சருமத்தை மிருதுவாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்கும். இது மழைக்காலத்திற்கு ஏற்ற ஒரு சிறந்த பேக்.
முகப்பரு பிரச்சினைகளை போக்க:
முகப்பரு பிரச்சினையால் பாதிக்க பட்டவர்களுக்கு கடலை மாவு ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. ஏனென்றால் கடலை மாவில் துத்தநாகம் உள்ளது.
இது உங்கள் முகத்தில் உள்ள வீக்கமடைந்த திட்டுகளை குறைக்க உதவுகிறது. முகப்பருவை போக்க தேவையான பொருள்கள் கடலை மாவு, தேயிலை மர எண்ணெய் மற்றும் ரோஸ் வாட்டர் ஆகும்.
2 தேக்கரண்டி கடலை மாவு, ஒரு தேக்கரண்டி ரோஸ் வாட்டர் மற்றும் 2-3 சொட்டு தேயிலை மர எண்ணெய் சேர்த்து கலக்கி இந்த பேஸ்டை உங்கள் முகத்தில் தடவி வர முகப்பருக்கள் விலகி முகம் பளபளக்கும்.