ராசிபலன்

இன்று வெள்ளிக்கிழமை செப்டம்பர் 02 – 09 – 2022 – இன்றைய ராசி பலன்கள்:

மேஷம்:

இன்று உங்களுக்கு காரிய அனுகூலமான நாள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் வீண் செலவுகளும் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மன கசப்புகள் நீங்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் அனுகூலம் உண்டாகும். விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண் – 1

ரிஷபம்:

இன்று நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். காரியங்கள் ஆதாயம் தருவதாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண் – 9

மிதுனம்:

இன்று நீஙகள் சிந்தித்து செயல்படவேண்டிய நாள். தாய்வழி உறவினர்கள் மூலம் எதிர் பார்த்த காரியம் இழுபறியாகும். பிள்ளைகளின் பிடிவாதம் சற்று கோபத்தை ஏற்படுத்தினாலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. அரசாங்க விவகாரங்களில் பொறுமை அவசியம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவான அணுகுமுறை தேவை.

அதிர்ஷ்ட எண் – 7

கடகம்:

இன்று புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். இளைய சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். தாயாரின் விருப்பத்தை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் எதிர்பார்த்ததைவிட கூடுதலாகக் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் – 1

சிம்மம்:

இன்று அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும். சகோதர்களால் சில சங்கடங்களைச் சமாளிக்க வேண்டியிருக்கும். உறவினர்களுடன் பேசும்போது வீண் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.

அதிர்ஷ்ட எண் – 9

கன்னி:

இன்று உங்களுக்கு உற்சாகமான நாள். ஆனால், புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருக்கவும். எதிர்பாராத வேலைச்சுமையின் காரணமாக சற்று சோர்வு உண்டாகும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.

அதிர்ஷ்ட எண் – 7

துலாம்:

இன்று உங்கள் மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். சிலருக்கு திடீர் பணவரவுக்கும் எதிர்பாராத செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. உறவினர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். தாய்வழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பக்குவமாகச் சமாளித்து விடுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்களாலும் பங்குதாரர்களாலும் செலவுகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண் – 1

விருச்சிகம்:

இன்று உங்கள் காரியங்கள் அனுகூலமாக முடியும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவாக இருப்பார். கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போல் இருந்தாலும், பணியாளர்கள் வகையில் செலவுகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண் – 2

தனுசு:

இன்று நீங்கள் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். தந்தை வழியில் அனுகூலப் பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் உங்கள் அலோசனைக்கு மிகுந்த முக்கியத்துவம் கிடைக்கும். பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் – 8

மகரம்:

இன்று நீங்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றும் வகையில் சற்று அலைச்சல் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்கும். அவரிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும்.

அதிர்ஷ்ட எண் – 8

கும்பம்:

இன்று நீங்கள் புதிய முயற்சியில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். தாய்வழி உறவுகளால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். அரசாங்கக் காரியங்கள் இழுபறியாகும். மற்றவர்களுடன் பேசும்போது பதற்றம் வேண்டாம். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டா லும் பாதிப்பு இருக்காது.

அதிர்ஷ்ட எண் – 6

மீனம்:

அதிகரிக்கும் செலவுகளால் கையிருப்பு குறையும். கணவன்பி மனைவிக் கிடையே கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் கனிவாக நடந்துகொள்வது அவசியம்.

அதிர்ஷ்ட எண் – 4

Related posts

Leave a Comment