எவ்வளவுதான் உழைத்தாலும் வீட்டில் பணம் தங்காமல், தரித்திரம் தலைவிரித்தாடுகிறது என்று இருப்பவர்களா, இதனை முழுமையாக படித்து செல்வம் குறைவதின் அறிகுறிகளை இதன்மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.
1. கழுவப்படாத எச்சில் மற்றும் சமையல் பாத்திரங்களை அதிக நேரம் அப்படியே கழுவாமல் வைத்திருப்பது.
2. தலைமுடி வீட்டில் தரையிலே உலாவருவது.
3. வீட்டில் பெண்கள் விளக்கேற்றாமல் ஆண்கள் விளக்கேற்றுவது
4. சூரிய மறைவுக்குப்பின் வீட்டை பெருக்குவது மற்றும் துடைப்பது.
5. சூரியன் அஸ்தமித்த பின்பும், வீட்டில் தூங்குவது.
6. எச்சில் பொருட்கள், பாத்திரங்கள் மற்றும் காஃபி குடித்த கப்புகள் ஆங்காங்கே இருப்பது.
7. அதிக நேரம் ஈரத் துணிகள் போட்டு வைப்பது.
8. உப்பு, பால், சர்க்கரை ஆகியவற்றை சுத்தமாக தீரும் வரை வாங்காமல் இருப்பது. மீண்டும் வாங்காமல் அது வைத்திருந்த பாத்திரங்களை கழுவி வைப்பது.
9. வீட்டில் குழாயில் தண்ணீர் சொட்டுவது.
10. சுவற்றில் ஈரம் தங்குவது.
11. உணவுப் பொருட்கள் வீணடிப்பது.
12. குறைந்த பட்சம் வெளிச்சம் இல்லாமல், மின்சாரம் சேமிப்பதாக, வெளிச்சங்களை குறைப்பது.
13. வீட்டில் செல் (கரையான்) சேருவது.
15. படுக்கையையும், பூஜை பொருட்களையும் வேலையாட்களைக் கொண்டு சுத்தம் செய்வது.
16. வாசலில் செருப்பு மற்றும் துடைப்பம் போன்றவற்றால் அலங்கோலப்படுத்தி வைத்திருப்பது.
17. இல்லை இல்லை வேண்டாம் வேண்டாம் வராது வராது போன்ற வார்த்தைகளை அதிகம் உச்சரிப்பது.
18. வீட்டில் ஒட்டடைகள் சேருவது.
இவை போன்ற நாம் செய்யும் தவறான செயல்களை தவிர்த்து வந்தால் செல்வம் குறையாமல் சேரும், நிலைத்து நிற்கும். எனவே நீங்களும் இந்த தவறுகளை செய்யாமல் இருந்தால், வாழ்வை செழிப்புள்ளதாக, செல்வ வளம் மிகுந்ததாக மாற்றி கொள்ளலாம்.