September 28, 2022
ராசிபலன்

இன்று வெள்ளிக்கிழமை செப்டம்பர் 23 – 09 – 2022 – இன்றைய ராசி பலன்கள்:

மேஷம்:

இன்று நீங்கள் புதுமை படைக்கும் நாள். குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். வேலையில் சக ஊழியர்களால் ஆதாயம் உண்டு. ‌

அதிர்ஷ்ட எண் – 6

ரிஷபம்:

இன்று நன்மை கிட்டும் நாள். எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். சகோதரி உதவுவார்‌. பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தாயாருக்கு வீண் டென்ஷன் வந்துப்போகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். வேலையில் சக ஊழியர்களால் ஆதாயம் உண்டு.

அதிர்ஷ்ட எண் – 5

மிதுனம்:

இன்று நீங்கள் மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடுகளைக்கட்டும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். வேலையில் பாராட்டப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட எண் – 3

கடகம்:

இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாள். கணவன் மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். வேலையில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் – 7

சிம்மம்:

இன்று நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள். ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலரது விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். யாரை நம்புவது என்கிற குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பினால் லாபம் குறையும். வேலையில் ரகசியங்களை வெளியிட வேண்டாம்.

அதிர்ஷ்ட எண் – 5

கன்னி:

இன்று அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். வேலையில் வேலைச்சுமையால் சோர்வு அடைவீர்கள்.

அதிர்ஷ்ட எண் – 4

துலாம்:

இன்று உங்கள் மதிப்புக் கூடும் நாள். தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வேலையில் அதிகாரிகள் முன் வைத்த கோரிக்கைகள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட எண் – 6

விருச்சிகம்:

இன்று உங்கள் முயற்சியால் முன்னேறும் நாள். உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். உறவினர் நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். வேலையில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும்.

அதிர்ஷ்ட எண் – 8

தனுசு:

இன்று நீங்கள் புது அத்தியாயம் தொடங்கும் நாள். இதுவரை இருந்த சோர்வு அசதி நீங்கி உற்சாகம் அடைவீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். அறை குறையாக நின்ற வேலைகள் முடியும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். வேலையில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண் – 5

மகரம்:

இன்று உங்களுக்கு சகிப்புத்தன்மை தேவைப்படும் நாள். சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். யாருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வேலையில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டியிருக்கும்.

அதிர்ஷ்ட எண் – 5

கும்பம்:

இன்று திறமைகள் தேவைப்படும் நாள். உங்களின் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதரர்களின் அரவணைப்பு அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். அலுவலகத்தில் மரியாதை கூடும்.

அதிர்ஷ்ட எண் – 3

மீனம்:

இன்று உங்களுக்கு திடீர் யோகம் கிட்டும் நாள். ராஜதந்திரமாக செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். உறவினர் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் தந்திரத்தால் லாபத்தை அதிகரிப்பீர்கள். வேலையில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள்.

அதிர்ஷ்ட எண் – 9

Related posts

Leave a Comment