November 27, 2022
டிப்ஸ்

விரைவில் மாதவிடாய் வரவழைக்க டிப்ஸ் !!!

இந்த நவீன காலத்தில் உணவு பழக்கவழக்கங்களினாலும் மேலும் சில காரணங்களால் பெண்களுக்கு சரியான நாள்களில் மாதவிடாய் வருவதில்லை. அதனை இயற்கை உணவு முறையில் எப்படி வரவழைப்பது என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

உடலில் உஷ்ணத்தை உருவாக்கும் உணவுகளை அதிகமாக உட்கொண்டால் உங்கள் மாதவிடாயை விரைவில் வர வைக்க முடியும். விரைவில் மாதவிடாய் வரவழைக்க நாம் சாப்பிட வேண்டிய உணவு வகைகளை இங்கு பார்ப்போம்.

மாதுளை:

மாதவிடாய் வருவதற்கு சில நாட்களுக்கு முன்பே மாதுளைப் பழ சாற்றை ஒரு நாளைக்கு மூன்று முறை அல்லது நல்லது நான்கு முறை குடித்தால் மாதவிடாய் சுழற்சி சீக்கிரம் ஏற்பட்டு விரைவில் வந்துவிடும்.

ஓமம் :

நமது சமயலறையில் எப்போதும் இருக்கும் ஒரு பொருள் தான் ஓமம். மாதவிடாயை எளிதில் வரவழைக்க இந்த ஓம விதைகளை தண்ணீரில் ஊறவைத்து சில நாட்களுக்கு முன்பே ஒரு டம்ளர் குடிப்பது வந்தால் உங்கள் மாதவிடாயை சீக்கிரத்தில் வரவழைக்க உதவு புரியும்.

பூசணிக்காய்:

பூசணிக்காயை ஜூஸ் செய்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். ஏனென்றால் பூசணிக்காயில் இருக்கும் கேரோட்டின் மாதவிடாய் சுழ்ற்சியை எளிதில் வரவழைக்க உதவி புரியும்.

பப்பாளி:

பப்பாளியில் அதிக அளவில் சத்துக்கள் இருக்கின்றன. இந்த சத்துகள் மாதவிடாய் நேரங்களில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து ஆரோக்கியத்தை தரும். மேலும் இது உடலில் அதிக வெப்பத்தை உருவாக்கி மாதவிடாயை விரைவில் வரவழைக்க மிகவும் உதவுகிறது.

கேரட்:

கேரட்டுகள் அதிகமாக சாப்பிடலாம் அல்லது கேரட்டை ஜூஸ் செய்து ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறைகள் குடித்து வந்தால் சீக்கிரத்தில் மாதவிடாய் வந்து விடும். ஏனென்றால் கேரட்டில் உள்ள கேரோட்டின் ஈஸ்டிரோஜன் உற்பத்தியை ஊக்குவித்து அதன் மூலம் மாதவிடாய் சுழ்ற்சியை விரைவில் வரவழைக்கும்.

எள் :

எள் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரக்கூடிய ஒன்று. இந்த எள் விதையை வெல்லத்துடன் சேர்த்து, மாதவிடாய் வருவதற்கு பதினைந்து நாட் களுக்கு முன் சாப்பிட்டால் விரைவில் மாதவிடாய் வந்து விடும்.

மஞ்சள்:

சிறிதளவு மஞ்சள் தூளை கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து காலையில் மற்றும் மாலையில் தினமும் மாதவிடாய் வரும் தேதிக்கு 15 நாட்களுக்கு முன் அருந்தி வந்தால் உங்கள் மாதவிடாய் 5 நாட்களுக்கு முன்பே வரும்.

அன்னாசி பழம்:

அன்னாசி பழம் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரக்கூடிய ஒன்று. இது உடலில் அதிக அளவு வெப்பத்தை தூண்டக் கூடிய ஒரு சிறந்த பழத்தில் ஒன்றாகும். அது விரைவில் மாதவிடாய் வரவழைக்க உதவி புரிகிறது.

Related posts

Leave a Comment