ஆன்மீகம்

ஆடி அமாவாசை நாளில் நீங்கள் செய்யும் இந்த ஒரு காரியம் உங்கள் முன்னோர்களை மகிழ்ச்சியடைய வைக்கும்…!

ஆடி அமாவாசை நாளில், சனீஸ்வர பகவானின் வாகனமான காகம் எமலோகத்தின் வாசலில் இருக்குமென்றும், எமனின் தூதுவனான காகத்துக்கு சாதம் வைத்தால் மறைந்த நமது முன்னோர்கள் மகிழ்ச்சியடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அமாவாசை தினத்தில் நம் முன்னோர்களை வழிபட வேண்டும். முன்னோர்களுக்கு திதி கொடுப்பதன் மூலம் செய்வினை கோளாறுகள் நம் வீட்டுப்பக்கமே எட்டிப்பார்க்காது தீராத கடன் தொல்லைகள் தீரும்.

முன்னோர்கள் இறந்த தேதி, ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை வழிபாட்டில் காகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அமாவாசை தினத்தன்று காக்கைகளை வழிபடுவதால் சனிபகவானைத் திருப்தி படுத்தியதாகவும் கருதுகிறார்கள்.

ஆடி அமாவாசை 2022 தர்ப்பணம் செய்ய ஏற்ற நேரம்:

இந்த ஆண்டு அமாவாசை திதி 27 ஜூலை 2022 அன்று இரவு 10.06க்குத் தொடங்கி, 28 ஜூலை வரை நீடிக்கிறது. எனவே, 28 ஜூலை அன்று காலை சூரிய உதயத்துக்குப் பின்னர், பிற்பகல் மூன்று மணி வரை எப்போது வேண்டுமானாலும் தர்ப்பணம் செய்யலாம், திதி குடுக்கலாம்.

காகத்திற்கு உணவு:

அமாவாசை நாளில் காகத்திற்கு உணவு வைத்து அது சாப்பிட்ட பின்னரே வீட்டில் உள்ளவர்கள் உணவருந்தும் பழக்கமும் நடைமுறையில் உள்ளது. காகத்திற்கு தினமும் காலையில் சாதம் வைக்கும்போது உண்மையாகவே பித்ருக்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சனியின் வாகனம்:

எமனும் சனியும் சகோதரர்கள் ஆவார்கள் அதனால் காக்கைக்கு உணவிடுவதால் இருவரும் ஒரே சமயத்தில் திருப்தி அடைவார்களாம். அமாவாசை தினத்தன்று காக்கைகளை வழிபடுவதால் சனிபகவானைத் திருப்தி படுத்தியதாகவும் கருதுகிறார்கள். எமதர்ம ராஜன் காக்கை வடிவம் எடுத்து மனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின் நிலையை அறிவாராம். அதனால் காக்கைக்கு உணவு அளித்தால் எமன் மகிழ்வாராம்.

காக வடிவத்தில் முன்னோர்கள்:

ஆடி அமாவாசை தினம் வீட்டில் உணவு சமைத்து முன்னோர்களுக்கு படையலிட்டு காகத்திற்கு வைத்து விட்டு அனைவரும் சாப்பிடுவது நல்லது. சனீஸ்வர பகவானின் வாகனமான காகம் எமலோகத்தின் வாசலில் இருக்குமென்றும், எமனின் தூதுவனான காகத்துக்கு சாதம் வைத்தால் நமது முன்னோர்கள் திருப்தியும் மகிழ்ச்சியும் அடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

காகம் சாப்பிட வேண்டும்:

காகம் சாதத்தை எடுக்காவிட்டால், முன்னோர்களுக்கு ஏதோ மனக்குறை இருப்பதாக கருதுவது மக்களின் நம்பிக்கை. முன்னோர்களின் படத்தின் முன்பாக சென்று மானசீகமாக பேசி தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டு சாதம் படைக்கவேண்டும். ஆடி அமாவாசையன்று முன்னோரை நினைத்து வழிபடுவோம். காகத்திற்கு உணவு படைத்து அவர்களது ஆசியை நாம் பெறுவோம்.

Related posts

Leave a Comment